என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.
4நகராட்சிகள், 10பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. நகராட்சிப் பகுதிகளில் 123 வார்டுகளிலும், போளூர் பேரூராட்சியில் ஒரு வார்டில் மட்டும் ஒருவர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதால் பேரூராட்சி பகுதிகளில் 149 வார்டுகளிலும் என மொத்தம் 272 வார்டுகளில் தேர்தல் நடக்கிறது.
இதில் தி.மு.க., தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 1,214 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நாளை (19-ந்தேதி) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.
திருவண்ணாமலையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததும் ஒவ்வொரு கட்சி சார்பிலும் வீடு வீடாகச் சென்றுஅங்கு எத்தனை ஓட்டுகள் உள்ளது என்பதை கணக்கிட்டு பண பட்டுவாடா செய்வதில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் வேட்பாளர்கள் தங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்கியும் ஆதரவை திரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சேத்துப்பட்டில் அ.தி.மு.க.வினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18வார்டுகள் உள்ளன இதற்கான உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
நேற்று காலை சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தமிழக அரசு மூலம் ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை பெற விண்ணப்ப படிவங்களை வாக்காளர்களிடம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த சேத்துப்பட்டு நகர அதிமுக செயலாளர் ராதாகிருஷ்ணன் சேத்துப்பட்டு, பெரணமல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் வீரபத்திரன், ராகவன், ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திடீரென்று சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் தி.மு.க.வினர் அரசு அறிவிக்காத சலுகைகளை விண்ணப்பம் கொடுத்து தி.மு.க.வினர் வாக்கு சேகரித்த தாகக் கூறி தி.மு.க.வினரையும் இதை தடுக்காத தேர்தல் அலுவலர்களை கண்டித்து சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரபாபு, சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், போளூர் டி.எஸ்.பி. குணசேகரன் ஆகியோர் அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் அங்கிருந்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.
கவுதம நதியில் தீர்த்தவாரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிகழ்ச்சிகளில் பல்வேறு திருவிழாக்களை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.
மாசி மகத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாபட்டு சின்னகாங்கேயனூர் கிராமத்தில் அமைந்துள்ள கவுதம நதியில் நேற்று மதியம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் சுவாமி -அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அங்கு பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது.மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் நீர்மோர் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன.
கவுதம நதியில் நீராடிய பக்தர்கள் தங்களது ஆடைகளை நதியில் விட்டுச்சென்றனர் ஆயிரக்கணக்கானோர் விட்டுச்சென்ற ஆடைகளை சிலர் எடுத்து அதனை வெயிலில் உலர்த்தி எடுத்துச் சென்றனர்.
முன்னதாக வல்லாள மகாராஜாவிற்கு அருணாச்சலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் அதே பகுதியில் நடைபெற்றது. இதில் மகாராஜா சந்ததியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர் முன்பு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பின்னர் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் பல்லக்கில் சின்ன காங்கேயனூர் புறப்பட்டுச் சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சேத்துப்பட்டில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
திடீரென அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகள் பாதுகாப்பு சுகாதாரம் கண்காணிப்பு கேமராக்கள் ஆகிய முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் வாக்கு செலுத்திய எந்திரங்களை வைக்கும் பாதுகாப்பு அறைக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆரணி, திருவண்ணாமலையில் சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திக்கு மலர் தூவி வரவேற்றனர்.
ஆரணி:
சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தி விடுதலை போரில் தமிழகம் என்ற தலைப்பில் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் வாகன ரத ஊர்தியை நேற்று ஆரணி அருகே திருவண்ணாமலை மாவட்ட எல்லையான வெள்ளேரி கிராமத்தில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்சினி தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திக்கு சிவப்பு கம்பளம் விரித்து பேண்டு வாத்தியம் நாதஸ்வரம் முழுங்க பெண்கள் இருபக்கமும் நின்று மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்டு பாரதியாரின் சுதந்திர போராட்ட கவிதைகளை மாணவர்களின் பரதநாட்டியம் மூலமாக எடுத்துரைக்கபட்டன.
மேலும் இந்த அலங்கார ஊர்தி ரதத்தில் சுதந்திர போராட்ட வீரர்களாக வீரமங்கை வேலுநாச்சியார் மருது சகோதரர்கள் பாரதிதாசன் வேலூர் கோட்டை உள்ளிட்ட தமிழகத்தை குறிக்கும் விதமாகவும் இருந்தன.
