என் மலர்
வேலூர்
- வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 பவுன் நகைகள், ரூ.3.90 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
வேலூர்:
காட்பாடி அடுத்த சேனூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் டெல்லி. இவர் பீடி மண்டி நடத்தி வருகிறார். இவரது மனைவி கவுரி.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஜாப்ராபேட்டையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 11 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 பவுன் நகைகள், ரூ.3.90 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து கவுரி விருதம்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையின் போது இதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கவுரியின் வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்ததாக தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அவர் நகை, பணம் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மாணவரின் வீட்டு மாட்டு கொட்டகையில் பையில் பதுக்கி வைத்திருந்த நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு
- சாலை சேதம் அடைந்துள்ளதால் நடந்து செல்பவர்கள் அவதி
வேலூர்:
வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் சுமதி மனோகரன் தலைமையில் பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சத்துவாச்சாரி கெங்கையம்மன் ேகாவில் வைகாசி மாத திருவிழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது.
சத்துவாச்சாரி 18-வது வார்டில் உள்ள பள்ளி தெருவில் சுமார் ஆயிரம் மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளி உள்ளது. இந்த சாலை சேதம் அடைந்துள்ளதால் நடந்து செல்பவர்கள் அவதியடைகின்றனர்.
கடந்த ஆண்டு திருவிழாவுக்கு முன்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் பார்வையிட்டுச் சென்றனர். தெருக்களை சீரமைத்து தருவதாக கூறியிருந்தனர்.
இது தொடர்பாக பல போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த ஆண்டாவது கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழாவுக்கு முன்பாக தெருக்களை சீரமைத்து தர வேண்டும் இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- மனைவி, மகனை கண்டுபிடித்து தரக்கோரிக்கை
- நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
பேரணாம்பட்டு அடுத்த கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவர் மனு அளிக்க வந்திருந்தார். அவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி அளித்தனர். வாலிபர் தீ குளிக்க முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ராஜீவ் காந்தி கூறுகையில்:-
எனது மனைவி சகுந்தலா (வயது 32 ), மகன் புகழ் ஆகியோர் கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டனர். அவர்களை மீட்டு தரக்கோரி பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என கூறினார். இதனையடுத்து அவரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அழைத்து சென்றனர். அவர் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
- அடுத்த மாதம் 18-ந் தேதி வரை நடக்கிறது
- அழகுசாதனப் பொருட்கள் உள்பட எல்லா வகையான பொருட்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன.
வேலுார்:
வேலுார் கோட்டை மைதானத்தில் நடக்கும் 'தாஜ்மஹால் பொருட்காட் சி'யை, மக்கள் குடும்பத் துடன் கண்டுகளித்து வரு கின்றனர். மக்கள் ஆதரவை பெற்ற இந்த பொருட் காட்சி, அடுத்த மாதம் 18-ம் தேதி வரை நடக்கிறது.
ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை, கண் நம் முன்னே நிறுத்தும்வகை யில், இங்கு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு, மக் கள் பார்வையிட காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் மற் றும் பெரியவர்கள் விரும் பும் வகையில், ஸ்கைவீல் முதல் ரங்கராட்டினம் வரை எல்லா பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெற் றுள்ளன.
அதுமட்டுமின்றி, 100க்கு மேற்பட்ட ஸ்டால் களில், வீட்டுக்குத் தேவை யான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் முதல் அழகுசாதனப் பொருட்கள் வரை எல்லா வகையான பொருட்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன.
மேலும், டில்லி அப்ப ளம்,சோளாப்பூரி, மிளகாய், பஜ்ஜி, ஐஸ்கிரீம், பஞ்சு மிட்டாய் போன்ற உண வுப்பொருட்களும் விற் பனை செய்யப்படுகிறது.
மொத்தத்தில், இந்த கோடை விடுமுறையை குடும்பத்துடன் குதுா கலமாக மாக கொண்டாட, அரு மையான பொழுது போக்கு அம்சங்களுடன் இந்த பொருட்காட்சி அமைந் துள்ளது.
