என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ஆரணி ஸ்ரீ கைலாதநாதர் கோவிலில் வழிபாடு
    • அன்ன தானம் வழங்கப்பட்டது

    \ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கோட்டை வீதியில் பழமைவாய்ந்த அறம்வளம் நாயகி சமேத கைலாதநாதர் கோவில் உள்ளது.

    நவராத்திரி 6-வது நாளை முன்னிட்டு கஜலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    பக்தர்களால் கொண்டு வரப்பட்ட சுமார் 45 லட்சம் புதிய ரூபாய் நோட்டு மற்றும் 200 பவுன் நகை மூலம் தொடர்ந்து 9 மணி நேரம் அலங்காரம் செய்து கஜலட்சுமி அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    கஜலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் சுற்று பகுதிகளில் உள்ள வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர். இறுதியில் கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
    • திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மாலை திருவண்ணாமலைக்கு வருகிறார்.

    அவருக்கு மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோ.காட்டுக்குளம் பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இதனையடுத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகின்றார்.

    தொடர்ந்து மாலை 4 மணியளவில் திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் தி.மு.க. சார்பில்

    வடக்கு மண்டல அளவிலான வாக்குசாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 13 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுக்கின்றார்.

    அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த மோரணம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 57). சமையல் மாஸ்டர். இவர் நேற்று முன்தினம் இரவு வெம்பாக்கம் கூட்ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பாபு பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த மோரணம் போலீசார் பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விசைத்தறியில் கைத்தறி பட்டு புடவை நெய்வதாக புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆரணி:

    ஆரணி என்றாலே பட்டு பெயரெடுத்த ஊராகும் சில மாதங்களாக கைத்தறி பட்டு போல விசைத்தறியில் பட்டுபுடவை நெய்து கைத்தறி பட்டு என விற்பனை செய்யபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கூறி நெசவாளர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு கைத்தறி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் ஆரணி அருகே சுந்தரீகம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட சக்தி நகர் பகுதியில் விசைத்தறியில் கைத்தறி பட்டு புடவை நெய்வதாக புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது விசைத்தறி நெய்யப்படும் இடத்தை அதிகாரிகள் தேடி கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த நெசவாளர் பாபு என்பவர் விசைத்தறி நெய்யப்படும் இடத்தை அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது. இதனை கண்ட விசைத்தறி நெசவாளர் எங்கள் வீட்டை அதிகாரிகளிடம் காட்டி கொடுக்கின்றாயா என கூறி சிலர் பாபுவை சராமரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் பாபு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 18-ந் தேதி வரை பதிவு செய்யலாம்
    • கலெக்டர் தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

    தமிழ்நாடு அரசு சார்பில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டில் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் மூலம் எவ்வித நிபந்தனைகள் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்கும் போது ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் கல்வி நிறுவனம் மற்றும் கல்லூரிகளில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை அனுகலாம்.

    இணையதளம் மூலம் கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் விண்ணப்பங்களை அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 18-ந் தேதி வரை பதிவு செய்யலாம்.

    மேலும் கூடுதல் விவரங்களை பெற கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி தேவையான விவரங்களை பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    • அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை
    • திருவண்ணாமலைக்கு 22-ந்தேதி வருகிறார்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலைக்கு வருகை தரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க அனைவரும் அலைகடலென ஆர்ப்பரித்து வருமாறு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    திருவண்ணாமலையில் 22-ந் தேதி நடைபெற உள்ள வட தமிழக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 21-ந் தேதி மாலை 6 மணிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வருகிறார்.

    எல்லோருக்கும் எல்லாம் மற்றும் இட ஒதுக்கீடு எனும் சமூக நீதியை நடை முறைப்படுத்திய சமூக நீதி காவலர், மகளிர், மாணவர்கள், இளை ஞர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோர் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை தீட்டி அதனை திறம்பட செயல்படுத்தி இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலிக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோ காட்டுக்குளம் பகுதியில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், என அனைவரும் அணி திரண்டு வந்து எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை `அருணாசலேசுவரர் கோவில் முன்பு புதிதாக கட்டப்பட உள்ள கடைகளுக்கான கட்டுமான பணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை அடிக்கல் நாட்டினார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.6 கோடியே 40 லட்சம் மதிப்பில் கடைகள் கட்டப்பட உள்ளது.

    புதிய கடைகள் கட்டுவதற்கான கட்டுமான பணியை இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி, தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், நகரமன்ற துணை தலைவர் சு.ராஜாங்கம், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் டிஎம் சண்முகம், ராஜசேகர், தாலுகா வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.ரவிச்சந்திரன், கோவில் மணியம் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காசாளர் அறையில் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் வங்கியில் இருந்த பணம், நகைகள் தப்பின.

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் இருந்து வேட்டவலம் செல்லும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது.

