என் மலர்
வேலூர்
- போலீசாரை அலைக்கழித்தது யார்? விசாரணை
- ஏராளமானோர் குவிந்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி அம்பேத்கர் காலனியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு லத்தேரி பஸ் நிலையத்தில் உள்ள ஜவுளி கடைக்கு சென்று அங்கு இருந்த கடையின் உரிமையாளர் பாபு என்பவரிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முறியதால் பாபு மற்றும் அவரது நண்பர் சுதாகர் ஆகியோருக்கு கத்தி குத்து விழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய வாலிபரை தேடி வந்தனர்.இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வாலிபரை கொலை செய்து வேலூர் விருதம்பட்டு பாலாற்று பகுதியில் கை, கால் தலையை துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி, விருதம்பட்டு மற்றும் தனிப்படை போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே விருதம்பட்டு பாலாற்று பகுதிக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் ஆற்றின் ஓரத்தில் உள்ள சுடுகாடு, பாலாறு பாலம் ஆகிய பகுதிகளில் வாலிபரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆற்றில் இறங்கியும் ஆற்றில் உள்ள செடி, கொடி, புதர்கள் மண்டி கிடந்த பகுதிகளிலும் உடல் ஏதேனும் கிடக்கிறதா? என்று தேடிப்பார்த்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனும் அங்கு விரைந்து வந்தார். அங்கு அவர் சுடுகாடு மற்றும் பாலாற்று பகுதியில் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில்:-
வாலிபரின் செல்போன் டவர் ஒடுகத்தூர் பகுதியில் காண்பித்தது. சிறிது நேரத்தில் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பினோம்.
இதனால் போலீசார் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.பாலாற்றில் ஏராளமான போலீசார் உடலை தேடிய சம்பவம் அந்தப் பகுதியில் பரவியது. எனவே அப்பகுதியை சேர்ந்த மக்களும், பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பலர் தங்களது வாகன ங்களை பாலத்தின் மீது நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்தனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அங்கு வேடிக்கை பார்த்தவர்களை விரட்டினர்.
தேடுதல் முடிவில் அங்கு தலையோ, கை, கால்களோ, உடலோ எதுவும் கிடைக்கவில்லை. யாரோ வேண்டுமென்றே வதந்தியை பரப்பியது தெரியவந்தது.
தவறான தகவலை பரப்பி போலீசாரை அலைக்கழிக்க விட்டது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பரிசு வழங்கினார்
- ஏரளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
தமிழியக்கம் சார்பில் தமிழர் திருநாள், திருவள்ளுவர் தின விழா வேலூரில் நடைபெற் றது. விழாவிற்கு தமிழியக்க நிறுவனரும்,வி.ஐ.டி. வேந்தரு மான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
விழாவை டார்லிங் குழுமத்தலைவர் வெங்கடசுப்பு தொடங்கி வைத்தார். தமிழி யக்க பொது ச்செயலாளர் அப்துல்காதர், மாநில செய லாளர் சுகுமார், வட தமிழ் நாடு ஒருங்கிணை ப்பாளர் வணங்காமுடி, பொருளாளர் பதுமனார் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.
அதை த்தொடர்ந்து அப் துல்காதர் தலைமையில் 'சுழலும் சொல்லரங்கம்' நடை பெற்றது. விழாவில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சு, கவிதை, கட்டுரை, பாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வி.ஐ.டி. துணைத்தலைவர்ஜி.வி.செல்வம் பரிசு வழங்கி பேசினார்.
வேலூர் மேயர் சுஜாதா 'தாங்கி பிடிப்போம் தங்க தமிழ்குடை' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
விழாவில் வக்கீல் பாலச்சந் தர், திருநாவுக்கரசு, அணைக் கட்டு சாரதி, தொழிலதிபர். வாலாஜா குலோப் ஷெரீப், தமிழியக்க மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள். கவிஞர் கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழியக்க மாவட்ட செயலாளர்
ஜெயகர், மாநகர செயலாளர் ராஜசேகர், மாவட்ட இணைச் செயலாளர் அன்பு, பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.
- தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் பீதி
- சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படாததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ்ஸில் கூட்டமாக பயணிகள் ஏறும்போது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோத கும்பல் நைசாக பயணிகளிடம் இருந்து செல்போன், மணி பர்ஸ் உள்ளிட்டவைகளை திருடி செல்கின்றனர்.
