அம்மனுக்கு 200 பவுன் நகை, 45 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்

ஆரணி ஸ்ரீ கைலாதநாதர் கோவிலில் வழிபாடு அன்ன தானம் வழங்கப்பட்டது
அம்மனுக்கு 200 பவுன் நகை, 45 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்
Published on

\ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கோட்டை வீதியில் பழமைவாய்ந்த அறம்வளம் நாயகி சமேத கைலாதநாதர் கோவில் உள்ளது.

நவராத்திரி 6-வது நாளை முன்னிட்டு கஜலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பக்தர்களால் கொண்டு வரப்பட்ட சுமார் 45 லட்சம் புதிய ரூபாய் நோட்டு மற்றும் 200 பவுன் நகை மூலம் தொடர்ந்து 9 மணி நேரம் அலங்காரம் செய்து கஜலட்சுமி அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

கஜலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் சுற்று பகுதிகளில் உள்ள வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர். இறுதியில் கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com