இதனை பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து மலர்தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இந்த ரத ஊர்தி போளுர் கலசபாக்கம் வழியாக சென்று திருவண்ணாமலைக்கு ஈசானிய மைதானத்துக்கு இன்று வந்தது. கலெக்டர் முருகேஷ் மலர் தூவி வரவேற்றார். அலங்கார ஊர்தியை மாணவ -மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
மேலும் அங்கு இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை அருகே மின் வேலியில் சிக்கி 2 குழந்தைகளின் தாய் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள மாயாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். விவசாயி.இவரது மனைவி ஜெயந்தி (வயது 30) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கணவன் &மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து ஜெயந்தி வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர்.அப்போது அவர் எங்கு சென்றார் ?என்பது தெரியவில்லை.
இதற்கிடையே இன்று காலை வயல்வெளி பகுதியில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெயந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜெயந்தி மின்வேலியில் சிக்கி பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது.
ஜெயந்தி கையில் நெல்மணிகள் இருந்துள்ளன. கீழ் பாலானந்தல் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது விவசாய பயிர்களை எலிகள் தின்னாமல் இருப்பதற்காக மின்வேலி அமைத்து இருந்ததாகவும், அதனை கவனிக்காமல் அந்த வழியாக வந்த ஜெயந்தி மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த நில உரிமையாளர் மின்வேலியை சுருட்டி வைத்திருந்ததையும், ஜெயந்தி அணிந்திருந்த செருப்புகள் அந்த பகுதியில் சிதறி கிடந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
எனவே நில உரிமையாளர் ஜெயந்தி தனது மின்வேலியில் சிக்கி இறந்து இருப்பது தெரிய கூடாது என்பதற்காக அவரது உடலை 300 அடி தூரம் வரை கொண்டு சென்று போட்டுஇருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த பரிதாபச் சம்பவம் மங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளிலும் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு சுயேச்சை மற்றும் பிற கட்சி வேட்பாளர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு) மற்றும் வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளிலும் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட் டோர் பிரச்சாரம் செய்யாதது வேட்பாளர் களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
அதேநேரத்தில் திமுக தரப்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் கம்பன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க் கள் அம்பேத்குமார், ஜோதி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், அதிமுக தரப்பில் தெற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் தூசி மோகன் ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர்.
இரு தரப்பும் அசுர 'ப'லத்துடன் களத்தில் சுழன்றாலும் பாமக, பாஜக, மநீம, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் சூறாவளி பிரசாரத்தால் 'ஆட்டம்' கண்டுள்ளது.
திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு 'உதயசூரியன், இரட்டை இலை சின்னம்' என்ற மிகப்பெரிய அஸ்திரம் இருந்தாலும், உள்ளூர்காரர் என்ற முத்திரையுடன் போட்டியிடும் வேட்பாளர்கள் (பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை) பெறும் வாக்குகள், 'வெற்றி தோல்வி' யை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களது பிரச்சாரத்துக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
அதையும் மீறி, அவர்கள் பிரச்சார பயணத்தை தொடர்கின்றனர். உள்ளூர் பிரச்சினைகளை பட்டியலிட்டு, அதனை தீர்த்து வைப்பதாக கூறி, அவர்கள் செய்யும் பிரச்சாரத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவே பிரதான கட்சியான திமுக, அதிமுகவுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது. மேலும் உட்கட்சி பூசலும், அவர்களுக்கு தலைவலியை அதிகரிக்க செய்துள்ளது.
திமுகவில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு சொற்ப இடங்களை மட்டுமே ஒதுக்கியதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அவர்களும் ஆர்வம் காட்டவில்லை. தங்கள் கட்சி போட்டியிடும் இடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இதனால் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் திமுக வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பாமக தனித்து களம் காண்பதால், அவர்களது வாக்குகளை ஈடு செய்வதில் அதிமுகவுக்கு கடும் சவாலாக உள்ளது. தமிழகத்தில் தாமரை மலரும் எனும் முழக்கத்துடன் தனித்து களம் காணும் பாஜக, பண பலத்துடன் உள்ள வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளதால், ஒரு சில வார்டுகளில் நெருக்கடி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம்,
நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள், தலைமை வகுத்துள்ள கொள்கையை எடுத்துரைத்து தன்னம்பிக்கையுடன் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பத்மாசனம் செய்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் உறுப்பினர்கள் பதவிக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு யோகாசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள தீப மலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு உலக சாதனையாளர் டாக்டர் ராஜா. ஹரி கோவிந்தன் தலைமை தாங்கினார். நற்பவி சித்தா கேர் டாக்டர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக உலக சாதனையாளர் தங்கவேலு கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு யோகாசன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் டாக்டர் ராஜா. ஹரி கோவிந்தனின் மகன்களும், கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்களுமான ஹனீஷ்குமார் (வயது 13) 8-ஆம் வகுப்பு மாணவர்.தர்ஷன் (6) 1&ஆம் வகுப்பு மாணவர் ஆகியோர் அடுக்கு பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.
