என் மலர்
வேலூர்
- வாகன சோதனையில் சிக்கினார்
- போலீஸ் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த அக்ராவரம் மற்றும் பூங்குளம் பகுதிகளில் இருந்து கள்ளச்சாராயம் லாரி டியூப்களில் வெளியூ ருக்கு கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.
அதன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலையில் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் பஸ்நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த ஆட்டோவில் லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் கடத்தியது தெரியவந்தது. பின்னர் விசாரணையில் ஆட்டோவை ஓட்டிவந்த அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (வயது 35) ஆட்டோ டிரைவர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 150 லிட்டர் கள்ள ச்சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர்.
- வி.ஐ.டி. ஒட்டு மொத்த சாம்பியன்
- நடிகை ராசிகண்ணா மாணவர்களின் கேள்விகளுக்கு ருசிகர பதில்
வேலூர்:
வேலூர் விஐடியில் ரிவேரா'23 எனும் சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி ரிவேரா'23 கலைவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.
ரிவேரா'23 கலைத்திருவிழாவில் நாட்டில் உள்ள 700 பல்கலைக்கழகங்கள், கல்லூரி மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இருந்து 45,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் பங்குபெற்றனர். மேலும் பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், இலங்கை, சாம்பியா, எத்தியோப்பியா, வங்காளதேசம், நேபாளம், ஜப்பான், பூடான், குவைத், நைஜீரியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சவுதி அரேபியா, மெக்ஸிகோ, வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா, தான்சானியா, உகாண்டா, ஜிம்பாவே, ருவாண்டா, கேமரூன், கொலம்பியா, ஜெர்மனி ஆப்கானிஸ்தான், சிரியா, மியான்மர், சிங்கப்பூர், மங்கோலியா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா உள்ளிட்ட 44 வெளிநாடுகளை சார்ந்தவர்களும் பங்கேற்றனர்.
ரிவேரா'23 இல் விளையாட்டு போட்டிகள், நாடகம், நாட்டியம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பாட்டுக்கு பாட்டு என மொத்தம் 150க்கும் மேற்ப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூபாய் 17 லட்சம், ரொக்க பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
வி.ஐ.டி.யில் ரிவேரா'23 என்ற சர்வதேச கலைத்திருவிழா நிறைவு நாளில் பல போட்டிகளில் வெற்றி பெற்று ஓட்டு மொத்த சாம்பியன் ஷிப் (விளையாட்டு) வி.ஐ.டி. வேலூர், ஓட்டு மொத்த சாம்பியன் ஷிப் (கலை மற்றும் கலாச்சாரம்) என்.ஐ.டி திருச்சி, ஓட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்ற அணிகளுக்கு விஐடி வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் பரிசுகோப்பை வழங்கினார்.
பின்பு பேசிய விஐடி வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன், ரிவேரா விழாவில் பங்குபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அனைவருக்கும் குறிப்பாக வெளிநாட்டு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார் . விஐடியில் தற்போது 60 நாடுகளை சார்ந்த மாணவ, மாணவிகள் கல்வி கற்கின்றனர் , எதிர் வரும் காலங்களில் இன்னும் பல்வேறு நாடுகளின் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை உயரும் என்றார்.
சிறப்பு விருத்தினராக கலந்து கொண்ட பிரபல திரைப்பட நடிகை ராசி கண்ணா மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி கேள்விகளுக்கு பதில் அளித்தார் . பின்பு பேசிய ராசி கண்ணா கடினமாக உழைக்க வேண்டும்.
அதே நேரத்தில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றார். மேடையில் பாட்டு பாடி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
- கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சலவன் பேட்டை திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் குப்பு (வயது 55) அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார்.