அவசரத்தில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் இது குறித்து போலீசில் புகார் செய்வது இல்லை.
இந்த நிலையில் இன்று காலை பஸ் நிலையத்திற்கு வந்த ஒருவரின் செல்போனை மர்ம கும்பல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடி சென்று விட்டனர்.
புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்காக போடப்பட்ட இருக்கைகளில் சமூக விரோதிகள் அமர்ந்து கொள்வது படுத்துக் கொள்வது என ஆக்கிரமிப்பு செய்வதால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் நின்று கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய பஸ் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே பயணிகளில் உடைமைகளை பாதுகாக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். ஏற்கனவே இருந்த புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைத்து நிரந்தரமாக போலீசார் பணியாற்றி வந்தனர்.
ஆனால் தற்போது புதிய பஸ் நிலையத்திற்குள் போலீசார் யாரும் வந்து வராததால் சமூக விரோத கும்பல் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற செயல்களை தடுக்க வேண்டும் சமூக விரோத கும்பலை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
- 400 பேர் பங்கேற்பு
வேலூர்:
வேலூர் காவல் சரகத்திற்கு உட் பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற 2-ம் நிலை காவலர்க ளுக்கான எழுத்து தேர்வில் 1,059 பேர் உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
இவர்களுக்கான உடற்தகுதிதேர்வு வேலூர் நேதாஜி மைதானத்தில் இன்று தொடங்கி வரும் 11-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் முதற் கட்ட உடற்தகுதி தேர்வு இன்று தொடங்கி 8-ந்தேதி வரையும், 2-ம் கட்ட தேர்வு 9-ந் தேதி முதல் 11 -ந் தேதி வரையும் நடக்கிறது. இன்று காலை அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற் கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு நடந்தது.
இதற்காக வருபவர்கள் அழைப்புக்கடிதம், ஏதேனும் ஓர் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கொண்டு வந்து இருந்தனர்.
ஒரு நாளைக்கு 400 பேருக்கு உடற்தகுதி தேர் வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2-ம் நிலை காவலர் உடற்த குதி தேர்வுக்கான பணிகளில் டிஐஜி முத்துசாமி தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வை யில் 120 போலீசார் ஈடுபட்டனர்.
காவலர் தேர்வு முழுவதும் கேம ராவில் பதிவு செய்யப்பட்டது. இதையொட்டி நேதாஜி மைதானத்தில் பேரிகார்டுகள் அமைக் கப்பட்டு உடற்தகுதி தேர்வுக்கு வந்தவர்களை உயரம் அளவீடு செய்தல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண் டுதல் உள்ளிட்டவைகளில் பங்கேற்க செய்தனர்.
உடல் தகுதி தேர்வில் பங்கேற்க நேற்று இரவு முதலே ஸ்டேடியத்திற்கு வெளியே வாலிபர்கள் காத்திருந்து உடல் தகுதி தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
- அன்னதானம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் உத்திர காவிரி ஆற்றங்கரையில் கெங்கை யம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சுயம்பு முனீஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த 2-ம் தேதி காலை 5 மணிக்கு ஆசார்ய வசணம், புண்யாஹுதி விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கி யாகசாலை பூஜையானது கடந்த 4 நாட்களில் ஏழு கால பூஜைகளுடன் நடைபெற்றது. மேலும் யாக சாலையில் 508 கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருந்தது.
யாகசாலை பூஜைக ளுக்கென பிரத்தி யேகமாக வரவழை க்கப்பட்ட 1008 வகையான ஹோம திரவியங்களும் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் முனிஸ்வரருக்கு கலச அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனையடுத்து மூல விக்ரகத்திற்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. மேலும் பக்தர்கள் மீது கலசபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது.
விழாவில் ஒடுகத்தூர் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக் திரண்டு வந்தனர். மேலும் பக்தருக்கு கோவில் நிர்வாகத்தின் மூலம் காலை முதலே அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஒருவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த பூட்டு தாக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுந்தரம் (வயது 65) மற்றும் ரவி (45). ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் ஜதர்புரத்தில் உள்ள உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது க கிருஷ்ணகிரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கிச் சென்ற கார் இருசக்கர வாகனம் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.
