என் மலர்tooltip icon

    வேலூர்

    • காட்பாடி அரசு பள்ளியில் நடந்தது
    • ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்

    வேலூர்:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும், 52 ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட பொதுமக்களுக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குதல், தேவையான மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், படிப்பு உதவித்தொகை விண்ணப்பித்தல், பஸ் பயண அட்டை ரெயில் பயண அட்டை மற்றும் 18 துறைகள் மூலம் உதவிகள் வழங்குவதற்காகவும் கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகளையும் செய்வதற்கான இந்த முகாம் நடைபெற்றது.

    இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் க ஜோதிஸ்வரபிள்ளை, காட்பாடி சிறப்பு தாசில்தார் வேண்டா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, காட்பாடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சாமுண்டீஸ்வரி, ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களும் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட பொதுமக்களும் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர்.

    இந்த முகாம் ஏற்கனவே வேலூர் நகரம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே வி குப்பம் ஆகிய வட்டார அளவில் நடைபெற்றுள்ளது. 5-வது வட்டாரமாக காட்பாடி வட்டார அளவில் சிறப்பு முகாம் நடைபெற்று உள்ளது.

    மேலும் கணியம்பாடி, வேலூர் புறநகர் மற்றும் அணைக்கட்டு வட்டாரங்களிலும், இம்முகமானது 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    வேலூர்:

    வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் செல்போன் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு செல்போன் டவர் அமைப்பதற்கான பணியை தொடங்க நிறுவனத்திலிருந்து ஆட்கள் வந்தனர்.

    ஆனால் பொதுமக்கள் இந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நிலத்தின் உரிமையாளர் செல்போன் டவர் அமைக்கும் பணியை கைவிடுவதாக கூறி சென்றார்.

    இந்நிலையில் இன்று மீண்டும் செல்போன் டவர் அமைக்கும் பணிக்கு ஆட்கள் வந்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஊர்பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வேலூர் சேண்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை -பெங்களூர் 6 வழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வேலூர் வடக்கு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மறியல் போராட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மொத்தம் 84 கடைகள் உள்ளது
    • கடைகளை ஏலம் விடுவதில் மாநகராட்சி தாமதம்

    வேலுார்:

    வேலுார் மாநகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தும் நோக்கிலும், பயணிகள் வசதிக்காகவும், வேலுார் புது பஸ் நிலையத்தில் தரை மற்றும் முதல் தளத் தில் 84 கடைகள் கட்டப்பட்டன.

    இவற்றின் குறைந்தபட்ச அளவு 100 சதுர அடி. இதுதவிர, பரப்பளவு அதிகமாகவும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு கட்டப்பட்ட கடைகள் பொது ஏலம் மூலம் வாடகைக்கு விட ஏற்பா டுகள் செய்யப்பட்டது. முதல்கட்டமாக இந்த கடைகளுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏலம் நடத்த மாநகராட்சி திட்டமிட்டது.

    தொடர்ந்து திட்டமிட்டு கொண்டே இருக்கும் மாநகராட்சி இன்று வரை கடைகளை ஏலம் விடவில்லை.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தில் 66-ம் எண் கடை திறக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "புதிய பஸ் நிலையத்தில் கடந்த முறை கடை வைத்திருந்தவர்கள் புதிய கடைகள் கட்டி ஏலம் விடுவதற்கு முன்னதாக தங்களுக்கு கடைகளை வாடகை விடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

    கோர்ட் உத்தரவின்படி வழக்கு தொடர்ந்தவர்க ளுக்கு குலுக்கல் முறை யில் கடைகள் ஒதுக்க, கடந்த நவம்பர் மாதம் கடைகளுக்கான குலுக்கல் நடந்தது. இதில் 4 பேர் கலந்து கொண்டனர்.

    குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

    குலுக்கலின் முடிவின்படி அருண் குமார் என்பவருக்கு தரை தளத்தில் 66-ம் எண் கடையும் மற்ற 3 பேருக்கு முதல் தளத்தில் கடையும் ஒதுக்கப்பட்டது.அருண் குமார் மட்டும் கடையை ஏற்றுக் கொண்டார்.

    மற்ற 3 பேரும் முதல் தளத்தில் கடை வேண்டாம் என்று கூறிவிட்டனர். அதன்படி அருண்குமாருக்கு கடை ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    • புதுமைப்பெண் திட்டத்தில் 2-வது கட்டமாக வழங்கப்பட்டது
    • அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தமிழ்நாட்டில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இன்று 2-வது கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை வழங்குவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    காணொளி காட்சி மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கும் 2-வது கட்டமாக கல்வி உதவித் தொகை வழங்குவதை அவர் தொடங்கி வைத்தார்.

