என் மலர்
வேலூர்
- 5 அடி உயரமும், 2, அரை அடி அகலம் உள்ளது
- குத்துவாளுடன் 8 அம்புகள் உடலை தைத்தவாறு மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அருகே கிருஷ்ணம்பல்லி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு அருகில் நடுகற்கள் இருப்பதையறிந்த குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ஜெயவேல் மற்றும் வரலாற்று பிரிவு மாணவர்கள் சந்துரு, கோகுல், சதீஷ் பாரதி, சக்திவேல் ஆகியோர் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து ஜெயவேல் கூறியதாவது:-
இந்த கள ஆய்வில் 2 ஆனிரை நடு கற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 9 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட ஒரு ஆனிரை மீட்பு நடுகல், மற்றொன்று 5 அடி உயரமும், 22 அடி அகலமும் கொண்டுள்ளது. பல்லவர் காலத்தில் தொண்டை மண்டலமானது 24 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது.
பல்லவர்களை வீழ்த்திய சோழர்கள் தொண்டை மண்டலத்தை கைப்பற்றி ஜெயங்கொண்ட சோழபுரம் என பெயர் மாற்றி பிற்காலங்களில் அக்கோட் டங்களை வளநாடுகள் என்று அழைத்தனர். இந்த 24 கோட்டங்களில் படுவூர் கோட்டமும் ஒன்றாகும்.
அப்போதைய படுவூர் கோட்டத்திற்கு உட்பட்டது செண்டத்தூர். ஆநிரை மீட்பு நடுக்கல் 8 வரிகள் கொண்ட வாசகத்தில் சக ஆண்டு 932 என்று கூறுவதுடன் படுவூர் கோட்டத்தில் அடையாறு நாட்டின் ஸ்ரீமா விலி வானவராயர் ஆட்சிக் காலத்தில் மறைமங்கலத்திலி ருந்து, போர்ப்படை தளபதி தண்டிக்காமானார் என்பவர்
இண்டத்தூரில் எருமைகளை கவர்ந்து செல்ல வந்த போது நடைபெற்ற போரில் உடலில் 8 அம்புகள் தைத்து வீர மரணம் அடைந்த செண்டத்தூ ரின் வீரனுக்காக எழுப்பப் பட்ட ஆனி ரை மீட்பு நடுகல் என்று கூறுகிறது.
இந்த நடு கல்லில் போர் வீரன் வலது கையில் வாளேந் தியும், இடது கையில் வில் லேந்தியும், இடுப்பில் உடை உரையில் குத்து வாளுடன் 8 அம்புகள் உடலை தைத்த வாறு மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர்.
இதன் அருகே மற் றொரு நடு கல்லானது 5 அடி உயரமும், 2, அரை அடி அகலமும் கொண்ட நினைவு கல்லில் நான்கு வரி வாசகங்கள் சரி வர கண்டறிய முடியாதநிலை யில் காணப்படுவதாகவும், அம்புகள் உடலில் தைத்த நிலையில் வீரனின் வலது கையில் வாளும், இடது கையில் வில்லேந்தியவாறு நிற்கும் காட்சி தத்ரூபமாக காணப்படுகிறது. இந்த 2 ஆனிரை நடு கற்களில் ஒருவர் படை தளபதியாகவும், மற் றொருவர் போர் வீரராக க இருந்துள்ளனர். செண்டத்தூரில் எருமைகள் கூட்டத்தை கவர்ந்து சென்று தன் நாட் டில் வளமைப்படுத்தி கொள் வதற்காக இது ஒரு வீர போராக கருதப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பெரியார் நகர் கடையில் இருந்து வெளியே வந்த ராமகிருஷ்ணன் சாலையை கடக்க முயன்றார்.
