என் மலர்
வேலூர்
- விவசாயிகள் வலியுறுத்தல்
- குறைதீர்வு கூட்டம் நடந்தது
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாதந்தோறும் நடைப்பெற்று வருகின்றது. இதன்படி நேற்று அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்தில் கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:-
முருங்கைக்கீரை வைத்து வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்க தோட்டக்கலை துறை அதிகாரிகள் பயிற்சி அளிக்க வேண்டும். மா, பலா, வாழைப்பழங்கள் ரசாயன பொருட்களைக் கொண்டு பழுக்க வைத்து விற்பனை செய்யப்படும் வியாபாரிகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணைக்கட்டு சுற்றியுள்ள உள்ள பகுதிகளில் கரும்பு தோட்டங்கள் வெயில் காலத்தால் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
இதனால் அணைக்கட்டு பகுதியில் ஒரு தீயணைப்பு நிலையம் கொண்டு வர வேண்டும். விவசாய நிலங்களில் காலி மது பாட்டில்கள் வீசுவது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட ஆட்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
இதுகுறித்து தாசில்தார் ரமேஷ் பேசுகையில், விவசாயிகள் வைத்த புதிய கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பீரோவை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்சிங்கல்பாடி செம்மண் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 54) விவசாயி. இவரது மனைவி லட்சுமி.
நேற்று காலையில் விவசாய வேலை சம்பந்தமாக அண்ணாமலை வெளியே சென்றிருந்தார். .அவரது மனைவி லட்சுமி 100 நாள் வேலை திட்ட பணிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.
மதியம் வெளியே சென்ற அண்ணாமலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதிலிருந்து 12 பவுன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் அண்ணாமலை புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சாமியார்மலை மோர்தானா கால்வாய் அருகே உள்ள புதுமனைப் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம், விசைத்தறி தொழிலாளி.
நேற்று மதியம் குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு விசைத்தறி கூடத்திற்கு சென்று வேலையில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது மர்ம கும்பல் அங்கிருந்த பீரோ சாவியை எடுத்து 2½ பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து மாணிக்கம் குடியாத்தம் டவுன் போலீசில் நேற்று இரவு புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக குற்றச்சாட்டு
- நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் குடியாத்தம் குமரன் (வயது 47). இவர் தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராகவும், திமுக செய்தி தொடர்பாள ராகவும், தலைமை கழக பேச்சாளராகவும் உள்ளார்.
இவர் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்டதாக கூறி நேற்று குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் அதிமுகவினர் புகார் அளித்தனர்.
குடியாத்தம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் வி.ராமு தலைமையில் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் வனராஜ், துணை செயலாளர் செ.கு. வெங்கடேசன், ஒன்றிய குழு துணை தலைவர் அருண்முரளி, முன்னாள் நகர் மன்ற தலைவர் எம். பாஸ்கர் உள்பட அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக வந்து குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட குடியாத்தம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் புகார் குறித்து உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
- பறகுக்ம் படை கண்காணிப்பு
- கலெக்டர் ஆய்வு
வேலூர்:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கடந்த மாதம் 20 முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் 8 இடங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு அறைக்கதவுகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9,540 மாணவர்கள், 9,123 மாணவிகள் என்று மொத்தம் 18 ஆயிரத்து 663 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பது தடுக்கவும் ஆள் மாறாட்டத்தை கண்டுபிடிக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 104 தேர்வு மையங்களை கண்காணிக்க 104 முதன்மை கண்காணிப்பாளர்கள், 104 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
அதைத்தவிர கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையிலான குழுவினரும் தேர்வு மையங்களில் திடீர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
வினாத்தாள்கள் 21 வழித்தடங்களில் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தேர்வு தொடங்குவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பாக மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சரியாக காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது.
முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கும் 5 நிமிடம் அனுமதி வழங்கப்பட்டன. தேர்வுகள் 10.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிவரை நடந்து.
தேர்வு மையங்களில் இருந்து முன்கூட்டியே மாணவர்கள் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் இருந்தனர். தேர்வு நடைபெறுவதையொட்டி தேர்வு மையங்களுக்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 219 பள்ளிகளை சேர்ந்த 80200 மாணவர்களும் 8,149 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 499 பேரும், தனித் தேர்வர்கள் 844 பேர் என மொத்தம் 17 ஆயிரத்து 253 பேர் தேர்வு எழுதினார். தேர்வு எழுதுவதற்காக 70 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 15,302 மாணவர்களும் 14 ஆயிரத்து 621 மாணவிகளும் என மொத்தமாக 29,923 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.
