என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணி அம்மாபாளையம் பகுதியில் விளைந்த மஞ்சள். விவசாயிகள் அறுவடை செய்து வரும் காட்சி.
    X
    ஆரணி அம்மாபாளையம் பகுதியில் விளைந்த மஞ்சள். விவசாயிகள் அறுவடை செய்து வரும் காட்சி.

    கனமழை காரணமாக நீரில் மூழ்கிய பயிர்களால் குறைந்த மஞ்சள் சாகுபடி

    ஆரணியில் மஞ்சள் சாகுபடி குறைந்ததால் பொங்கல் அறுவடை பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    ஆரணி:

    இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் தான். மஞ்சள் சாகுபடி விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    மருத்துவ உபயத்திற்கும் மஞ்சள் பயன்படுவதாக அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மஞ்சள் வைகாசி மாதம் விதைக்கப்பட்டு தை மாதம் அறுவடை செய்யபடும் குறைவான தண்ணீர் கொண்டு மஞ்சள் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகையில் மஞ்சள் விற்பனை அமோகமாக இருப்பதால் விவசாயிகள் விளைச்சாலான மஞ்சளை தைமாதத்திற்கு முன்பு அறுவடை செய்வார்கள்.

    5 வகை கொண்ட மஞ்சள் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். நாட்டு மஞ்சள், சேலமஞ்சள், கோ கோ-5 உள்ளிட்ட 5 வகை மஞ்சள் உள்ளதாகவும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாட்டு மஞ்சள் விளைச்சல் அதிகளவில் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    மஞ்சள் சாகுபடி செய்யபடும் போது புள்ளி நோய், சுட்ட நோய், வேர் அழிவு நோய் கிழங்கு நோய் உள்ளிட்ட 4 வகையான நோய்கள் மஞ்சளை தாக்குகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகே அம்மாபாளையம், படவேடு, காட்டுகாநல்லூரி, அக்ராபாளையம், அய்யம்பாளையம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யபட்டுள்ளது.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த கனமழை யால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. 
    மேடான பகுதியில் மஞ்சள் விளைச்சல் நன்றாக உள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மஞ்சள் பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

    கனமழையால் இந்த வருடம் மஞ்சள் சாகுபடி பாதியளவு குறைந்துள்ள தாகவும் இதனால் விவாசயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    மஞ்சள் சாகுபடி நஷ்டத்தை போக்க காப்பீடு திட்டத்தை அறிமுக செய்ய வும் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.6500 முதல் ரூ.7000 வரையில் அரசு தற்போது வழங்குவதை தமிழக முதல்வர் தலையீட்டு குவிண்டாலுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மஞ்சள் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×