- இறைவன்காடு பகுதியில் பதுங்கியிருந்த ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலுார்:
வேலுார் அடுத்த சித்தேரியை சேர்ந்தவர் மோகன் மகன் பிரகாஷ் (26). கட்டட மேஸ்திரி. அந்த பகுதி பாமக மண்டல செயலாளராக இருந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (45). இவர் பெரியார் நகரில் டிஜிட்டல் போர்டு கடை வைத்துள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாமகவில் இருந்து விலகிய ராமகிருஷ்ணன் திமுகவில் இணைந்தார். சித்தேரி கோயில் திருவிழாவில் அன்னதானம் வழங்கியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மேலும் நடந்து முடிந்த மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பிரகாஷ் பைக்கில் தொரப்பாடியில் இருந்து பெண்கள் சிறைச்சாலை வழியாக சித்தேரிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெரியார் நகர் கடையில் இருந்து வெளியே வந்த ராமகிருஷ்ணன் சாலையை கடக்க முயன்றார். பிரகாஷ் அவரை மோதுவது போல் சென்று வாகனத்தை நிறுத்தினார்.
ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் பிரகாஷ் தன்னை கொலை செய்ய வந்ததாக எண்ணிய ராமகிருஷ்ணன் அருகே இருந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கினார்.
இதில் பிரகாஷ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியோடினார்.
சற்று தொலைவில் பிரகாஷின் தந்தை மோகன் என்பவர் சென்றுள்ளார். அவரது கண் எதிரிலே ராமகிருஷ்ணன் தாக்கியதில் மகன் சுருண்டு விழுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் ஓடிச் சென்று பார்த்துள்ளார். அதற்குள் அவர் இறந்துவிட்டதைப் பார்த்து கதறி அழுதார்.
கொலை சம்பவம் குறித்து அறிந்த வேலுார் டி.எஸ்.பி திருநாவுக்கரசு, பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில் குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இறைவன்காடு பகுதியில் பதுங்கியிருந்த ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமகிருஷ்ணன் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை போலீசார் டிரேஸ் செய்தபோது அவர் அல்லாபுரம், இறைவன்காடு, புளிமேடு ஆகிய இடங்களில் இருப்பதாக சிக்னல் காட்டியது.
இதைத்தொடர்ந்து தனிப் படையினர் அந்த பகுதிகளில் அதிரடியாக தேடுதல் வேட்டை நடத்தி இரவு 8 மணியளவில் ராமகிருஷ்ணனை கைது செய்தனர். கொலை நடந்த 3 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ், ராமகிருஷ்ணன் இருவரும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு நடந்த வேலூர் மாநகராட்சி தேர்தலில் இருவரும் கவுன்சிலர் சீட் கேட்டு விண்ணப்பித்தனர்.
இதில் பிரகாசுக்கு கட்சி மேலிடம் போட்டியிட வாய்ப்பு அளித்தது. இதனால் பிரகாசுக்கும், ராமகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு, வேலூர் மாவட்டத்தில் காட்டுப்புதூர் மடை யாப்பட்டு கோரந்தாங்கல், அகரம்சேரி, அரும்பாக்கம், கொத்தப்பள்ளி ஆகிய கிராமங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கு பொது மக்கள் விண்ணப்பித்தனர்.
இந்த சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வனத்துறையினரிடம் பலமுறை மணு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என புகார்
- துப்பாக்கியால் சுட அனுமதி வழங்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பொருத்தவரை ஒடுகத்தூர் பகுதிகளில் தான் வாழை, கொய்யா, உளுந்து போன்றவை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றது.
இங்கு பெரும்பாலான கிராமங்கள் மலையை யொட்டி அமைந்துள்ளதால் விவசாயமும் மலை சார்ந்த பகுதியில் தான் நடக்கிறது. இதனால், வனவிலங்குகள் காட்டு பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டி ருக்கும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
குறிப்பாக காட்டு பன்றிகள், காட்டெருமைகள், குரங்குகள், மயில் போன்றவை பயிர்களை அதிகளவில் சேதப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து, வனத்துறையினரிடம் பலமுறை மணு கொடுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை.