இதற்காக மாவட்டத்தில் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவிகள் தேர்வில் வெற்றி பெற வழிபாடு செய்தனர்.
மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியைகள் வெற்றி திலகமிட்டு வாழ்த்தி தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 219 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 260 மாணவர்களும், 8 ஆயிரத்து 149 மாணவிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 409 பேரும், தனித்தேர்வர்கள் 844 பேரும் என மொத்தம் 17 ஆயிரத்து 253 பேர் தேர்வு எழுத உள்ளனர். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் பள்ளி மாணவர்களுக்கு 67 தேர்வு மையங்களும், தனிதேர்வர்களுக்காக 3 தேர்வு மையங்களும் என மொத்தம் 70 தேர்வு மையங்கள் என மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 133 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79 மையங்களில்8,257 மாணவர்களும், 7,830 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 87 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
- 3 கி.மீ. நடந்து சென்று நேர்த்திகடன்
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ அனுமன் கோவில் உள்ளது. இங்கு அனைத்து பவுர்ணமி தினத்தன்று சிறப்பு அலங்காரம் செய்து வழிப்பாடு நடத்தி வந்தனர்.
இதனையடுத்து ஆண்டு தோரும் பங்குனி மாதம் பவுர்ணமி உத்திரம் முன்னிட்டு, 108 பால் குடங்களை 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்து மூலவருக்கு, அபிஷேகம் செய்தனர்.
இதனை தொடர்ந்து வடை மாலை, துளசி மாலை அணிவித்து, தீபாராதனை நடந்தது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை, பஜனை குழுவினரால் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. இதில், ஒடுகத்தூர், பெரிய ஏரியூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதனையடுத்து பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- சிறப்பு தீபாராதனை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
பங்குனி உத்திரம் முன்னிட்டு மூஞ்சூர்பட்டு, வடதிருச்செந்தூர் மயில்வே லாடும் தொலாமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைப்பெற்றது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
சரியாக காலை 6 மணிக்கு வள்ளி தெய்வானை அம்பாள்களுக்கு சிறப்பு கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வள்ளி தெய்வானை அம்பாளை அழைத்து வந்து பந்தல் மண்டபம் முகப்பில் வைத்து தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு திருவீதி உலா வந்து காட்சி அளித்து வருகிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அலங்க ரிக்கப்பட்ட கலசங்கள் வைத்து யாகசாலை அமைத்து 108 ஹோம திரவியங்கல் மற்றும் மூலிகைப்பொருட்களை கொண்டு 2 கால யாகப் பூஜை வளர்க்கப்பட்டது.
பின்னர் இரவு 7 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுப்பிரமணிய பெருமானுக்கும், வள்ளி தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைப்பெற்றது.
இந்நிகழ்வினை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வருகை தந்து முருகனை பக்தி கோசங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
- பல மாதங்களாக முடங்கி கிடந்தது
- ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் அப்துல்லாபுரத் தில் விமான நிலையம் அமைந்துள்ளது. மத்திய அர சின் உதான் திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப் பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட் டன. பொதுமக்களின் நிலங் கள் கையகப்படுத்தப்பட்டது. ஓடுதளம், டெர்மினல் கட்டிபட்டது. டம், தளவாட கருவிகள், பய ணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்டவை அமைக்கப் பட்டது.
இதன் நடுவே இருந்த தார் வழி சாலையும் விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் பயன் பாட்டுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சியில் திடீரென தொய்வு ஏற்பட்ட டது. விமான நிலையத்தின் செயல்பாட்டுக்கு கூடுதலாக சுமார் 10 ஏக்கர் நிலம் தேவையாக இருந்தது. ஆனால் அதை கையகப்படுத்துவதில் பல சிக்கல்கள் எழுந்தது.
இதனால் பல மாதங்களுக்கு மேல் பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. அங்குள்ள ஓடுதள பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் செடி, கொடிகள் முளைத்தன. அமைக்கப் யாகி உள்ளது. பட்ட டெர்மினல் கட்டிட மும் பராமரிப்பின்றி காணப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வேலூர் விமான நிலையத்தில் இதன் நடுவே இருந்த தார் மீண்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மின் கம்பங்களும் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வேலூர் விமான நிலைய பணிகள் தொடங்க கூடுதலாக 10 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது.