இதில் பைக்கில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தனர். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுந்தரம் பரிதாபமாக இறந்தார். ரவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசில் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே உள்ள மூலைகேட் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் அடி உயரமுள்ள வேலாடும் தனிகை மலை அமைந்துள்ளது. இதில் சுமார் 500 ஆண்டுகளாக ஸ்ரீ பாலமுருகன் அமைந்து அனைவருக்கும் அருள்பாளித்து வருகின்றார்.
இன்னிலையில் இன்று தைப்பூசம் திருக்கல்யாணம் உற்சவத்தை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி முதலே விழாவானது விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. மேலும் நேற்று தைப்பூசம் திருக்கல்யாணம் என்பதால் இதில் காலை 9 மணிக்கு டாக்டர் கவிஞர் வாரியார் தாசன் அவர்களால் கந்தன் காலடியை வணங்கினான் என்ற சிறப்பு சொற்ப்பொழிவு நடைப்பெற்றது.
பின்பு முருகன் வள்ளிதெய்வானை திருக்கல்யாணம் உற்சவம் நடைப்பெற்றது.இதனையடுத்து நடைப்பெற்ற மாலை மாற்றும் நிகழ்ச்சியானது அனைவரையும் கவரும் வகையில் சிறப்பாக நடைப்பெற்றது.
திருக்கல்யாணத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நடைப்பாதையாக வருகைத்தரும் பக்தர்கள் வரவேற்க கண்ணன், கிருஷ்னன், செல்வராஜி, குமார், பாலு, சங்கர், பண்ணீர்செல்வம், சீனிவாசன், இராஜாராம், குமார், வெங்கடேசன் ஆகிய கோயில் நிர்வாகிகள் சார்பில் சிறப்பு பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
மலை முழுவதும் இருந்த பக்தர்களின் கூட்டத்தை பாதுகாக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு இருந்தனர்.
- தொடக்க கல்வி படித்த பள்ளியை நினைவில் கொண்டிருந்த வாணிஜெயராம் 2015-ம் ஆண்டு பள்ளிக்கு வருகை தந்தார்.
- படித்த வகுப்பறையில் உள்ள கரும்பலகையிலும், பழைய நினைவுகளை எழுத்து வடிவில் பதிவு செய்தார்.
வேலூர்:
சினிமா பின்னணி பாடகிகளில் தனக்கென தனி முத்திரையை பதித்த வாணி ஜெயராம். 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' என்ற பாடல் மூலமாக, மக்களின் மனங்களை கொள்ளை கொண்டு தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டவர். அதோடு, சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றவர்.
இவர், வேலுார் கொசப்பேட்டை நல்லெண்ண பட்டறை தெருவில், தன் சிறு வயதில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அந்த பகுதியில் உள்ள ஈவெரா அரசு பள்ளியில் படித்தார். கலைவாணி என்ற பெயருடன் தன் ஆரம்பக்கல்வியை பயின்றவர், பின்னாளில் இசைக்குயில் வாணி ஜெயராமாக அழைக்கப்பட்டார்.
தான் தொடக்க கல்வி படித்த பள்ளியை நினைவில் கொண்டிருந்த வாணிஜெயராம், 2015-ம் ஆண்டு பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது, பள்ளி வளாகத்தில் விளையாடிய இடங்கள், தான் படித்த வகுப்பறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு, தன் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
அதோடு தான் படித்த வகுப்பறையில் உள்ள கரும்பலகையிலும், பழைய நினைவுகளை எழுத்து வடிவில் பதிவு செய்தார்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு ஆசிரியர்களுடன் குரூப் படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தார்.
மக்களின் மனதை தன் இனிய குரலால் மயக்கிய கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைந்தாலும், இந்த பள்ளியில் படித்த அவரின் சிறப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும்.
- காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் திருப்பத்தூருக்கு இணைப்பு வழங்கப்படுவதால் நடவடிக்கை
- குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தகவல்
வேலூர்:
வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேட்டூரில் இருந்து காவேரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மேட்டூரில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 759 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க பிராதான குழாயில் இணைப்பு வழங்க பணி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பணியை தொடங்கி உள்ளது. இதனால் ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு குடிநீர் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுவரை உள்ளூரில் கிடைக்கும் குடிநீர் ஆதாரத்தை வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த பின்னர் வழக்கம் போல் குடிநீர் சப்ளை செய்யப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாளை முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது
- டி- சர்ட் அணிந்து வர அனுமதி மறுப்பு
வேலுார்:
தமிழ்நாடு சீருடைப்ப ணியாளர் தேர்வாணையம் சார்பில், 2ம் நிலை போலீ சார், சிறை போலீசார் மற் றும் தீயணைப்பாளர் ஆகி யவற்றில் 3 ஆயிரத்து 552 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி எழுத்துத்தேர்வு நடந்தது.
