என் மலர்
நீங்கள் தேடியது "Snacks for students"
- வி.ஐ.டி. துணைத் தலைவர் சங்கர்விசுவநாதன் தொடங்கி வைத்தார்
- மாலை நேர சிறப்பு வகுப்பு நடக்கிறது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இவ்வாண்டு பொதுத் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 150 பேருக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாலை நேர சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடைபெறும் நாள் வரை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழாவிற்கு குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் ம.மனோஜ், நகரமன்ற உறுப்பினர்கள் சுமதி மகாலிங்கம், கே.விஜயன், தொழிலதிபர்கள் பொன்னம்பலம், பரத்குமார், மகாவீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எம்.கீதா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளாக வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் சங்கர்விசுவநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ராஜேந்திரன், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் உதவி தலைமை ஆசிரியர் டி.சங்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் தலைமை ஆசிரியர் டி.எஸ். விநாயகம் செய்திருந்தார்.