- அமிர்த மிருத்திஞ்ஜேஸ்வரர் பூஜை நடந்தது
- சீனந்தல் மடாலயத்தில் நடைபெற்றது
வேலூர்:
அகில பாரதீய விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீ ஆதி சிவலிங்காச்சாரிய குரு சுவாமிகள் ஆதீனம் ஸ்ரீநந்தல் மடாலயத்தில் அமிர்த மிருத்திஞ்ஜேஸ்வரர் பூஜையும், சீனந்தல் மடாலயத்தின் 7-வது பீடாதிபதியும் வீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகளின் 1264-ம் ஆண்டு குரு பூஜை விழாவும் கலசபாக்கம் வட்டம் காந்தப்பாளையத்தில் அமைந்துள்ள சீனந்தல் மடாலயத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு அபிஷேக ஆராதானைகள் நடைபெற்றன.
விஸ்வகர்ம ஜெகத்குரு 65-வது மடாதிபதி சிவ.சிவராஜ ஞானாச்சர்ய குரு சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. வேதபாட சாலையின் முதல்வர் சிவ.சிவஞானசேகரன் முன்னிலை வகித்தார்.
குருபூஜா விழாக்குழுவின் தலைவர் ஜி.விஸ்வநாதன் செய்தித் தொடர்பாளர் செ.நா.ஜனார்த்தனன், அபிஷேக உபயதாரர்கள் பங்கேற்றனர்.
- பல்வேறு மூலிகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம்
- அன்னதானம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தில் நடைப்பெறும் மிகப்பொிய திருவிழாவானது ஸ்ரீ உக்கிரகாளியம்மன் திருவிழா. இந்த ஆண்டு ஊர் பொதுமக்கள் சார்பில் திருவிழா நேற்று நடைபெற்றது.
காலையில் அம்மனுக்கு பல்வேறு மூலிகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைப்பெற்றது. அடுத்தபடியாக ஊர் முழுவதும் பொங்கல் கூடை எடுத்து தலைமீது பூகரகம் ஏந்தி பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், கோலாட்டம், நையாண்டி, கரகாட்டம், சிலம்பாட்டம், தாரைதப்பட்டைகள் முழங்கி கரகம் கோவிலை வந்தடைந்தது.
சன்னதியில் பொங்கல் வைத்து படையலிட்டு ஆடு, கோழிகள் என பலிகொடுத்து வழிப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை தொடர்ந்து அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
- வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திருவிழாக்களில் ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் அரங்கேறி வருகிறது.
வேலூர்:
வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை தொடர்ந்து அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
இந்த திருவிழாக்களில் சாமி ஊர்வலத்தின் போது கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், சாகச நிகழ்ச்சிகள், மேள வாத்தியங்கள் என பொதுமக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தற்போது வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திருவிழாக்களில் ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் அரங்கேறி வருகிறது.
நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராம பகுதிகளிலும் இந்த கலைநிகழ்ச்சி ஏட்டிக்கு போட்டியாக நடத்துகின்றனர்.
இதனை காண சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி, ஆடல் பாடல் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இரவு 7 மணி அளவில் தொடங்கிய இந்த கலை நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நடந்தது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 25 பேர் நடனமாடினர். இதனை காண்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமானோர் வந்திருந்தனர்.
இந்த நடன கலை நிகழ்ச்சியில் பெண்கள் அரை, குறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடியது மட்டுமின்றி சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றையும் செய்து காண்பித்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் முகம் சுழித்ததோடு, ஆபாசமாக இருப்பதாக கூறி நிகழ்ச்சியின் பாதியில் எழுந்து சென்றனர்.
தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரம் இருந்தும் போலீசார் அதனை கண்டும், காணாமல் இருந்தனர். மேலும் போலீசாரும் பார்வையாளர்கள் போல் நடன நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகில் நின்று ஆபாசமாக நடனத்தை கண்டு ரசித்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் :-
திருவிழாவில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக தெருக்கூத்து நாடகம், வில்லுப்பாட்டு, இன்னிசை கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது 'ரெக்கார்டு டான்ஸ்' என அழைக்கப்படும் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சியும் அதிகளவில் நடத்தப்படுகிறது.
திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட இந்த நடன நிகழ்ச்சியில் பக்தி பாடல்கள் மற்றும் பாரம்பரிய விழிப்புணர் பாடல்கள் இடம் பெற்றிருக்கும் என நம்பி வந்தோம்.