கடந்த 22-ந் தேதி இவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக பின்னர் சென்று கொண்டிருந்தார் அவரிடம் தனக்கு மயக்கம் வருவதாக குப்பு கூறினார். உடனே அந்த பெண் முதலுதவி அளிப்பதாக கூறி குப்புவை அவரது வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் சென்றதும் குப்பு மயங்கி விழுந்தார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண் குப்பு அணிந்திருந்த 3 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து குப்பு கண்விழித்தார். அப்போது அவரது நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது குப்புவிற்கு முதலுதவி செய்வது போல நடித்து நகை பறித்து சென்ற பெண்ணின் உருவம் கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் மூலம் மூதாட்டியிடம் நகை பறித்த பலவன்சாத்துகுப்பம் கலைஞர் நகரை சேர்ந்த வனிதா (39) என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
கைதான வனிதா ஏற்கனவே பல ஆஸ்பத்திரிகளில் நர்சாகப் பணியாற்றி உள்ளார். சம்பவத்தன்று குப்பு மயங்கியதும் நகை பறித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- மின் அதிகாரி தகவல்
வேலூர்:
வேலூர் மின்பகிர்மான வட்டம் சத்துவாச் சாரி, தொரப்பாடி துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே இங்கிருந்து மின்வினி யோகம் பெறும் சத்துவாச் சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்புநகர், ஸ்ரீராம்நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபு ரம், அலமேலுரங்காபுரம். சைதாப்பேட்டை, எல்.ஐ.சி. காலனி, காகிதப்பட்டறை, கலெக்டர் அலுவலக வளாகம். ஆவின் வளாகம், கோர்ட்டு, இ.பி.நகர், சித்தேரி, தென்றல்நகர், இடையன் சாத்து,பென்னாத்தூர், ஆவா ரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, ஜெயில்குடியி ருப்பு, எழில்நகர், டோல்கேட், அண்ணாநகர், சங்கரன்பா ளையம், சாய்நாதபுரம், குப் பம், விருபாட்சிபுரம், ஓட் டேரி, பாகாயம், இடையம் பட்டி, சாஸ்திரிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) பரிமளா தெரிவித்துள்ளார்.
- சவ ஊர்வலத்தின்போது விபரீதம்
- பலத்த தீ காயம் அடைந்தனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தில் நேற்று சவ ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது சிலர் பட்டாசுகளை கொளுத்தி தூக்கி வீசியுள்ளனர். அப்போது அந்த வண்டியில் இருந்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 32)டிரைவர், கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் நாகல் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி டில்லி பாபு (27) என்பவர்கள் மீது பட்டாசு பட்டத்தில் பலத்த தீ காயம் அடைந்தனர்.
- 1-ந் தேதி முதல் 10 நாட்கள் நடக்கிறது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனா ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் (கி.ஊ) வழங்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனா ளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீலநிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் இது வரை 2067 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும் இருமா தங்களுக்கு ஒருமுறை 2-வது செவ்வாய்க்கிழமை இணைஇயக்குநர், திட்டஇயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னிலையில் குறைகேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இதன்தொடர்ச்சியாக வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதிவரை அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட முகாம் நடைபெறும் நாட்களில் தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி நீலநிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2 வாலிபர்கள் படுகாயம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் துர்க்கை நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (21) இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் அரவிந்தன், ராஜலிங்கம் இருவரும் குடியாத்தம் ெரயில் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றனர்.
அங்கு பெட்ரோல் போட்டு கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்துள்ளனர். வேலூரில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த அரசு பஸ் குடியாத்தம் ெரயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது. இதில் ராஜலிங்கமும், அரவிந்தனும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக ராஜலிங்கம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆந்திராவில் இருந்து கண்டெய்னர் லாரியில் வந்தது
- மதுரை உரிமையாளர் முன்பு பிரித்து பரிசோதனை
வேலூர்:
வடமாநிலங்களில் இருந்து வேலூர் வழியாக கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் நேற்று இரவு 9 மணியளவில் வேலூர் கொணவட்டம் பகுதியில் சென்னை-பெங்களூரு அணுகுசாலையில் திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி, வேன், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, அவற்றில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்று சோதனை செய்தார்.
அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவினர் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது ஒரு கன்டெய்னர் லாரியில் ஏராளமான பிளாஸ்டிக் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் இதுகுறித்து டிரைவரிடம் விசாரித்தபோது மூட்டைகளில் பஞ்சு இருப்பதாக தெரிவித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியில் இருந்த மூட்டைகளை சோதனை செய்வதற்காக ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் போலீசார் 2 மூட்டைகளை சோதனை செய்தனர். அந்த மூட்டைகளில் பஞ்சு இருப்பது தெரிய வந்தது. டிரைவரிடம் நடத்திய விசாரணையில், ஒரிசாவில் இருந்து பஞ்சு மூட்டைகளை சேலத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார்.
