என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஆரணியில் அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
    ஆரணி, ஜன. 12-
    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கே.கே. நகர் மெயின் ரோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மகேஸ்வரி (வயது 62). இவருக்கு கிருஷ்ணகுமார் (34) என்ற மகனும், சத்யா என்ற மகளும்  உள்ளனர். மகனும், மகளும் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    இவர்களை பார்ப் பதற்காக மகேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர் கள் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் தெரிவித்தார். சொந்த ஊருக்கு வந்த கிருஷ்ணகுமார் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் குப்பம்மாள் (65). சில மாதங்களுக்கு முன்பு கணவன் இறந்ததால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று ஆரணி பாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டுக்குள் கொள்ளை யர்கள் புகுந்துள்ளனர். 

    பணம், நகை ஏதும் இல்லாததால் திரும்பி சென்றனர். திரும்பி வந்த குப்பம்மாள் வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    ஆரணி டவுன் புது காமூர் சாலையில் உள்ள அக்ரா பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிவேலு. இவருக்கு சொந்தமாக நூல் ஆலை ஒன்று உள்ளது. வழக்கம் போல் இந்த நூல் ஆலையை நேற்றிரவு பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் வழக்கமாக இன்று திறப்பதற்காக வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தது. ஆனால் எந்த பொருட்களும் திருடு போகவில்லை. இதுகுறித்து முனிவேலு ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். 

    இந்த 3 கொள்ளை முயற்சி புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    ஆரணி டவுன் பகுதியில் அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆரணியில் மஞ்சள் சாகுபடி குறைந்ததால் பொங்கல் அறுவடை பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    ஆரணி:

    இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் தான். மஞ்சள் சாகுபடி விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    மருத்துவ உபயத்திற்கும் மஞ்சள் பயன்படுவதாக அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மஞ்சள் வைகாசி மாதம் விதைக்கப்பட்டு தை மாதம் அறுவடை செய்யபடும் குறைவான தண்ணீர் கொண்டு மஞ்சள் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகையில் மஞ்சள் விற்பனை அமோகமாக இருப்பதால் விவசாயிகள் விளைச்சாலான மஞ்சளை தைமாதத்திற்கு முன்பு அறுவடை செய்வார்கள்.

    5 வகை கொண்ட மஞ்சள் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். நாட்டு மஞ்சள், சேலமஞ்சள், கோ கோ-5 உள்ளிட்ட 5 வகை மஞ்சள் உள்ளதாகவும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாட்டு மஞ்சள் விளைச்சல் அதிகளவில் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    மஞ்சள் சாகுபடி செய்யபடும் போது புள்ளி நோய், சுட்ட நோய், வேர் அழிவு நோய் கிழங்கு நோய் உள்ளிட்ட 4 வகையான நோய்கள் மஞ்சளை தாக்குகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகே அம்மாபாளையம், படவேடு, காட்டுகாநல்லூரி, அக்ராபாளையம், அய்யம்பாளையம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யபட்டுள்ளது.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த கனமழை யால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. 
    மேடான பகுதியில் மஞ்சள் விளைச்சல் நன்றாக உள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மஞ்சள் பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

    கனமழையால் இந்த வருடம் மஞ்சள் சாகுபடி பாதியளவு குறைந்துள்ள தாகவும் இதனால் விவாசயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    மஞ்சள் சாகுபடி நஷ்டத்தை போக்க காப்பீடு திட்டத்தை அறிமுக செய்ய வும் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.6500 முதல் ரூ.7000 வரையில் அரசு தற்போது வழங்குவதை தமிழக முதல்வர் தலையீட்டு குவிண்டாலுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மஞ்சள் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவண்ணாமலையில் மத்திய அரசு நிவாரணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    மத்திய அரசு மழையில் சேதமான பயிர்களுக்குநிவாரணம் வழங்காததை கண்டித்தும், மாநில அரசு வழங்கும் குறைந்தபட்ச நிவாரணம் யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றது  என்று தெரிவித்தும் விவசாயிகள் பொதுமக்களுக்கு பொரிகொடுக்கும் போராட்டம் நடத்தினர். 