    இந்த வங்கியில் நேற்று இரவு சுமார் 1 மணி அளவில் திடீரென புகை வெளியே வந்தது. இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள் கீழ் பென்னாத்தூர் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ஆனால் வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தனர். அப்போது வங்கியின் காசாளர் அறையில் இருந்து தீ எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அதனை ஜன்னல் வழியாக அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதையடுத்து முன்பக்க கதவை தீயணைப்பு வீரர்கள் உடைத்து கொண்டு உள்ளே சென்று தீயை அணைத்தனர். காசாளர் அறையில் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த தீ விபத்தில் காசாளர் அறையில் இருந்த கம்ப்யூட்டர், பணம் எண்ணும் எந்திரம் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி நாசமானது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து இதர ஆவணங்களை அங்கிருந்து பாதுகாப்பாக எடுத்துச்சென்றனர்.

    உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் வங்கியில் இருந்த பணம், நகைகள் தப்பின. மேலும் இந்த தீ விபத்து குறித்து கீழ் பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து காரணமாக இந்த வங்கிக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அவசர காலத்தில் சோமாசிபாடி கிளை வங்கியில் தற்காலிகமாக பணம் பரிவர்த்தனை செய்து கொள்ள அறிவிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • நவராத்திரி 4-ம் நாள் ஏற்பாடு
    • அம்மன் திருவீதி உலா நடந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது.

    இதனை முன்னிட்டு கோவில் மண்டபத்தில உற்சவ அம்மன் கொலு வைத்து தினமும் பார்வதி அலங்காரமும், காமாட்சி, மாவடி சேவை, துர்காதேவி, ஸ்ரீஅன்னபூரணி, தனலட்சுமி, சரஸ்வதி, திருஅவதாரம் என பல்வேறு அலங்காரம் செய்யப்படுகிறது.

    அதன்படி நவராத்திரி 4-வது நாளான நேற்று ரேணுகாம்பாளுக்கு மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து மாலை பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்துள்ளனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது.

    செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் நித்யா தீர்மானங்கள் வாசித்தார்.

    இக்கூட்டத்தில் துணை தலைவர் வி.குமார் உள்பட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசுகையில்:-

    கண்ணமங்கலம் சுடுகாடு செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    இதில் கண்ணமங்கலம் பேரூராட்சி-காட்டுக்காநல்லூர் சாலை சந்திப்பில் ரூ.4.35 லட்சம் மதிப்பில் மினி உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கவும், ரூ.7.26 லட்சம் மதிப்பில் டிராக்டர் வாங்குவது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சுகாதார மேற்பார்வையாளர் வெற்றி நன்றி கூறினார்.

    • நவம்பர் மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னே ற்பாடு பணிகள் குறித்த ஆலோ சனைக் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 17-ந் தேதி வெள்ளிக்கிழமை அதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    23-ந் தேதி வியாழக்கி ழமை தேரோட்டம் நடைபெறும். 26-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    அன்று மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அண்ணாமலையார் கோவில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளியதும் 2668 உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    கார்த்திகை தீப திருவிழாவிற்கு 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நகராட்சி சார்பில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்தல், கிரிவலப் பாதை மற்றும் திருவண்ணா மலை நகரில் சாலைகள் அமைத்தல், தூய்மை பணி செய்தல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிரிவலப்பாதையில் உள்ள ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணி செய்தல், கழிப்பறை வசதி செய்தல், கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், போக்கு வரத்தை சீர் செய்வது குறித்து ஆலோசிக்க ப்பட்டது. தீப தரிசனம் காண வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் மற்றும் ெரயில்களை இயக்குவது, மலை மீது ஏறும் பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவது, கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை முறைப்படு த்துதல், கோவில் மற்றும் கிரிவ லப்பாதையில் மருத்துவ முகாம்கள் அமைத்தல், அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணி வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு உறுப்பி னர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், நகராட்சி ஆணையாளர் ந.தட்சணா மூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பட்ட பகலில் கடத்தல் படுஜோராக நடைபெறுகின்றன
    • பொதுமக்கள் குற்றச்சாட்டு

    ஆரணி:

    ஆரணி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட விண்ணமங்கலம், வாழைப்பந்தல், தச்சூர், மருசூர், அகிலாண்டபுரம், உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆற்றுபடுக்கையில் இரவு பகலாக டிராக்டர் லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெற்று வருகின்றன.

    இது சம்மந்தமாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தாலும் கண்டு கொள்ளாமல் உள்ளதால் பட்ட பகலில் மணல் கடத்தல் படுஜோராக நடைபெறுகின்றன.

    இதனால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் போலீஸ், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிப்பதால் சில தினங்களில் 7 டிராக்டர் 5 லாரி 3 பொக்லைன் எந்தி ரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதனையடுத்து கல்பூண்டி செய்யாற்று படுக்கையில் பட்டப் பகலில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரி டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமிக்கு பொது மக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டன.

    ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில் வருவாய் துறையினர் நேரில் சென்று பொக்லைன், டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். வருவாய் துறையினரை கண்ட பொக்லைன் டிராக்டர் டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் டிராக்டரை பையூர் வி.ஏ.ஓ கார்த்தி ஒட்டி வந்து ஆரணி தாலுக்கா போலீசில் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×