ஆனால் இங்கு ஆபாச நடன நிகழ்ச்சி மட்டுமே நடந்தது. பெண்களே கையில் போதை பொருட்களை கையில் வைத்து சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்று அநாகரிகமாக நடனமாடினர்.
இது போன்ற நடன நிகழ்ச்சிகளால் அடுத்த தலைமுறை போதைப் பழக்கத்திற்கு ஆளாகும் அபாயநிலை உள்ளது என்றனர்.
- கோடை முகாம் நடந்தது
- பரதநாட்டிய பயிற்சி பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளது
வேலூர்:
வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி அருகே உள்ள மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் செம்பருத்தி கலை இலக்கிய அமைப்பு சார்பில் கோடை முகாம் இன்று தொடங்கியது.
முகாமிற்கு மாவட்ட நூலக அலுவலர் பழனி தலைமை தாங்கினார்.
கண்காணிப்பாளர் சிவகுமார் மைய நூலகர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் வேலூரை சேர்ந்த 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நீதிமொழி என்பவர் நீதி போதனை கதைகள், பாடல்களை பாடுவது குறித்து பயிற்சி அளித்தார்.
நாளை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மாணவர்களுக்கு யோகா பயிற்சி பரதநாட்டிய பயிற்சி பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் தர்ஷினி வாசுகி தேவராஜ் கல்வி கவியரசு பானு ரேகா அரிமார்த்தன பாண்டியன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.
- மார்க்கெட்டுக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது
- வியாபாரிகள் வேதனை
வேலுார்:
வேலுார் நேதாஜி காய் கறி மார்க்கெட்டில், வரத்து குறைவால் கத்திரிக்காய் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது.
வேலுார் நேதாஜி காய் கறி மார்க்கெட்டுக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காய் கறி கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது.
அதேநேரம், இப்போது தெருக்கள்தோறும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும், தலையில் சுமந்து சென்றும் காய்கறி விற்கின்றனர். மேலும், சாலை களின் அருகில் ஆங்காங்கே தார்ப்பாய் விரித்தும் காய் கறி விற்கப்படுகிறது.
இதனால், வேலுார் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வரு வோர் எண்ணிக்கை நாளுக் குநாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், அங் குள்ள வியாபாரிகள், தின மும் ஏராளமாக வரக்கூடிய காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் திணறு கின்றனர்.
இந்நிலையில், வேலுா ரில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து காணப்பட்ட போதிலும், வரத்து குறைவால் கத்தரிக்காய் கிலோ 80 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.
வேலுார் நேதாஜி மார்க் கெட்டில் மற்ற காய்கறிகளின் நேற்றைய விலை விவரம் (கிலோவில்):-
தக்காளி 10, வெங்காயம் - 20, சாம் பார் வெங்காயம்- 70; உரு ளைக்கிழங்கு - 18, கேரட் -40, பீட்ரூட் – 25, அவ ரைக்காய் - 50, முருங்கைக் காய் - 40, பீன்ஸ் - 40 முதல் 60 ரூபாய்க்கும், பூண்டு-70 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
- மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் போது விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
காட்பாடி அடுத்த லத்தேரி, வட விரிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மார்கபந்து (வயது83). இவர் ஆட்டுக்கிடாய் ஒன்றை பாசமாக வளர்த்து வந்தார்.
தான் வளர்க்கும் ஆட்டு கிடாவை தினமும் மேச்ச லுக்காக வயல்வெளிக்கு ஒட்டி செல்வது வழக்கம்.
நேற்று மாலை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் போது ஆட்டு கிடா எதிர்பாராத விதமாக திடீரென மார்கபந்தை முட்டி தள்ளியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த மார்க்க பந்து சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடுகளில் குப்பைகள் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
- இல்லாதவர்கள் எடுத்து செல்லலாம்
வேலூர்:
தமிழகத்தில் 'தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நகர்ப்புறம் 2.0 எனும் திட்டத்தின் கீழ் 'ஆர்ஆர்ஆர்' மையங்கள் நேற்று தொடங்கப்பட்டன.
அதன்படி, வேலுார் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும், அந் தந்த சுகாதார அலுவலர்கள் தலைமையில், இந்த மையங்கள் தொடங்கப்பட்டன.
