என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இல்லம் தேடி பார்சல் சேவை திட்டம் தொடக்கம்
    X

    இல்லம் தேடி பார்சல் சேவை திட்டம் தொடக்கம்

    • கண்காணிப்பாளர் தகவல்
    • அஞ்சல், ரெயில்வே துறை இணைந்து நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபா லன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அஞ்சல்துறை மற்றும் ரெயில்வே துறை இணைந்து 'உங்கள் இல்லம் தேடி பார்சல்' சேவையை குறைந்த செலவில் பூர்த்தி செய்ய ஒருங்கிணைந்த பார்சல் சேவை திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.

    இத்திட்டத்தில் 35 கிலோவுக்கு மேல் எடை கொண்ட பொருட்கள் பார்சல் சேவை வாயிலாக தங்கள் இல்லத்தில் தொடங்கி தபால் துறையின் மூலமாக இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில்கள் வழியாக உங்கள் பொருட்கள் பாது காப்பாக கொண்டு செல்லப்படும்.

    வேலூரில் இயங்கும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலை கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம். பார்சல் களை சேகரிப்பது முதல் வாடிக்கையாளர்களுக்கு பட்டு வாடா செய்யும் வரை பணிகளை தபால்துறை மேற்கொள்ளும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×