என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலத்திற்கான 3 திருக்குடைகள் மேளதாளம் முழங்க சடைசுவாமி ஆசிரம நிர்வாகி திருபாத சுவாமிகள் முன்னிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒப்படைத்தனர்.
    வேலூர் அண்ணாமலையார் திருக்குடை சமதி மற்றும் ஜலகண்டேஸ்வரர் தர்ம ஸ்பாதனம் சார்பில் 2-வது ஆண்டாக திருக்குடை வைபோக விழா நேற்று நடத்தப்பட்டது. இதையொட்டி தலா ரூ.13 ஆயிரம் செலவில் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு ஒரு குடையும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு 3 குடைகளும் வழங்கப்பட்டது.

    வேலூரிலிருந்து 3 வேன்களில் திருக்குடைகளை ஏற்றி வந்த அண்ணாமலையார் திருக்குடை சமதியினர் நேற்று பிற்பகல் மேளதாளம் முழங்க சடைசுவாமி ஆசிரம நிர்வாகி திருபாத சுவாமிகள் முன்னிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒப்படைத்தனர். இந்த குடைகளை கோவில் கண்காணிப்பாளர் வேதமூர்த்தி, மணியக்காரர் செந்தில் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அண்ணாமலையார் திருக்குடை சமதியின் நிறுவனத் தலைவர் சிவபிரத்யேங்கரா சுவாமிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. 3,500 கிலோ நெய் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றபட உள்ளது. மகா தீபமானது கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றபடும்.

    மகா தீபம் ஏற்ற சுமார் 5 அடி உயரம் கொண்ட செம்பினால் தயார் செய்யப்பட்ட தீப கொப்பரையில் ஏற்றப்படும். 29-ந்தேதி ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் பக்தர்களுக்கு காட்சி தரும். மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது.

    இந்த 3,500 கிலோ நெய் திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிர்வாகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெய் நேற்று மாலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக ராஜகோபுரம் அருகே தனி கவுண்ட்டர் அமைத்து ஒரு கிலோ நெய் ரூ.250-க்கும், ½ கிலோ நெய் ரூ.150-க்கும், ¼ கிலோ நெய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    வழக்கமாக விழா நாட்களில் காலை மற்றும் இரவில் சாமி மாட வீதியுலா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாட வீதியில் சாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் 5-ம் பிரகாரத்தில் சாமி உலா நடைபெற உள்ளது. இதற்காக சாமி உலாவின் போது பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைக்கும் பணிகள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி (தீபத் திருநாளான 29-ந்தேதி தவிர்த்து) வரை ஆன்லைன் மூலம் நுழைவு சீட்டு பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனையடுத்து நேற்று ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் நுழைவு சீட்டு பெற்று வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவரும் ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    தீபத்திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரம் செய்யப்படும். திருக்கல்யாண மண்டபத்தில் பல்வேறு வண்ண துணிகள் மற்றும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் சில பக்தர்கள் கோவில் வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு எல்லை தெய்வ வழிபாடு 3 நாட்கள் நடைபெறும். அதன்படி, நேற்று திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    வழக்கமாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியுலா வருவார். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாடவீதியுலா ரத்து செய்யப்பட்டதால் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்திலேயே உலா வந்தார். அப்போது கோவில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

    துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் சில பக்தர்கள் கோவில் வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    சிறுவன் விழுங்கிய ஒரு ரூபாய் நாணயம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது.
    திருவண்ணாமலை:

    செங்கம் தாலுகா காஞ்சி அரிதாரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகன் வேலு (வயது 5). இவன், நேற்று முன்தினம் வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி உள்ளான். இதையறிந்த வேலுவின் பெற்றோர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு உடனடியாக மருத்துவர்கள் சிறுவனுக்கு சிகிக்சை மேற்கொண்டனர். நுண்கதிர் பரிசோதனையில் சிறுவனின் தொண்டை பகுதியில் நாணயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து இரவு 7 மணிக்கு சிறுவனுக்கு மறுபரிசோதனை செய்யப்பட்டு, சிறுவனுக்கு அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோப் மூலமாக சிறுவன் விழுங்கிய நாணயத்தை டாக்டர்கள் வெளியில் எடுத்தனர். பின்னர் சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது சிறுவன் நலமாக இருக்கிறான். அறுவை சிகிச்சையின்றி சிறுவன் விழுங்கிய நாணயத்தை அகற்றிய டாக்டர் குழுவினரை மற்ற டாக்டர்கள் மற்றும் சிறுவனின் உறவினர்கள் பாராட்டினர்.
    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
    ஆரணி:

    ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியை சேர்ந்தவர் முக்தாபாய் (வயது50). பூ வியாபாரி. இவரது வளர்ப்பு மகள் மீனா(18).

    இவர்களது வீடு அருகே ஜானகிராமன் (45) என்பவர் அவரது மனைவி காமாட்சி (35), மகன்கள் சுரேஷ்(15), ஹேமநாத் (13) ஆகியோருடன் வசித்து வந்தார்.

    இவர்களது பக்கத்து வீட்டில் சந்திரம்மாள் (65) என்பவர் வசித்து வந்தார்.

    முக்தாபாய் கடந்த 15-ந் தேதி காலை 7 மணிக்கு டீ போடுவதற்காக சிலிண்டரை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் சிலிண்டரில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில் முக்தாபாயின் வீடு முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. ஜானகிராமன், சந்திரம்மாள் ஆகியோரின் வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தன.