இதில், தமிழகம் முழு வதும் 2 லட்சத்து 99 ஆயி ரத்து 820 பேர் பங்கேற்ற னர். வேலுார்மா வட்டத்தில் 12 ஆயிரத்து 577 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, இந்த தேர்வின் முடிவுகள், கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி வெளியானது.
இதை யடுத்து, எழுத் துத்தேர்வில் தகுதி பெற்ற வர்களுக்கு உடற்தகுதித் தேர்வு, நாளை முதல் வரும் 11ம் தேதி வரை நடக்கி றது. இதற்காக, ஒரு காலிப் பணியிடத்துக்கு 5 பேர் வீதம் என்ற அடிப்படை யில், தகுதி பெற்றவர்க ளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது.
அதன்படி, வேலுார் நேதாஜி மைதானத்தில் நடக்கும் உடற்தகுதித் தேர் வில், மொத்தம் ஆயிரத்து 300-க்கும் அதிகமான ஆண் கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிக்கு வரும்போது, அழைப்புக் கடிதம், ஏதே னும் ஓர் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட் டையையும் கொண்டு வர வேண்டும். மேலும் அழைப்பு கடிதத்தில் குறிப் பிட்டுள்ள அசல் சான்றி தழ்கள் மற்றும் அவற்றின் நகல் ஒன்றையும் கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுகளில் ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கொண்டு கலந்துகொள்ள
விரும்பினால் ஒரே வண் ணம் கொண்ட ஷார்ட்ஸ் மற்றும் எவ்வித எழுத்துக் களும் படங்களும் இல் லாத டி-சர்ட் அணிந்து வர வேண்டும். எவ்வித பயிற்சி மையத்தின் அடை யாளமோ அல்லது விண் ணப்பதாரர்கள் எவ்வித சின்னமோ கொண்ட டி- சர்ட் அணிந்து கொண்டு வரும் பட்சத்தில் உடற் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.
அனுமதி இந்த தேர்வுக்கு வரும் ஆண் விண்ணப்பதாரர்கள் அனைவரும் தவறாமல் தங்களது தலைமுடியை சீராக திருத்தம் செய்து வர வேண்டும். விண்ணப்ப தாரர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் மற்றும் ெகாரோனா விதி முறைகளை பின்பற்ற வேண்டும். விண்ணப்ப தாரர்கள் அனைவரும் மேற் கண்ட அறிவுரைகளை பின்பற்றி தேர்வு மையத் துக்கு வரும்படி தெரிவிக் கப்பட்டுள்ளது.
- அணைக்கட்டு கொட்டாவூரில் எருது விடும் விழா நடந்தது
- மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.
சுமார் 300 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.
திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, போன்ற பல்வேறு மாவட்டங்களில், இருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டன.
வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த விழாவை காண ஒடுகத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில், குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த காளைக்கு மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும், மாடு விடும் திருவிழாவில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 3 பேர் கை, கால் முறிவு ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காகவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு நடந்தது
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
வேலூர்:
இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் வேலூர் கோட்டை அருகிலிருந்து வேலூர் மக்கான் சிக்னலில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள், பணியாளர்கள் ஜுனியர் ரெட்கிராஸ் மாணவர்கள், பொதுமக்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம், ைசக்கிள் போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இதில் வேலூர் சரக டி.ஐஜி முத்துசாமி, பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம், எஸ்.பி. ராஜேஷ் கண்ணா, பல்க்கலைகழக பதிவாளர் விஜயராகவன், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் மாரத்தான் போட்டி வேலூரில் துவங்கி காட்பாடி பிரம்மபுரத்தில் நிறைவு பெற்றது.
சைக்கிள் போட்டி வேலூரில் தொடங்கி சேர்க்காட்டில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் நிறைவுபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.