    ஆர்ப்பாட்டத்தின் போது தலையில் பொரிபொட்டலத்தை வைத்துக் கொண்டு நின்றனர். இந்தப் போராட்டத்திற்கு புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இதில் 10&க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

    இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த தொடர் மழையால் சம்பா சாகுபடி மணிலா பயிர் வகைகள் தோட்ட பயிர் சேதம் ஆகி உள்ளது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய பார்வைக்கு பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களை பார்வையிட்டு 1876 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

     ஆனால் மத்திய அரசு இடைக்கால நீதி வழங்காத நிலையில் மாநில அரசு ரூ.122கோடி வெள்ள நிவாரண நிதி விடுவித்துள்ளது. இதன்மூலம் 2.65 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என அறிவித்துள்ளது.

    ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ள நிதியில் பாதிப்பு பரப்பளவு குறித்தும், பயனாளிகளுக்கு சராசரியாக ரூ.5 ஆயிரம் பங்கிட்டு வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளது. இந்த நிவாரணம் போதாதது.

    எனவே‌ மாநில அரசு,மத்திய அரசிடம் நிதி பெற்று கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் கிசான் நிதி மோசடி போல சாகுபடி செய்யாதவர்களுக்கு வங்கி கணக்கில் நிதி வழங்குகிறார்களா! என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அப்போது விவசாயிகள் சம்பத், சத்யராஜ், சின்ன பையன், ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
    மோடி பஞ்சாப் பயணம் குறித்து அவதூறு தகவல் பரப்புவதாக கலெக்டரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
    திருவண்ணாமலை:

    பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் குறித்து அவதூறு தகவல்களை பரப்பி அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில காங்கிரஸ் அரசை கலைப்பதற்கான முயற்சியில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபடுவதை கண்டித்தும், உண்மை நிலையை உணர்த்தும் வகையிலும் கவர்னருக்கு அனுப்ப கோரும் மனு மாவட்ட கலெக்டரிடம் காங்கிரஸ் கட்சியினர் வழங்குவார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி அறிவித்து இருந்தார். 

    இதைத்தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.பி.அண்ணாமலை, திருவண்ணாமலை நகரத் தலைவர் வெற்றி செல்வன் ஆகியோர் தலைமையில் திருவண்ணா மலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் மனுவை புகார் பெட்டியில் செலுத்துமாறு தெரிவித்தனர்.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் கலெக்டர் நேரில் சந்தித்து பிரதமர் மோடியின் பயணம் குறித்து அவதூறு தகவலை காங்கிரஸ் கட்சி மீது பரப்புவதை நிறுத்திக்கொண்டு மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த கோரி கவர்னருக்கு, கலெக்டர் மூலமாக மனு அளிக்க செல்வதாக தெரிவித்தனர். 

    இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
    வெம்பாக்கம் அருகே பஞ்.தலைவியின் கணவரை காரில் கடத்தி கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை (வயது50). இவரது மனைவி அதே கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

    அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கும் திருமலைக்கும் கடந்த 6 ஆண்டாக முன்பகை இருந்து வந்தது.

    நேற்று திருமலை அவரது நண்பர் சுப்பிரமணியுடன் மகாஜன பக்கம் சாலையிலிருந்து பெரும்புள்ளி மேடு கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று அங்கு ஒரு கார் வந்தது. காரில் இருந்த 4 பேர் கும்பல் திருமலை கத்தியால் மிரட்டி கடத்தி சென்றனர்.

    மடிப்பாக்கம் பாண்டியன் பக்கம் செல்லும் சாலையில் தோப்பில் பாழடைந்த மண்டபத்தில் அவரை அடைத்து வைத்தனர். அவர்களிடம் இருந்து திருமலை நைசாக தப்பி வந்துள்ளார்.

    இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் ராஜாராம் என்பவரை கைது செய்தனர்.இது தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    வெம்பாக்கம் அருகே பஞ்.தலைவியின் கணவரை காரில் கடத்தி கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை (வயது50). இவரது மனைவி அதே கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

    அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கும் திருமலைக்கும் கடந்த 6 ஆண்டாக முன்பகை இருந்து வந்தது. 

    நேற்று திருமலை  அவரது நண்பர் சுப்பிரமணியுடன் மகாஜன பக்கம் சாலையிலிருந்து பெரும்புள்ளி மேடு கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

    அப்போது திடீரென்று அங்கு ஒரு கார் வந்தது. காரில் இருந்த 4 பேர் கும்பல் திருமலை கத்தியால் மிரட்டி கடத்தி சென்றனர்.

    மடிப்பாக்கம் பாண்டியன் பக்கம் செல்லும் சாலையில் தோப்பில் பாழடைந்த மண்டபத்தில் அவரை அடைத்து வைத்தனர். அவர்களிடம் இருந்து திருமலை நைசாக தப்பி வந்துள்ளார். 

    இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சப்&இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் ராஜாராம் என்பவரை கைது செய்தனர். 

    இது தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 

    கலெக்டரின் இந்த புதிய உத்தரவு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதனால் கோவில் வரும் பக்தர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்பதற்கான சான்றுகளை கோவில் ஊழியர்கள் கேட்டு வருகின்றனர். 

    இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 

    இதனால் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே இன்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்னும் இரண்டு தடுப்பூசிகளை செலுத்தாத பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

    இதுதொடர்பாக கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. 

    இந்தநிலையில் அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். 

    அதோடு பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. 

    எனவே இன்று முதல் அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் கட்டாயம் அதற்கான சான்றிதழ் அல்லது செல்போனில் பெறப்பட்ட குறுஞ்செய்திகளை காண்பித்தால் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை மகளிர் போலீசார் விரைவில் கோவளம் பள்ளி விடுதிக்கு வந்து நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை:

    சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி படித்து வந்தார். 6-ம் வகுப்பில் இருந்து தொடர்ந்து விடுதியிலேயே அவர் தங்கி படிப்பை தொடர்ந்தார்.

    தற்போது 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சில நாட்களுக்கு முன்பு பெற்றோருக்கு போன் செய்து பேசி உள்ளார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் எனவே என்னை கோவளம் வந்து அழைத்து செல்லுங்கள் எனவும் கூறினார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் கோவளம் விடுதிக்கு தங்கள் மகளை அழைத்து வரச்சென்றனர்.

    திருவண்ணாமலையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்று பெற்றோர் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதுபற்றி திருவண்ணாமலை மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    மாணவியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக மாணவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உண்டு உறைவிட பள்ளியில் படித்தபோது அங்கு யாருடனாவது மாணவி பழகி அதன் மூலமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பம் ஆனாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மகள் கர்ப்பமாகி இருக்கும் நிலையில் அதற்கு காரணம் யார் என தெரியாமல் பெற்றோர் தவித்து வருகிறார்கள். போலீசாரும் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்பது பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    மாணவி தங்கியிருந்த பள்ளி விடுதி மாமல்லபுரம் மகளிர் போலீஸ் எல்லைக்குள் வருகிறது. திருவண்ணாமலை மகளிர் போலீசார் விரைவில் கோவளம் பள்ளி விடுதிக்கு வந்து நேரில் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் இவர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது. முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவது குறித்து திருவண்ணாமலை நகரில் கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோவில் எதிரே மாட வீதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் முருகேஷ் கூறுகையில், இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சாமி மாட வீதிஉலா பக்தர்கள் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும். 15-ந் தேதி (சனிக்கிழமை) திருவூடல் நிகழ்ச்சி கோவில் வளாகத்திலேயே நடைபெறும்.