எனவே, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஒடுகத்தூர் வனத்துறை அலுவலகம் எதிரே மாநில துனைத் தலைவர் ஹரிமூர்த்தி ராஜா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அமைப்பாளராக மாநில தலைவர் வேணுகோப்பால் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, ஒடுகத்தூர் வனத்துறை அலுவலகம் எதிரே வனவிலங்குகள் சேதப்படுத்திய தென்னங்கூடு, வாழை கன்றுகளை போன்றவை களை சாலையில் கொட்டி கோஷம் எழுப்பினர்.
மேலும், பயிர்களை சேதப்படுத்தி வரும் வனவிலங்குகளை காட்டு பகுதிக்குள் விரட்ட வேண்டும். காட்டு பகுதியில் இருந்து வெளிவரும் வனவிலங்குகளை தடுக்க சோலார் மின் வேலி அமைக்க வேண்டும்.
நஷ்டமடைந்த விவசாயி களுக்கு தாமதமின்றி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட அனுமதி வழங்க வேண்டும்.
அதேபோல், குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை பிடித்து சரணாலயத்தில் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
- நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியானது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் அருகே உள்ள மருதவல்லி பாளையம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாடு விடும் விழா நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
குடியாத்தம் அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 28) இவர் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
மருதவல்லி பாளையத்தில் நடந்த எருது விடும் விழாவில் வேடிக்கை பார்க்க சென்றார். அவர் தடுப்புகளை தாண்டி நின்றபடி ஆரவாரம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது வேகமாக அந்த காளை அவர் மீது மோதி முட்டியது.இதில் சுரேஷ் கீழே விழுந்தார். அவர் மீது காளை மாடும் விழுந்தது.
சுதாரித்துக் கொண்டு எழுந்த காளை மீண்டும் சுரேஷின் மார்பு பகுதியில் மிதித்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
சுரேஷ் மீது காளை மாடு மோதிய பதற வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விரிஞ்சிபுரம் போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் கலெக்டர் உத்தரவு
- தேவையான மருத்துவ கருவி, உபகரணங்களை கேட்டு பெற அறிவுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை வேலூர் டவுன் ஹாலில் நேற்று நடந்தது. வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், இணைஇயக்குனர்கள் கிருஷ்ணராஜ் (பொது சுகாதாரத்துறை), ரவிக்குமார் (சுகாதார சீரமைப்பு திட்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) ஹேமலதா வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி வைத்து பேசியதாவது:-
பொதுமக்கள் தங்கள் உடலை நோய் நொடியின்றி பேணிக்காக்க வேண்டும். பெரும்பாலானோர் தங்கள் வீட்டை தூய்மையாக பராமரிப்பார்கள். ஆனால் சுற்றுப்புறத்தை அவ்வாறு பராமரிப்பதில்லை. வீட்டை பராமரிப்பது போன்று சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளை தூய்மை பணியாளர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அதேபோன்று தொற்றாநோய்களான கண்பார்வை குறைவு, ரத்தஅழுத்தம், சக்கரைநோய் உள்ளிட்டவற்றை குணப்படுத்த முடியும். இவற்றுக்கு மருத்துவமனைகளுக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் தங்கள் அகம், புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் வாகனம் ஓட்டி பலர் விபத்து ஏற்படுத்துகிறார்கள். விபத்தில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல எதிரே வருபவர்களும் சிக்கி கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
சிலவேளைகளில் உடல் உறுப்புகள் இழப்பு மற்றும் உயிர்போகும் நிலையும் ஏற்படுகிறது. எனவே சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது டாக்டர்கள் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ கருவி, உபகரணங்களை கேட்டு பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இதில், துணை இயக்குனர்கள் மணிமேகலை (குடும்பநலம்), பிரித்தா (தொழுநோய்), ஜெயஸ்ரீ (காசநோய்), மாநகர் நலஅலுவலர் கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே வேலாடும் தனிகைமலையில் உள்ள செல்வவிநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
அணைக்கட்டு வட்டம், கெங்கநல்லூர் மதுரா, மூலைகேட் பகுதியில் 2000 அடி உயரமுள்ள தனிகைமலையின் உச்சியில் அமைந்து இருக்கும் செல்வவிநாயகருக்கு நேற்று சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு பால், தயிர், நெய், தேன் உட்பட 9 வகையான திரவியங்கள் மற்றும் 108 வகையான மூலிகைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
