என் மலர்
நீங்கள் தேடியது "Clean India Project Awareness"
- பிளாஸ்டிக் ஒழிப்பையும் வலியுறுத்தினர்
- முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர்
வேலூர்:
காட்பாடி காந்திநகர் 10வது பட்டாலியன் தேசிய மாணவர் படையினர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 230 மாணவ, மாணவிகள் இன்று காலை தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலத்தை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு 10-வது பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய் தர்மா தலைமை தாங்கி தூய்மை இந்தியாதிட்ட விழிப்புணர்வு மற்றம் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு என்.சி.சி.மக்கள் தொடர்பு மற்றும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் என்.சி.சி. முதன்மை அலுவலர் க.ராஜா, சுபேதார் மேஜர் பி.கே.சாஷு, சுபேதார்கள் அரவிந்தன், குமார், பினோட் பிரசாத், பட்டாலியன் அவில்தார் மேஜர் ஆர். வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மண்டலம் (முதல்) தூய்மை இந்தியா திட்ட மண்டல அலுவலர் வைஷ்ணவி, கோவிந்த்ராஜ், சக்தி உள்பட பலர் தூய்மை இந்தியா விழிப்புணர்வுக்கு ஒருங்கிணைப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
என்.சி.சி. அலுவலர்கள் ஜெயக்கிருஷ்ணன், தமிழ்செல்வன், அசோக்குமார் ஜெஸ்டின் மற்றும் 10-வது பட்டாலியனின் ராணுவ வீரர்கள் அவில்தார்கள் வெங்கடேசன், துரைமுருகன், ஜெஸ்டின், அனில்தத், ஊர்வலத்தை வழிநடத்தினர்.
தூய்மை இந்தியா விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம் காட்பாடி, காந்திநகர் மேற்கு பகுதியில் உள்ள பிரதான மற்றும் குறுக்கு சாலைகளில் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊர்வலத்தில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர் ஊரீஸ் கல்லூரி, காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐடா ஸ்கடர், எத்திராஜ், டான்பாஸ்கோ, சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளிகளைச் சேர்ந்து 230 என்.சி.சி. மாணவ, மாணவிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முடிவில் பட்டாலியன் அவில்தார் மேஜர் ஆர். வீரமணி நன்றி கூறினார்.