    காட்பாடி ஆக்சிலியம் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் 2-வது கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 56 கல்லூரிகளில் படிக்கும் 1961 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
    • சட்டம் ஒழுங்கு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் சட்டம் ஒழுங்கு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்ப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் விசாரித்தார்.

    இதில் இரு பிரிவினரையும் ஆர்டிஓ முன்பு ஆஜர் படுத்தி சுமுக பேச்சு வார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்யவும், இரு பிரிவினருடைய சுமுக பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்ப டவில்லை எனில் இரு பிரிவினர்கள் மீதும் வழக்குப்பதியவும் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடத்து பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ரோந்து பணிகள் குறித்தும், குற்றச்சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், பள்ளி பகுதிகளில் பள்ளி மாணவர்கள் சென்று வரும் நேரங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்வது குறித்தும் கேட்டறிந்தார்.

    மேலும் இணைய வழி குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் குறித்தும் ஆய்வின் போது கேட்டறிந்தார்.

    இந்த திடீர் ஆய்வின் போது பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் துணை இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி சிறப்பு தனிப்பிரிவு போலீஸ் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • விண்ணப்பம் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலுார் மாவட்டத்தில் ஆதிதிராவி டர் நலத்துறை கீழ் செயல்படும் தொடக் கப்பள்ளிகளில் ஓராசியர் பள்ளிகளில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியர்களை 7,500 ரூபாய் மாத தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப் பெற்றுள்ளது.

    பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

    செட்டிக்குப்பம், கத்தாழம்பட்டு, சேக்கனூர், சத்துவாச்சாரி, பென்னாத்தூர் ஆர்.வெங்கடாபுரம், வெட்டுவாணம், கம்மசமுத்திரம், கீழுர், கவசம்பட்டு, கே.வி.குப்பம், காட்டுபுத்தூர், சோழவரம் ஆகிய தொடக்கப்பள்ளி களில் இடை நிலை ஆசிரியர் பணியிடம் தலா ஒன்று காலியாக உள்ளது.

    வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியா கவோ அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • குறைதீர்வு கூட்டத்தில் குற்றச்சாட்டு
    • மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு நடந்தது.

    கூட்டத்தில் ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 8,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது இருப்பினும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் அந்த 6 மணி நேரத்தில் மட்டும் 16 முறைகளுக்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் விளைநிலங்களுக்கு விவசாயிகளால் தண்ணீர் பாய்ச்சுவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக ஆவேசத்துடன் பேசினார்கள்.

    மேலும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விவசாயி ஒருவர் பேசுகையில்:-

    மின்சாரத்தை மும்முனை மின்சாரமாக 24 மணி நேரமும் வழங்கினால் யாரும் அதை திருடி சென்று விட மாட்டார்கள்.

    எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மும்முனை மின்சாரத்தை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதேபோன்று மேலரசம்பட்டு, கொட்டாவூர், தீர்த்தம் போன்ற மலையோர பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கடலை பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகிறது.

    இது குறித்து பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் முறையூட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    மேலும் கடன் வாங்கி பயிர் செய்யும் விவ்சாயிகள் வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் ஆவனங்களை கொடுத்தால் ஒரு ஆண்டுகள் ஆகின்றது பணம் வர அதுவரை நாங்கள் எப்படி கடனை கொடுப்பது என கூறினார்.

    இதேபோன்று பயிர்களில் நோய் தாக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து, மேலும் விவசாயிகளுக்கு என்ன என்ன உபகரனங்கள், என்ன விதைகள்.

    தற்போது உள்ளது, எதை பயிர் செய்தால் முழுமையாக லாபத்தை பெற முடியும் என வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் எடுத்து கூறினார்கள்.

    விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அணைக்கட்டு, ஒடுகத்தூர் ஆகிய சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றிருந்தனர்.

    • அணைக்கட்டு கீழ்கொத்தூரில் மாடு விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தில் 62 ம் ஆண்டு எருது விடும் விழா க்நடைப்பெற்றது.

    வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய கவுன்சிலர் கணபதி, ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் மற்றும் போலீசார் ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு காளை விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பல்வேறு பகுதிகளி லிருந்து 190 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக காளைகள் வெளி யேற்றப்பட்டது.

    விழாவை பார்க்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். குறுகிய காலத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய வேகமாக ஓடிய காளைகளின் எதிரே நின்ற வீரர்களை தூக்கி வீசியதில் 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தீபிகா தலைமை யிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    வேகமாக ஓட முயன்ற 2 காளைகள் ஓடும் பாதையில் நிலை தடுமாறி வழுக்கி விழுந்தன. இதனை உடனடியாக அந்த காளைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வெற்றி பெற்ற காளைகளுக்கு மொத்தம் 52 பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 100 க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.

