என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Striking video footage"

    • சமூக வலைத்தளங்களில் பரவுவதால் பரபரப்பு
    • நிலத்தகராறில் மோதல்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் திமுக கவுன்சிலர் அதே பகுதியை சேர்ந்தவர் மற்றொரு திமுக பிரமுகர். இவர் அப்பகுதியில் வாகன நிறுத்தம் இடம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வாகன நிறுத்தம் இடத்திற்கு செல்லும் வழி தன்னுடையது என கூறி திமுக கவுன்சிலர் கடந்த மாதம் 27-ந் தேதி தடுப்புகளை அமைக்க பள்ளம் தோண்டினர்.

    அப்போது திமுக கவுன்சிலருக்கும், எதிர் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திமுக கவுன்சிலர் அங்கிருந்த பாறாங்கல்லை எடுத்து எதிர் தரப்பை சேர்ந்தவர் மீது வீசினார். அப்போது அவர் மீது பாறாங்கல் படாதவாறு ஒதுங்கிக் கொண்டார்.

    இதனால் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இதையடுத்து கவுன்சிலர் தரப்பினர் எதிர் தரப்பை சேர்ந்தவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து 2 தரப்பை சேர்ந்தவர்களும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் கடந்த 28-ந் தேதி புகார் செய்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் வந்ததால் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். அதன் பிறகு இரண்டு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து 2 தரப்பை சேர்ந்தவர்களும் சமாதா னமாக செல்வதாகவும் நில அளவையர் மூலம் இடத்தை அளந்து அவர் அவர்களுக்கு உண்டான இடத்தைப் பிரித்துக் கொள்வதாகவும் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கடிதம் எழுதிக் கொடுத்தனர். இதனால் போலீசார் வழக்கை வாபஸ் பெற்றனர்.

    இந்த நிலையில் எதிர்த ரப்பினரை கவுன்சிலர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×