என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்த காட்சி.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
- காட்பாடி அரசு பள்ளியில் நடந்தது
- ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்
வேலூர்:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும், 52 ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட பொதுமக்களுக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குதல், தேவையான மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், படிப்பு உதவித்தொகை விண்ணப்பித்தல், பஸ் பயண அட்டை ரெயில் பயண அட்டை மற்றும் 18 துறைகள் மூலம் உதவிகள் வழங்குவதற்காகவும் கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகளையும் செய்வதற்கான இந்த முகாம் நடைபெற்றது.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் க ஜோதிஸ்வரபிள்ளை, காட்பாடி சிறப்பு தாசில்தார் வேண்டா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, காட்பாடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சாமுண்டீஸ்வரி, ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களும் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட பொதுமக்களும் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர்.
இந்த முகாம் ஏற்கனவே வேலூர் நகரம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே வி குப்பம் ஆகிய வட்டார அளவில் நடைபெற்றுள்ளது. 5-வது வட்டாரமாக காட்பாடி வட்டார அளவில் சிறப்பு முகாம் நடைபெற்று உள்ளது.
மேலும் கணியம்பாடி, வேலூர் புறநகர் மற்றும் அணைக்கட்டு வட்டாரங்களிலும், இம்முகமானது 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது.