இந்த நிலை யில் அந்த நிலம் தேவை யில்லை என்றும், இருக்கும் இடத்தினை வைத்துக் கொண்டு விமான நிலை யத்தை பயன்படுத்தலாம். என் றும் விமான ஆணையரகம் சார்பில் தெரிவித்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
எனவே இருக்கும் இடத் தில் உள்ள மரங்கள், மின்கம் பங்கள் அகற்றல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றனர்.
- கோட்டை நுழைவாயிலில் ஆட்டோக்களை நிறுத்த தடை விதித்ததால் ஆத்திரம்
- தொல்லியல் துறையிடம் அனுமதி கடிதம் பெற நடவடிக்கை
வேலூர்:
வேலூர் கோட்டையில் இருந்த காதல் ஜோடிகளை மிரட்டி சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது சம்பந்தமாக சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் கோட்டை நுழைவாயில் காந்தி சிலை அருகே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக ஆட்டோக்கள் நிறுத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் காந்தி சிலை அருகே ஆட்டோவை இயக்கி வந்த டிரைவர்கள் இன்று காலை சாரதி மாளிகை மேம்பாலத்தின் கீழ் வரிசையாக ஆட்டோக்களை நிறுத்தி சாலையோரம் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தாததால் அவர்களாகவே மீண்டும் ஆட்டோக்களை எடுத்துச் சென்று காந்தி சிலை அருகில் நிறுத்தினர்.
இதனைக் கண்ட போலீசார் இங்கு ஆட்டோக்களை நிறுத்த அனுமதி இல்லை என்றனர். அப்போது ஆட்டோ தொழிலாளர்கள் நாங்கள் வேறு எங்கு ஆட்டோவை நிறுத்த முடியும். எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இங்கு ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
பின்னர் போலீசார் நீங்கள் தொல்லியல் துறையிடம் ஆட்டோக்களை நிறுத்த ஆட்சேபனை இல்லை என கடிதம் வாங்கி வந்தால் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் தொல்லியல் துறையிடம் அனுமதி கடிதம் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோ டிரைவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிறப்பு தீபாராதனை நடந்தது
- பக்தர்கள் கிரிவலம் சென்றனர்
வேலூர்:
வேலூர் வேலப்பாடி பகவதி மலையடிவாரத்தில் பழமை வாய்ந்த வேப்பங்காடு பகவதி அம்மன் பன்னபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் பங்குனி மாத பவுர்ணமியை யொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதில், பகவதி அம்மா கலந்து கொண்டு அம்மன், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, அலங்காரம் செய்து தீபாராதனை காண்பித்தார்.
பூஜையில் வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய் தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது. பக்தர்கள் கோவிலை சுற்றி கிரிவலம் வந்து அம்மனை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவர் தமிழ்புகழேந்தி செய்திருந்தார்.
- கண்காணிப்பாளர் தகவல்
- அஞ்சல், ரெயில்வே துறை இணைந்து நடவடிக்கை
வேலூர்:
வேலூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபா லன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அஞ்சல்துறை மற்றும் ரெயில்வே துறை இணைந்து 'உங்கள் இல்லம் தேடி பார்சல்' சேவையை குறைந்த செலவில் பூர்த்தி செய்ய ஒருங்கிணைந்த பார்சல் சேவை திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தில் 35 கிலோவுக்கு மேல் எடை கொண்ட பொருட்கள் பார்சல் சேவை வாயிலாக தங்கள் இல்லத்தில் தொடங்கி தபால் துறையின் மூலமாக இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில்கள் வழியாக உங்கள் பொருட்கள் பாது காப்பாக கொண்டு செல்லப்படும்.
வேலூரில் இயங்கும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலை கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம். பார்சல் களை சேகரிப்பது முதல் வாடிக்கையாளர்களுக்கு பட்டு வாடா செய்யும் வரை பணிகளை தபால்துறை மேற்கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சாலையோரம் நடந்து சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 16), தொரப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தொரப் பாடியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மாணவியின் மீது மோதியது.
அதில் அவர் சம்பவ இடத்தி லேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மதுமிதாவின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பொதுமக்கள் சாலை மறியல்
- வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பத்தை அடுத்த சென்னகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் சங்கர். இவர் மீது பட்டா மாற்றம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் புகார்கள் வழங்கப்பட்டது. இந்த முறைகேடுகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தையும் நடத்தினர்.
இதற்கிடையில் சங்கர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடியாத்தத்திற்கு இட மாறுதல் செய்யப்பட்டார். குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் விசாரணை செய்து கிராம நிர்வாக அலுவலர் சங்கரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.