இதில் சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் 2000 அடி உயரமுள்ள மலைக்கு கால்நடையாக நடந்து வந்து விழாவில் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
- நிர்வாக நலன் கருதி நடவடிக்கை
- கலெக்டர் உத்தரவு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் 9 தாசில்தார்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-
பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விநாயகமூர்த்தி வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தாசில்தாராகவும் (பறக்கும்படை), அங்கு பணிபுரிந்த கோட்டீஸ்வரன் வேலூர் உதவிகமிஷனர் (கலால்) அலுவலக கண்காணிப்பாளராகவும், அங்கு பணிபுரிந்த செல்வி வேலூர் கோவில் நிலங்கள் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சுரேஷ்குமார் வேலூர் தாலுகா ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த சுமதி கே.வி.குப்பம் சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த ரமேஷ் முத்திரைக்கட்டண தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சத்தியமூர்த்தி வேலூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த நரசிம்மன் வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் நேர்முக உதவியாளராகவும், வேலூர் தாலுகா தேர்தல்பிரிவு துணை தாசில்தார் சிவசண்முகம் பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பதவி உயர்வு பெற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பிறப்பித்துள்ளார். புதிய பணியிடத்தில் அனைத்து தாசில்தார்களும் உடனடியாக சேர வேண்டும் இல்லையென்றால் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும்.
பணியிட மாறுதல் குறித்து மேல்முறையீடோ அல்லது விடுப்பு விண்ணப்பமோ ஏற்று கொள்ளப்படாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- யார்? என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி விருதம்பட்டு மாணிக்கம் விநாயகர் கோவில் தெருவில் இன்று அதிகாலை வடமாநில வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் வாலிபர் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வட மாநில வாலிபர் யார்? எதற்காக காட்பாடி வந்திருந்தார் என்பது தெரியவில்லை. அவர் யார்? எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து கிடந்த வட மாநில வாலிபர் நேற்று இரவு மதுபோதையில் அந்த பகுதியில் சுற்றி திரிந்ததாகவும் அங்குள்ள வீட்டுக்குள் நுழைய முயன்றதாகவும் அந்த பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தமிழியக்கம் - விஐடி பல்கலைக்கழகம் சார்பில் நடக்கிறது
- வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைக்கிறார்
வேலூர்:
தமிழியக்கம் - விஐடி பல்கலைக்கழகம் இணைந்து பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் புகைப்படக்கண்காட்சி வேலூர் வி.ஐ.டி. அண்ணா அரங்கில் நாளை மறுதினம் சனிக்கிழமை நடக்கிறது. வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைக்கிறார்.
11-ந் தேதி மற்றும் 12-ந் தேதி ஆகிய 2 நாட்களும் காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியினை பார்வையிடலாம். அன்பழகனின் நூற்றாண்டு விழாவை நினைவு கூறும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், பேராசிரியர் அன்பழகனின் இளமைக்கால புகைப்படங்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனான புகைப்படங்கள், பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உள்ள புகைப்படங்கள், பேராசிரியர் அன்பழகன் அமைச்சராக பதவியேற்ற நிகழ்வுகள், பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் பேராசிரியரின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
பேராசிரியரின் வாழ்க்கை முழுவதும் மேற்கொண்ட லட்சியப் பயணத்தின் பதிவுகளாகவும் 75 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாறுகளை காட்சிப்படுத்தும் விதமாகவும் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.
11-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு விழாவிற்கு விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தலைமை தாங்குகிறார், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருத்தினராக பங்கேற்கிறார்.
கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி முதன்மை விருத்தினராக பங்கேற்கிறார். மாநிலங்களவை உறுப்பினரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர், வைகோ விழாப் பேருரையாற்றுகிறார்.