    மேலும் இன்று (திங்கட்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். சாமி தரிசனம் செய்ய வருகை தருபவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியதற்கான சான்று அல்லது செல்போனில் பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே கோவில் வளாக்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படிக்கலாம்...வினை தீர்க்கும் விநாயகருக்கு உகந்த விரதங்கள்
    திருவண்ணாமலை அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. அங்கு மான், முயல், காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. வனவிலங்குகளை சிலர் வேட்டையாடி வருகின்றனர். 

    இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வன பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் அருண்லால், வனச்சரக அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட 15 பேர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது மல்லவாடி அருகே உள்ள சொர கொளத்தூர் காப்புக்காடு பகுதியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாட முயற்சிப்பது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். 

    இதில் 2 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி சென்றுவிட்டனர். பிடிப்பட்டவர்கள் கொண்டம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சுமன், தானலாம் பாடியை சேர்ந்த விஜய் என்று தெரியவந்தது.

    அவர்களை வனத்துறையினர் கைது செய்து அவர்கள் வைத்திருந்த ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வனப்பகுதிக்கு ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
    திருவண்ணாமலையில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்து தரமான பொருட்களை வழங்க உத்தரவிட்டார்.
    திருவண்ணாமலை:

    தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் வெல்லம்  தரம்  குறைந்ததாக இருப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் பேக்கிங் செய்யப்படும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் தரமாக உள்ளதா? என்று பார்வையிட்டார். பின்னர் அனைத்து பொருட்களின் தரத்தையும் ஆய்வு செய்து அறிக்கை  சமர்ப்பிக்கும்படி  அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

     மேலும் பொதுமக்கள் குறை கூறும் வகையில் தரமற்ற பொருட்களை வழங்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.

    இதுபற்றி அலுவலர்கள் கூறும்போது தரமற்ற 2,000 கிலோ வெல்லம் அப்புறப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக மாற்றுப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது மாவட்டத்தில் நேற்று வரை 44 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது என்றனர்.

    இந்த ஆய்வின்போது நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின்  இணைப்பதிவாளர்  ராஜ்குமார், சார்பதிவாளர்கள் மீனாட்சிசுந்தரம், தீபன் சக்ரவர்த்தி, உதவி கலெக்டர் வெற்றிவேல், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
    முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திருவண்ணாமலை தேவையின்றி வெளியில் வருபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி திருவண்ணாமலையில் நேற்று இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

    இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்றே வாங்கினர். இதனால் மளிகை கடை, காய்கறி கடை உள்ளிட்டவைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. நேற்று மீன் கடைகள் இரவு 10 மணிவரை செயல்பட்டன.

    இதேபோல் இறைச்சி கடைகளிலும் இரவு விற்பனை நடைபெற்றது. திருவண்ணாமலையில் இருந்து இன்று பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. 

    மேலும் அனைத்து வாகன போக்குவரத்து முற்றிலும் நின்று போனதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய இடங்களில் தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வெளியில் திரிபவர்களை எச்சரித்து அனுப்பினர். வழக்கமாக நடைபயிற்சிக்கு செல்லும் மக்கள் கூட்டமும் இன்று குறைவாகவே காணப்பட்டது. 

    மக்களின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றும் வகையில் மருந்துக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் ஆகியவை மட்டும் செயல்பட்டன. டீக்கடைகள் திறக்கப்படாததால் காலையில் டீ குடிக்கச் செல்லும் மக்கள் ஏமாற்றமடைந்தனர். 

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கினர். பலர் தொலைக்காட்சி முன்பு இருந்து தங்களது நேரத்தை போக்கினர்.

    இதேபோல் ஆரணி, வந்தவாசி, செய்யாறு, செங்கம், போளூர், சேத்துப்பட்டு, கண்ணமங்கலம், கீழ்பென்னாத்தூரில் மக்கள் நடமாட்டமில்லாமல் சாலைகள் வெறிச்சோடியது.
    ×