பின்னர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு செல்வதாக டிரைவர் தெரிவித்தார்.மேலும் சில கேள்விகளுக்கு டிரைவர் முன்னுக்கு பின் முரண்பாடான தகவல்கள் தெரிவித்தார்.
அதனால் லாரியில் இருக்கும் அனைத்து பஞ்சு மூட்டைகளையும் பிரித்து சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது குறித்து மதுரையை சேர்ந்த லாரி உரிமையாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரது முன்னிலையில் இன்று சோதனை செய்ய ஏற்பாடு செய்தனர்.
வேலூரில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ஆந்திராவில் இருந்து மதுரை மற்றும் தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்திய நபர்கள் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாரியில் உள்ள பஞ்சு மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தால் தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரும் கும்பலை கூண்டோடு கைது செய்ய வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
- கே.வி. குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சாமுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நாகல் பஞ்சாயத்துக்குட்பட்ட தேன்கனி மலை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி இவரது மூத்த மகன் சேகர் (வயது 35) கூலி வேலை செய்து வந்தார்.
2-வது மகன் சாமு (32). இவர்கள் அருகருகே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சேகர் மதுபோதையில் அவரது தம்பி சாமுவின் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த சாமு அண்ணன் சேகரை தாக்கினார். அப்போது கீழே விழுந்த சேகரின் தலையில் கல்லால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சேகர் இறந்துவிட்டார்
கே.வி. குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சாமுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான சேகருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர். அவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வேலூரில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் பேட்டி
- அரசியல் கட்சியினர் மாறவேண்டும்
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பண தினம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ரங்கநாதன் தலைமை தாங்கினார். கோட்டத் தலைவர் மகேஷ், கோட்ட பொருளாளர் பாஸ்கரன், தனசேகர், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கோவில் நிலங்களை எக்காரணத்தைக் கொண்டும் விற்கக் கூடாது ஐகோர்ட்டில் பல்வேறு நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்க கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டும் அரசியல் கட்சியினரை அறங்காவலர்களாக நியமித்து உள்ளனர். அவர்கள் கோவில் நிலங்களை விற்கின்றனர்.
மதுரை ஐகோர்ட்டு அருகிலுள்ள 9 ஏக்கர் கோவில் நிலத்தை பார்க்கிங் பாயிண்டாக மாற்ற அரசு முயற்சி செய்து வருகிறது. கோர்ட்டு உத்தரவை அரசு கடைபிடிக்க வில்லை என்றால் பொதுமக்கள் எப்படி கடைப்பிடிப்பார்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு நடந்து கொள்கின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தலில் பணம் இலவசங்களை வாரி இறைத்து ஓட்டை பெறுவது ஜனநாயக கேலிக்கூத்தாக உள்ளது. மக்களுக்கு நல்லது செய்து ஓட்டை பெற வேண்டுமே தவிர இலவசங்களை கொடுக்கக்கூடாது. இந்த விஷயத்தில் அரசியல் கட்சியினர்தான் மாற வேண்டுமே தவிர 2 கோடி மக்களை மாற்ற நினைக்க கூடாது.
தேர்தல் ஆணையம் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளது. இது சம்பந்தமாக வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்க வேண்டும்.
மதப் பிரசாரத்தை தடை செய்ய வேண்டும். ராணுவ வீரர் கொலை குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எதுவும் பேசாததற்கு இந்து முன்னணி வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.
கோவில் வருமானத்தை பக்தர்களின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.சிதிலமடைந்துள்ள கோவில்களை புணரமைக்க வேண்டும்.
வேலூர் அருகே சோழவரத்தில் 2000 ஆண்டுகள் பழமையான நந்தி கம்பீஸ்வரர் கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு உள்ளனர். அவற்றை மீட்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 500-க்கும் மேற்பட்ட விதைகள் வைக்கப்பட்டிருந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் அண்ணா சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்துபாரம்பரிய மரபணு காய்கறி, விதை, கண்காட்சி இன்று நடந்தது.