    இதில் காமாட்சி, அவரது மகன் ஹேமநாத், சந்திரம்மாள் ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    படுகாயமடைந்த முக்தாபாய், மீனா, ஜானகிராமன், சுரேஷ் ஆகிய 4 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி முக்தாபாய், அவரது வளர்ப்பு மகள் மீனா ஆகிய இருவரும் இன்று காலை பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) துர்க்கை அம்மன் உற்சவம் நடக்கிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். விழா நாட்களில் சாமி மாட வீதியுலா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாட வீதியில் நடைபெறும் சாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் உற்சவ நிகழ்ச்சிகளின் போது பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    தீபத்திருவிழாவின் தொடக்கமாக எல்லை தெய்வ வழிபாடு 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கையம்மன் உற்வசம் நடக்கிறது. வழக்கமாக துர்க்கை அம்மன் உற்சவத்தின் போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதி கிடையாது.

    தொடர்ந்து நாளை (புதன்கிழமை) பிடாரியம்மன் உற்சவமும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) விநாயகர் உற்சவமும் நடக்கிறது. 20-ந்தேதி காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து காலையிலும், இரவிலும் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது. 3-ம் நாள் விழாவான 22-ந்தேதி காலையில் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. 6-ம் நாள் விழாவான 25-ந்தேதி காலையில் 63 நாயன்மார்கள் உற்சவ உலா நடக்கிறது.

    7-ம் நாள் விழா அன்று (26-ந்தேதி) தேரோட்டம் நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகள் உற்சவம் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. 8-ம் நாள் விழா 27-ந்தேதி மாலையில் பிச்சாண்டவர் உற்வசம் நடக்கிறது.

    கார்த்திதை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 29-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மதியம் சுப்ரமணியர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீப தரிசனம் மண்டம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவ உலாவும் நடக்கிறது.

    மேலும் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் 30-ந் தேதியில் இருந்து 2-ந்தேதி வரை 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடக்கிறது. இறுதியாக 3-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் கோவில் வளாகத்திற்குள் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் மூலம் செய்யப்பட்டு வருகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்கார்த்திகை தீப திருவிழாவின்போது தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் தரிசனம் செய்யலாம்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3-ந் தேதி வரை (29-ந் தேதி தவிர) ஒருநாளைக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்திட கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in என்ற கோவில் இணையதளத்தில் ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதில் கேட்கும் விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் நுழைவு சீட்டு பதிவு செய்பவர்களுக்கு கோவில் நிர்வாகம் நிபந்தனைகள் விதித்து உள்ளது.

    அதாவது 59 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் தொற்று உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    கோவிலுக்குள் நுழையும்போது ஆதார் அட்டை நகல் அவசியம் கொண்டு வர வேண்டும். பக்தர்கள் பாரம்பரிய உடை மட்டுமே அணிந்து வர வேண்டும். ஆன்லைன் நுழைவு சீட்டு கிழக்கு ராஜகோபுரத்தில் பரிசோதனை செய்யப்படும். தங்கள் சீட்டில் குறிப்பிட்டு இருக்கும் நேரத்தை விட 15 நிமிடத்திற்கு முன்பாகவே வர வேண்டும். காலதாமதம் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. கோவிலின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை கருவி வைக்கப்பட்டு இருக்கும். பக்தர்கள் பரிசோதனைக்கு பின்னர் நோய் அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

    சிலைகளை தொட அனுமதியில்லை. மேலும் பக்தர்கள் வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    இந்த தகவலை அருணாசலேஸ்வரர் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் குடிமி குடிசை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 51), பஸ் டிரைவர். இந்த நிலையில் சம்பவத்தன்று ஏழுமலைக்கும், அவரது மனைவி சாந்திக்கும் (46) குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சாந்தி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பள்ளிகொண்டாப்பட்டு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 46), தொழிலாளி. இவர், அந்த பகுதியில் உள்ள நிலத்தின் வழியாக நடந்து சென்றார். அப்போது நிலத்தின் மேலே சென்ற மின்கம்பி அறுந்து சரவணன் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழாவையொட்டி மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தொடங்கியது.
    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறும். இதில், கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருவிழா முக்கியமான விழாவாகும். இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவானது 10 நாட்கள் தொடர்ந்து வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.

    இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் கோவில் கருவறை எதிரே பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    மகா தீபம் ஏற்றுவதற்கு 6 அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி தொடங்கியது. மண்ணு நாட்டார் குடும்பத்தினர் கொப்பரை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீபத்திருவிழாவின் போது 10 நாட்கள் காலை மற்றும் இரவில் சாமி மாட வீதியுலா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாட வீதியில் நடைபெறும் சாமி உலா நிகழ்ச்சிகள் ஆகம விதிகளின் படி கோவில் வளாகத்திற்குள்ளேயே நடத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    அதன்படி, விழா நாட்களில் சாமி உலா செல்லும் வாகனங்கள் மற்றும் வெள்ளி விமானங்கள் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் மேலும் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதி, பாளையங்கோட்டை யூனியன் பகுதிகளில் தலா 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் மானூர், ராதாபுரம், களக்காடு ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 467 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 15 ஆயிரத்து 58 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் இதுவரை 135 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.
    ×