என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crop damaged by wildlife"

    • வனத்துறையினரிடம் பலமுறை மணு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என புகார்
    • துப்பாக்கியால் சுட அனுமதி வழங்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பொருத்தவரை ஒடுகத்தூர் பகுதிகளில் தான் வாழை, கொய்யா, உளுந்து போன்றவை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றது.

    இங்கு பெரும்பாலான கிராமங்கள் மலையை யொட்டி அமைந்துள்ளதால் விவசாயமும் மலை சார்ந்த பகுதியில் தான் நடக்கிறது. இதனால், வனவிலங்குகள் காட்டு பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டி ருக்கும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    குறிப்பாக காட்டு பன்றிகள், காட்டெருமைகள், குரங்குகள், மயில் போன்றவை பயிர்களை அதிகளவில் சேதப்படுத்தி வருகிறது.

    இதுகுறித்து, வனத்துறையினரிடம் பலமுறை மணு கொடுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை.

    எனவே, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஒடுகத்தூர் வனத்துறை அலுவலகம் எதிரே மாநில துனைத் தலைவர் ஹரிமூர்த்தி ராஜா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அமைப்பாளராக மாநில தலைவர் வேணுகோப்பால் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, ஒடுகத்தூர் வனத்துறை அலுவலகம் எதிரே வனவிலங்குகள் சேதப்படுத்திய தென்னங்கூடு, வாழை கன்றுகளை போன்றவை களை சாலையில் கொட்டி கோஷம் எழுப்பினர்.

    மேலும், பயிர்களை சேதப்படுத்தி வரும் வனவிலங்குகளை காட்டு பகுதிக்குள் விரட்ட வேண்டும். காட்டு பகுதியில் இருந்து வெளிவரும் வனவிலங்குகளை தடுக்க சோலார் மின் வேலி அமைக்க வேண்டும்.

    நஷ்டமடைந்த விவசாயி களுக்கு தாமதமின்றி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட அனுமதி வழங்க வேண்டும்.

    அதேபோல், குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை பிடித்து சரணாலயத்தில் விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    ×