search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருங்கை கீரையில் இருந்து வைட்டமின் மாத்திரை தயாரிக்க பயிற்சி வழங்க வேண்டும்
    X

    முருங்கை கீரையில் இருந்து வைட்டமின் மாத்திரை தயாரிக்க பயிற்சி வழங்க வேண்டும்

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • குறைதீர்வு கூட்டம் நடந்தது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாதந்தோறும் நடைப்பெற்று வருகின்றது. இதன்படி நேற்று அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்தில் கூட்டம் நடைப்பெற்றது.

    கூட்டத்திற்கு தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:-

    முருங்கைக்கீரை வைத்து வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்க தோட்டக்கலை துறை அதிகாரிகள் பயிற்சி அளிக்க வேண்டும். மா, பலா, வாழைப்பழங்கள் ரசாயன பொருட்களைக் கொண்டு பழுக்க வைத்து விற்பனை செய்யப்படும் வியாபாரிகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அணைக்கட்டு சுற்றியுள்ள உள்ள பகுதிகளில் கரும்பு தோட்டங்கள் வெயில் காலத்தால் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இதனால் அணைக்கட்டு பகுதியில் ஒரு தீயணைப்பு நிலையம் கொண்டு வர வேண்டும். விவசாய நிலங்களில் காலி மது பாட்டில்கள் வீசுவது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட ஆட்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

    இதுகுறித்து தாசில்தார் ரமேஷ் பேசுகையில், விவசாயிகள் வைத்த புதிய கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×