என் மலர்
நீங்கள் தேடியது "செல்போன் டவர் அமைக்க கூடாது"
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் செல்போன் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு செல்போன் டவர் அமைப்பதற்கான பணியை தொடங்க நிறுவனத்திலிருந்து ஆட்கள் வந்தனர்.
ஆனால் பொதுமக்கள் இந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நிலத்தின் உரிமையாளர் செல்போன் டவர் அமைக்கும் பணியை கைவிடுவதாக கூறி சென்றார்.
இந்நிலையில் இன்று மீண்டும் செல்போன் டவர் அமைக்கும் பணிக்கு ஆட்கள் வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஊர்பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வேலூர் சேண்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை -பெங்களூர் 6 வழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வேலூர் வடக்கு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மறியல் போராட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






