மாற்றுத்திறனாளிகள் வேலை அட்டை பெற சிறப்பு முகாம்கள்

1-ந் தேதி முதல் 10 நாட்கள் நடக்கிறது கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் வேலை அட்டை பெற சிறப்பு முகாம்கள்
Published on

வேலூர்:

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனா ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் (கி.ஊ) வழங்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனா ளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீலநிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் இது வரை 2067 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும் இருமா தங்களுக்கு ஒருமுறை 2-வது செவ்வாய்க்கிழமை இணைஇயக்குநர், திட்டஇயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னிலையில் குறைகேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இதன்தொடர்ச்சியாக வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதிவரை அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட முகாம் நடைபெறும் நாட்களில் தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி நீலநிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com