என் மலர்
நீங்கள் தேடியது "உக்கிரகாளியம்மன் திருவிழா"
- பல்வேறு மூலிகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம்
- அன்னதானம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தில் நடைப்பெறும் மிகப்பொிய திருவிழாவானது ஸ்ரீ உக்கிரகாளியம்மன் திருவிழா. இந்த ஆண்டு ஊர் பொதுமக்கள் சார்பில் திருவிழா நேற்று நடைபெற்றது.
காலையில் அம்மனுக்கு பல்வேறு மூலிகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைப்பெற்றது. அடுத்தபடியாக ஊர் முழுவதும் பொங்கல் கூடை எடுத்து தலைமீது பூகரகம் ஏந்தி பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், கோலாட்டம், நையாண்டி, கரகாட்டம், சிலம்பாட்டம், தாரைதப்பட்டைகள் முழங்கி கரகம் கோவிலை வந்தடைந்தது.
சன்னதியில் பொங்கல் வைத்து படையலிட்டு ஆடு, கோழிகள் என பலிகொடுத்து வழிப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






