என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவசங்களை கொடுத்து ஓட்டு வாங்க நினைக்க கூடாது
    X

    சமுதாய சமர்ப்பண நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் பேசிய காட்சி.

    இலவசங்களை கொடுத்து ஓட்டு வாங்க நினைக்க கூடாது

    • வேலூரில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் பேட்டி
    • அரசியல் கட்சியினர் மாறவேண்டும்

    வேலூர்:

    வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பண தினம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ரங்கநாதன் தலைமை தாங்கினார். கோட்டத் தலைவர் மகேஷ், கோட்ட பொருளாளர் பாஸ்கரன், தனசேகர், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கோவில் நிலங்களை எக்காரணத்தைக் கொண்டும் விற்கக் கூடாது ஐகோர்ட்டில் பல்வேறு நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்க கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டும் அரசியல் கட்சியினரை அறங்காவலர்களாக நியமித்து உள்ளனர். அவர்கள் கோவில் நிலங்களை விற்கின்றனர்.

    மதுரை ஐகோர்ட்டு அருகிலுள்ள 9 ஏக்கர் கோவில் நிலத்தை பார்க்கிங் பாயிண்டாக மாற்ற அரசு முயற்சி செய்து வருகிறது. கோர்ட்டு உத்தரவை அரசு கடைபிடிக்க வில்லை என்றால் பொதுமக்கள் எப்படி கடைப்பிடிப்பார்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு நடந்து கொள்கின்றனர்.

    ஈரோடு இடைத்தேர்தலில் பணம் இலவசங்களை வாரி இறைத்து ஓட்டை பெறுவது ஜனநாயக கேலிக்கூத்தாக உள்ளது. மக்களுக்கு நல்லது செய்து ஓட்டை பெற வேண்டுமே தவிர இலவசங்களை கொடுக்கக்கூடாது. இந்த விஷயத்தில் அரசியல் கட்சியினர்தான் மாற வேண்டுமே தவிர 2 கோடி மக்களை மாற்ற நினைக்க கூடாது.

    தேர்தல் ஆணையம் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளது. இது சம்பந்தமாக வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்க வேண்டும்.

    மதப் பிரசாரத்தை தடை செய்ய வேண்டும். ராணுவ வீரர் கொலை குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எதுவும் பேசாததற்கு இந்து முன்னணி வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    கோவில் வருமானத்தை பக்தர்களின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.சிதிலமடைந்துள்ள கோவில்களை புணரமைக்க வேண்டும்.

    வேலூர் அருகே சோழவரத்தில் 2000 ஆண்டுகள் பழமையான நந்தி கம்பீஸ்வரர் கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு உள்ளனர். அவற்றை மீட்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×