    • சமூக வலைத்தளங்களில் பரவுவதால் பரபரப்பு
    • நிலத்தகராறில் மோதல்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் திமுக கவுன்சிலர் அதே பகுதியை சேர்ந்தவர் மற்றொரு திமுக பிரமுகர். இவர் அப்பகுதியில் வாகன நிறுத்தம் இடம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வாகன நிறுத்தம் இடத்திற்கு செல்லும் வழி தன்னுடையது என கூறி திமுக கவுன்சிலர் கடந்த மாதம் 27-ந் தேதி தடுப்புகளை அமைக்க பள்ளம் தோண்டினர்.

    அப்போது திமுக கவுன்சிலருக்கும், எதிர் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திமுக கவுன்சிலர் அங்கிருந்த பாறாங்கல்லை எடுத்து எதிர் தரப்பை சேர்ந்தவர் மீது வீசினார். அப்போது அவர் மீது பாறாங்கல் படாதவாறு ஒதுங்கிக் கொண்டார்.

    இதனால் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இதையடுத்து கவுன்சிலர் தரப்பினர் எதிர் தரப்பை சேர்ந்தவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து 2 தரப்பை சேர்ந்தவர்களும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் கடந்த 28-ந் தேதி புகார் செய்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் வந்ததால் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். அதன் பிறகு இரண்டு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து 2 தரப்பை சேர்ந்தவர்களும் சமாதா னமாக செல்வதாகவும் நில அளவையர் மூலம் இடத்தை அளந்து அவர் அவர்களுக்கு உண்டான இடத்தைப் பிரித்துக் கொள்வதாகவும் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கடிதம் எழுதிக் கொடுத்தனர். இதனால் போலீசார் வழக்கை வாபஸ் பெற்றனர்.

    இந்த நிலையில் எதிர்த ரப்பினரை கவுன்சிலர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • வேலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது
    • 142 பேர் பங்கேற்றனர்

    வேலூர்:

    வேலூர் ஸ்ரீவெங்க டேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த டி.வி.எஸ். நிறுவனம் சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி துணைத்த லைவர் என்.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    முதல்வர் எம்.ஞானசேகரன் வரவேற்று பேசினார். முகாமை கல்லூரி யின் தலைவர் என்.ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில், சென்னை டி.வி.எஸ். பயிற்சி மற்றும் சேவை மனிதவள மேம் பாட்டு சீனியர் அலுவலர் கணேஷ்குமார் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை தேர்வு செய்தார்.

    முகாமில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகள் 142 பங்கேற்றனர். மாண வர்களுக்கு முதலில் ஆன்லைனில் எழுத்துத்தேர்வு நடைபெற் றது. அதில், தேர்வான மாணவர்களுக்கு நேர்முக மற்றும் கலந்தாய்வு தேர்வு நடந்தது. இதில், 91 மாணவர்கள் தேர்வாகினர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.17,500 சம்பளம் வழங்கப்படும்.

    அதைத்தவிர உணவு, மருத்துவ காப் பீடு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.அருண்குமார் தெரிவித்தார்.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    வேலூர் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்பகுதி தேர்வு நேற்று தொடங்கியது.

    நேற்று முதல் நாளில் உடற்பகுதி தேர்வில் கலந்து கொள்ள 400 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. 359 பேர் உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்டனர். 41 பேர் கலந்து கொள்ளவில்லை. உடல் தகுதி தேர்வில் நேற்று ஒரே நாளில் 294 பேர் தேர்வு பெற்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில், போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2-வது நாளாக நடந்தது.

    இதில் 4 மாவட்டங்களை சேர்ந்த 400 பேர் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், அசல் சான்றிதழ் சரிபார்த்தல் உள்ளிட்டவை நடந்தது. இதையொட்டி நேதாஜி மைதானத்தில் 120-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாளை 3-வது நாளாக உடல் தகுதி தேர்வில் 259 பேர் கலந்து கொண்ட அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. முதல் கட்ட உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 2-வது கட்டமாக வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 2-வது கட்ட உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது.

    • வி.ஐ.டி. துணைத் தலைவர் சங்கர்விசுவநாதன் தொடங்கி வைத்தார்
    • மாலை நேர சிறப்பு வகுப்பு நடக்கிறது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இவ்வாண்டு பொதுத் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 150 பேருக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த மாலை நேர சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடைபெறும் நாள் வரை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழாவிற்கு குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமை தாங்கினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் ம.மனோஜ், நகரமன்ற உறுப்பினர்கள் சுமதி மகாலிங்கம், கே.விஜயன், தொழிலதிபர்கள் பொன்னம்பலம், பரத்குமார், மகாவீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எம்.கீதா வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளாக வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் சங்கர்விசுவநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ராஜேந்திரன், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் உதவி தலைமை ஆசிரியர் டி.சங்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் தலைமை ஆசிரியர் டி.எஸ். விநாயகம் செய்திருந்தார்.

    ×