என் மலர்
உள்ளூர் செய்திகள்

வி.ஐ.டி.யில் ரிவேரா’23 என்ற சர்வதேச கலைத்திருவிழாவில் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் (விளையாட்டு) பட்டத்தை வென்ற வி.ஐ.டி. வேலூர் அணிக்கு பரிசு கோப்பையை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் வழங்கினார். உடன் வி ஐ டி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் மற்றும் இணை துணை வேந்தர் டாக்டர். ராம்பாபு கோடாலி. நிகழ்ச்சியில் நடிகை ராசிகண்ணா பங்கேற்று மாணவர்களின் கேள்விகளுக்கு ருசிகர பதிலளித்தார்.
ரிவேரா கலை, விளையாட்டு விழா நிறைவு
- வி.ஐ.டி. ஒட்டு மொத்த சாம்பியன்
- நடிகை ராசிகண்ணா மாணவர்களின் கேள்விகளுக்கு ருசிகர பதில்
வேலூர்:
வேலூர் விஐடியில் ரிவேரா'23 எனும் சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி ரிவேரா'23 கலைவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.
ரிவேரா'23 கலைத்திருவிழாவில் நாட்டில் உள்ள 700 பல்கலைக்கழகங்கள், கல்லூரி மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இருந்து 45,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் பங்குபெற்றனர். மேலும் பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், இலங்கை, சாம்பியா, எத்தியோப்பியா, வங்காளதேசம், நேபாளம், ஜப்பான், பூடான், குவைத், நைஜீரியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சவுதி அரேபியா, மெக்ஸிகோ, வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா, தான்சானியா, உகாண்டா, ஜிம்பாவே, ருவாண்டா, கேமரூன், கொலம்பியா, ஜெர்மனி ஆப்கானிஸ்தான், சிரியா, மியான்மர், சிங்கப்பூர், மங்கோலியா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா உள்ளிட்ட 44 வெளிநாடுகளை சார்ந்தவர்களும் பங்கேற்றனர்.
ரிவேரா'23 இல் விளையாட்டு போட்டிகள், நாடகம், நாட்டியம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பாட்டுக்கு பாட்டு என மொத்தம் 150க்கும் மேற்ப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூபாய் 17 லட்சம், ரொக்க பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
வி.ஐ.டி.யில் ரிவேரா'23 என்ற சர்வதேச கலைத்திருவிழா நிறைவு நாளில் பல போட்டிகளில் வெற்றி பெற்று ஓட்டு மொத்த சாம்பியன் ஷிப் (விளையாட்டு) வி.ஐ.டி. வேலூர், ஓட்டு மொத்த சாம்பியன் ஷிப் (கலை மற்றும் கலாச்சாரம்) என்.ஐ.டி திருச்சி, ஓட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்ற அணிகளுக்கு விஐடி வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் பரிசுகோப்பை வழங்கினார்.
பின்பு பேசிய விஐடி வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன், ரிவேரா விழாவில் பங்குபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அனைவருக்கும் குறிப்பாக வெளிநாட்டு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார் . விஐடியில் தற்போது 60 நாடுகளை சார்ந்த மாணவ, மாணவிகள் கல்வி கற்கின்றனர் , எதிர் வரும் காலங்களில் இன்னும் பல்வேறு நாடுகளின் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை உயரும் என்றார்.
சிறப்பு விருத்தினராக கலந்து கொண்ட பிரபல திரைப்பட நடிகை ராசி கண்ணா மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி கேள்விகளுக்கு பதில் அளித்தார் . பின்பு பேசிய ராசி கண்ணா கடினமாக உழைக்க வேண்டும்.
அதே நேரத்தில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றார். மேடையில் பாட்டு பாடி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.