மாநகராட்சி 2வது மண்ட லத்தில், சுகாதார அலுவலர் லுார்துசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாந கராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.
இதுகுறித்து, மாநகர நல அலுவலர் கணேசனிடம் கேட்டபோது கூறியது: அவர் மக்கள் தாங்கள் பயன் படுத்திய பொருட்களை, அவ்வப்போது தங்கள் தேவை மற்றும் வசதிக்கு ஏற்ப கழிவுகளாக அப்புறப் படுத்துகின்றனர். இதனால், மாநகரில் கழிவுகள் உற்பத்தி என்பது தினமும் அதிகரித்து வருகிறது. அதேநேரம், இவற்றில் பெரும்பாலா னவை மீண்டும் பயன்ப டுத்தக்கூடியவை. மேலும், ஏழ்மை நிலையில் உள்ள வர்கள், இந்த பொருட்களை வாங்க இயலாத நிலையில் உள்ளனர்.
இந்த நிலையை மாற்றி யமைக்க, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5, மக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும்விதமாக, 'தூய்மை பாரதம்' இயக் கத்தின்கீழ், தமிழக அரசால் 'என் வாழ்க்கை-என்சுத்த மான நகரம்' எனும் தலைப் பின் கீழ், மே 20ம் தேதி (நேற்று) முதல் ஜூன் 5ம் தேதி வரை மக்கள் கூடும் இடங்களில் 'ஆர்ஆர்ஆர்' (ரெடியூஸ் தேவையற்ற பொருட்கள் வாங்குவதை குறைத்தல், ரீ யூஸ்- வாங்கியபொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்து தல்,ரீசைக்கிள் மறுசுழற்சி செய்து பயன்ப டுத்துதல்) மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதன் முன்னோட்ட மாக, வேலுார் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் 4 மண்டல் அலுவலகங்க ளில் இந்த 'ஆர்ஆர்ஆர் மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இங்கு பலதரப் பட்ட மக்களிடமிருந்தும் சேகரிக்கப்படும் துணிகள். புத்தகங்கள் ஆகியவற்றை தேவைப்படுபவர்கள் எடு த்து பயன்படுத்திக் கொள் ளலாம். அதேபோன்று, மின் சாதன பொருட்களை இ- கழிவு சேகரிப்பாளர்கள் மூலம் எடுத்துச்செல்லப் இவ்வாறு அவர் தெரி பட்டு மறுசுழற்சிக்கு பய ன்படுத்தப்படும். உதாரண மாக, ஒரு டியூப்லைட்டில் உள்ள அலுமினியம் மற்றும் கண்ணாடிகளை பிரித்து, மறுசுழற்சி செய்து, புதிய தாக பயன்படுத்தப்படும். அதுபோன்றே மற்ற மின் சாதன பொருட்களும் தேவைக்கேற்ப பயன்படுத் தப்படும்.
இதன்மூலம், வீடுகளில் தேவையற்ற பொருட்கள் தங்காது, சாலையிலும் குப் பைகள் தேங்காது. எனவே, மக்கள் மேற்குறிப்பிட்ட மையங்களை பயன்படுத் திக் கொண்டு, மாநகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க முன்வரவேண்டும்.
- 300-பேர் கலந்துக கொண்டனர்
- கள்ளசாராய மரணத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி, மாவட்ட மகளிர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மகளிர் அணி தலைவி செல்வி தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர்.மனோகரன் முன்னிலை வகித்தார். கார்த்தியாயினி கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் பாபு, ஜெகன் நாதன், மகளிர் அணி பொதுச் செயலாளர் கீதா,மஞ்சு, ஷகிலா, மகளிர் அணி துணை தலைவர்கள் மலர்க்கொடி. மகளிர் அணி செயலாளர்கள் ஜோதி, சுதா, ராதா, பிரியா,மாநில செயற்குழு சாந்தி, மாநில வணிக பிரிவு செயலாளர் இளங்கோ, தேசிய பொதுகுழு பிச்சாண்டி, அரசு தொடர்பு தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் ஜெகன், 2-வது மண்டல தலைவர் கோபி மற்றும் சுமார் 300-பேர் கலந்துக கொண்டனர்.
கள்ளசாராய மரணத்துக்கு காரணமானதாக தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.






