search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஒரு கடை மட்டும் திறப்பு
    X

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஒரு கடை மட்டும் திறக்கப்பட்டுள்ள காட்சி.

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஒரு கடை மட்டும் திறப்பு

    • மொத்தம் 84 கடைகள் உள்ளது
    • கடைகளை ஏலம் விடுவதில் மாநகராட்சி தாமதம்

    வேலுார்:

    வேலுார் மாநகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தும் நோக்கிலும், பயணிகள் வசதிக்காகவும், வேலுார் புது பஸ் நிலையத்தில் தரை மற்றும் முதல் தளத் தில் 84 கடைகள் கட்டப்பட்டன.

    இவற்றின் குறைந்தபட்ச அளவு 100 சதுர அடி. இதுதவிர, பரப்பளவு அதிகமாகவும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு கட்டப்பட்ட கடைகள் பொது ஏலம் மூலம் வாடகைக்கு விட ஏற்பா டுகள் செய்யப்பட்டது. முதல்கட்டமாக இந்த கடைகளுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏலம் நடத்த மாநகராட்சி திட்டமிட்டது.

    தொடர்ந்து திட்டமிட்டு கொண்டே இருக்கும் மாநகராட்சி இன்று வரை கடைகளை ஏலம் விடவில்லை.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தில் 66-ம் எண் கடை திறக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "புதிய பஸ் நிலையத்தில் கடந்த முறை கடை வைத்திருந்தவர்கள் புதிய கடைகள் கட்டி ஏலம் விடுவதற்கு முன்னதாக தங்களுக்கு கடைகளை வாடகை விடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

    கோர்ட் உத்தரவின்படி வழக்கு தொடர்ந்தவர்க ளுக்கு குலுக்கல் முறை யில் கடைகள் ஒதுக்க, கடந்த நவம்பர் மாதம் கடைகளுக்கான குலுக்கல் நடந்தது. இதில் 4 பேர் கலந்து கொண்டனர்.

    குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

    குலுக்கலின் முடிவின்படி அருண் குமார் என்பவருக்கு தரை தளத்தில் 66-ம் எண் கடையும் மற்ற 3 பேருக்கு முதல் தளத்தில் கடையும் ஒதுக்கப்பட்டது.அருண் குமார் மட்டும் கடையை ஏற்றுக் கொண்டார்.

    மற்ற 3 பேரும் முதல் தளத்தில் கடை வேண்டாம் என்று கூறிவிட்டனர். அதன்படி அருண்குமாருக்கு கடை ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×