என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மீது லாரி மோதி தொழிலாளி படுகாயம்
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம், (42) இவர் நேற்று மாலை தனது பைக்கில் கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்றார்.
அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி அருணாச்சலம் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கண்டெய்னர் லாரிக்கு அடியில் பைக் சிக்கி நொறுங்கியது.
படுகாயம் அடைந்த அருணாச்சலத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்டெய்னர் லாரியின் அடியில் சிக்கி இருந்த வாகனத்தை மீட்டு பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