வாழ்த்துரை—சட்டமன்ற உறுப்பினர்கள் அ. பெ. நந்தகுமார் (அணைக்கட்டு), ப. கார்த்திகேயன் (வேலூர்), அ. வெற்றியழகன் (வில்லிவாக்கம்), மேயர் சுஜாதா, ஜெயரஞ்சன் ஆகியோர் வாழ்த்தி ேபசுகின்றனர்.
- பிளாஸ்டிக் ஒழிப்பையும் வலியுறுத்தினர்
- முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர்
வேலூர்:
காட்பாடி காந்திநகர் 10வது பட்டாலியன் தேசிய மாணவர் படையினர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 230 மாணவ, மாணவிகள் இன்று காலை தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலத்தை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு 10-வது பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் தர்மா தலைமை தாங்கி தூய்மை இந்தியாதிட்ட விழிப்புணர்வு மற்றம் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு என்.சி.சி.மக்கள் தொடர்பு மற்றும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் என்.சி.சி. முதன்மை அலுவலர் க.ராஜா, சுபேதார் மேஜர் பி.கே.சாஷு, சுபேதார்கள் அரவிந்தன், குமார், பினோட் பிரசாத், பட்டாலியன் அவில்தார் மேஜர் ஆர். வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மண்டலம் (முதல்) தூய்மை இந்தியா திட்ட மண்டல அலுவலர் வைஷ்ணவி, கோவிந்த்ராஜ், சக்தி உள்பட பலர் தூய்மை இந்தியா விழிப்புணர்வுக்கு ஒருங்கிணைப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
என்.சி.சி. அலுவலர்கள் ஜெயக்கிருஷ்ணன், தமிழ்செல்வன், அசோக்குமார் ஜெஸ்டின் மற்றும் 10-வது பட்டாலியனின் ராணுவ வீரர்கள் அவில்தார்கள் வெங்கடேசன், துரைமுருகன், ஜெஸ்டின், அனில்தத், ஊர்வலத்தை வழிநடத்தினர்.
தூய்மை இந்தியா விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம் காட்பாடி, காந்திநகர் மேற்கு பகுதியில் உள்ள பிரதான மற்றும் குறுக்கு சாலைகளில் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊர்வலத்தில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர் ஊரீஸ் கல்லூரி, காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐடா ஸ்கடர், எத்திராஜ், டான்பாஸ்கோ, சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளிகளைச் சேர்ந்து 230 என்.சி.சி. மாணவ, மாணவிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முடிவில் பட்டாலியன் அவில்தார் மேஜர் ஆர். வீரமணி நன்றி கூறினார்.
- விவசாயிகளுக்கு பயிற்சி
- வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா வுக்கு உட்பட்ட ஊசூர் மண்டல உள்வட்ட கிராம பகுதியில் உள்ள விவசா யிகள் நிலங்களில் நெல் 5 உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்துள்ளனர்.
பயிர்களில் பூச் சிகள் அதிக அளவில் தாக்கி பாதிப்பு ஏற்படுகிறது. பயிர்களைத் தாக்கும் பூச்கொண்டு மருந்து தெளிப் பது வழக்கம்.
பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்க ஆட்கள் கிடைப்பது இல்லை.
இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆராய்ச்சி நிலையத்தினர் டிரோன் கருவி மூலம் நவீன முறையில் பூச்சி மருந்து மற்றும் உரம்கலந்து தெளிக்க விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வ வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலை வர் திருமுருகன் உத்தர வின்படி, ஊசூர் பகுதியில் பெருமாள் என்பவரது நிலத்தில் வேளாண்மை துறை துணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார், உதவி இயக்கு னர் முருகன்,வேளாண்மை அலுவலர் வேல்முருகன், வட்டார விதை உதவி அலுவலர் இளவரசன், உதவி வேளாண்மை அலுவலர் கிஷோர் வர்ஷன் மற்றும் கோயம்புத்தூர், விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி யாளர்கள் சாந்தி, அரி, கார்த்திகேயன், செந் தில் வேல், உள்ளிட்டோர் பூச்சி மருந்து மற்றும் உரம் கலந்து டிரோன் மூலம் தெளிக்கும் வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.






