கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு

பொதுமக்கள் சாலை மறியல்வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு
கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு
Published on

கே.வி.குப்பம்:

கே.வி.குப்பத்தை அடுத்த சென்னகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் சங்கர். இவர் மீது பட்டா மாற்றம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் புகார்கள் வழங்கப்பட்டது. இந்த முறைகேடுகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தையும் நடத்தினர்.

இதற்கிடையில் சங்கர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடியாத்தத்திற்கு இட மாறுதல் செய்யப்பட்டார். குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் விசாரணை செய்து கிராம நிர்வாக அலுவலர் சங்கரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com