என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு விடும் விழாவில் காளை முட்டி பாலிடெக்னிக் ஊழியர் பலி
    X

    பாலிடெக்னிக் ஊழியர் மீது காளை மோதி விழுந்த காட்சி.

    மாடு விடும் விழாவில் காளை முட்டி பாலிடெக்னிக் ஊழியர் பலி

    • நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியானது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் அருகே உள்ள மருதவல்லி பாளையம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாடு விடும் விழா நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    குடியாத்தம் அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 28) இவர் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    மருதவல்லி பாளையத்தில் நடந்த எருது விடும் விழாவில் வேடிக்கை பார்க்க சென்றார். அவர் தடுப்புகளை தாண்டி நின்றபடி ஆரவாரம் செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது வேகமாக அந்த காளை அவர் மீது மோதி முட்டியது.இதில் சுரேஷ் கீழே விழுந்தார். அவர் மீது காளை மாடும் விழுந்தது.

    சுதாரித்துக் கொண்டு எழுந்த காளை மீண்டும் சுரேஷின் மார்பு பகுதியில் மிதித்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    சுரேஷ் மீது காளை மாடு மோதிய பதற வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    விரிஞ்சிபுரம் போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×