இந்த கண்காட்சியில் பழங்கால மரபணு காய்கறி, பழங்கள், கிழங்கு வகைகள், கீரைகள், தானியங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் 500-க்கும் மேற்பட்ட விதைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்காட்சியை பார்வை யிட்டு பொருட்களை வாங்கி சென்றனர்.
- மயக்க மருந்து தெளித்து துணிகரம்
- முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் கைவரிசை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே கெங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 48), விவசாயி. இவருக்கு மனைவி, ஒரு மகள், 2 மகன் கள் உள்ளனர். இவரது வீட் டில்பெற்றோர் உள்பட 6 பேர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கதவுகளை பூட்டிவிட்டு தூங்க சென்ற னர். பாஸ்கரன், மனைவி மற் றும் அவரது பிள்ளைகள் ஒரு அறையிலும் பெற்றோர் ஹாலிலும் தூங்கிக்கொண்டி ருந்தனர்.
அதிகாலை 4 மணிக்கு பாஸ்கரன் மயக்க நிலையில் எழுந்தார். அவரது பெற்றோர் கண் விழிக்காததால் அவர் களை எழுப்ப முயன்றார். அவர்களும் மயக்கமாக உள் ளது என கூறினர். வீட்டின் பின்பக்கம் உள்ள கதவு பூட் டிய நிலையில் இருந்தது. அந்த கதவு திறக்கப்படவில்லை. ஆகவே முன்பக்க கதவைத் திறந்து வெளியே, வந்து பின் பக்க கதவைத் திறந்தார். பின் னர் பெற்றோர் படுத்துக் கொண்டிருந்த எதிர் அறை திறந்து கிடந்ததை பார்த்தார்.
உடனே. அனைவரையும் தட்டி எழுப்பி உள்ளே சென்று பார்த்தபோது அறை யில் இருந்த பீரோ உடைக்கப் பட்டு அதில் வைக்கப்பட்டி ருந்த நகைபெட்டியையும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வைத்தி ருந்த பணப்பையையும் காண வில்லை. மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் அருகில் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மணி என்பவரது வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம கும்பல் வீட்டின் கதவுகளை உடைக்க முடியாமலும் பக் கத்து வீட்டில் இருந்த பன்னீர் செல்வம் என்பவரின் வீட்டில் உள்ளே சென்று பூஜை அறை யில் இருந்த அம்மன் தாலி சரடை திருடி செல்லாமல் சென்றுள்ளனர்.
மேலும் கெங்கநல்லூரில் 4 வீடுகளிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பாஸ்கரன், மணி, பன்னீர் செல்வம் ஆகியோர் அணைக் கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநா வுக்கரசு, வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவா சன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி னர். மேலும் கைரேகை நிபு ணர்கள் வந்து கைரேகை களை பதிவு செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
பாஸ்கரன் வீட்டில் நகைப் பெட்டியில் இருந்த 42 பவுன் நகைகளும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும், ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர். மேலும் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.7 லட் சம், ரூ.3 லட்சம், ரூ.1 1/2லட்சம் உள்ளிட்ட 3 ரொக்க பத்திரங் களும் திருட்டு போய் உள் ளது. முன்பக்க வாசல் வழி யாக மர்ம நபர்கள் வீட்டுக் குள் வந்து தூங்கி கொண்டி. ருந்தவர்கள் மீது மயக்க மருந்து தெளித்துவிட்டு பின் பக்க வாசல் வழியாக திருடி சென்று உள்ளனர்.
பன்னீர்செல்வம் என்பது வீட்டில் திருடும்போது 2பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் கெங் கநல்லூர் பகுதியில் இருக்கும் 4 வீடுகளில் திருட்டு நடந்துள் ளது. ஒரே இரவில் 7 வீடுக ளுக்கு மேல் 8 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளனர். நள்ளி ரவு 12 மணி முதல் 2 மணி வரை இந்த கொள்ளை சம்ப வம் நடந்திருக்கலாம். '
இவ்வாறு அவர்கள் கூறி
னர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பல் தேடி வருகின்றனர். மேலும் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.






