என் மலர்
நீங்கள் தேடியது "கெங்கையம்மன் தேர்"
- கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு
- சாலை சேதம் அடைந்துள்ளதால் நடந்து செல்பவர்கள் அவதி
வேலூர்:
வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் சுமதி மனோகரன் தலைமையில் பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சத்துவாச்சாரி கெங்கையம்மன் ேகாவில் வைகாசி மாத திருவிழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது.
சத்துவாச்சாரி 18-வது வார்டில் உள்ள பள்ளி தெருவில் சுமார் ஆயிரம் மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளி உள்ளது. இந்த சாலை சேதம் அடைந்துள்ளதால் நடந்து செல்பவர்கள் அவதியடைகின்றனர்.
கடந்த ஆண்டு திருவிழாவுக்கு முன்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் பார்வையிட்டுச் சென்றனர். தெருக்களை சீரமைத்து தருவதாக கூறியிருந்தனர்.
இது தொடர்பாக பல போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த ஆண்டாவது கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழாவுக்கு முன்பாக தெருக்களை சீரமைத்து தர வேண்டும் இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.