அப்போது அவர்கள் வருகிற நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில்
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்ற விழிப்புணர்வு பதாகைகளை வைத்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்துகாட்டினர்.
தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்களை வட ஆண்டாப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் மோகன் வாழ்த்தி பேசினார். பின்னர் மாணவர்கள் இருவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கிரிவலப்பாதையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கவில்லை.இதனால் மிகவும் உற்சாகமுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரி வலத்திற்கு புகழ் பெற்றது. தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு 10.30 மணி முதல் இன்று இரவு 10.30 மணி வரை மாசிமாதபவுர்ணமி காலமாகும். இந்த பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.அவர்கள் வழக்கம்போல் 14 கி.மீ. தூரம் நடந்து சென்று கிரிவலம் வந்தனர்.
கிரிவலப்பாதையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கவில்லை.இதனால் மிகவும் உற்சாகமுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இன்று காலையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட அனைத்து மாவட்டங் களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் அனைத்து கடைகளிலும் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் நேற்று இரவு நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டதால் மாட வீதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இங்கு சிவபெருமான் மலையாக எழுந்தருளியிருப்பது இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கோவில் வரும் பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதிலும் மாதந்தோறும் பவுர்ணமி நேரத்தில் கிரிவலம் சென்றால் பல மடங்கு பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் திருவண்ணாமலையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2 ஆண்டாக திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.
வருகிற மார்ச் மாதம் வந்துவிட்டால் 2 ஆண்டுகள் முடிவடைந்து மூன்றாமாண்டு தொடங்கிவிடும்.
இந்த இடைப்பட்ட காலங்களில் கார்த்திகை மாத பவுர்ணமி நாளில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வீதம் பக்தர்கள் வீதம் 2 நாட்கள் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது நகர்மன்ற உள்ளாட்சி தேர்தல காரணம்காட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்தபோதிலும் திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு இன்று இரவு 10.30 மணி முதல் நாளை (16-ந்தேதி) இரவு 10.30 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல வேண்டாம். பக்தர்கள் நலன் கருதி கொரோனா முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவண்ணாமலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஆனால் இன்று பக்தர்கள் வருகை குறைவாகவே உள்ளது.
இன்று இரவு கிரிவலம் செல்ல அதிகளவில் பக்தர்கள் வரலாம் என்று கருதப்படுவதால் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளுடன் பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெம்பாக்கம் அருகே கள்ளக்காதலியின் மகனை சுவற்றி அடித்து கொடூரமாக கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம்:
கடலூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி நர்மதா (வயது 26). இவரது மகன்கள் நித்தீஷ் (6) சித்தார்த் (4).
நர்மதாவின் கணவர் சசிகுமார் 4 வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். தொடர்ந்து மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த தனியார் வங்கியில் நிதி வசூல் செய்யும் வினோத்குமார் (30) என்பவருடன் நர்மதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மாங்கால் கூட்டுரோடு ஷூ கம்பெனியில் நர்மதா வேலைக்கு சேர்ந்தார்.
இருவரும் மகன்களுடன் வெம்பாக்கம் அருகே மாங்கால் கூட்ரோடு அருகே உள்ள ஆக்கூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வினோத்குமார் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
நர்மதா நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அவரது மகன்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய போது 2-வது மகன் சித்தார்த் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தான். இதனை கண்டு நர்மதா அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு மாமண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சித்தார்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நர்மதா தூசி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில் கள்ளக்காதலன் வினோத்குமார் சிறுவன் சித்தார்த்தின் இரண்டு கால்களையும் பிடித்து சுவற்றில் சுழற்றி அடித்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. குடிபோதையில் வீட்டிற்கு வந்த போது சிறுவனை அடித்துக் கொன்று விட்டதாக வினோத்குமார் தெரிவித்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை அருகே மணல் எடுப்பதை தடுப்பதாக புகார் தெரிவித்து மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
மண்பாண்ட தொழிலாளர்கள் ஆண்டுக்கு 800 மாட்டுவண்டி அளவுக்கு மண் எடுக்க, அரசு உத்தரவு இருந்தும், வருவாய் துறையும், காவல் துறையும் மண் எடுக்க செல்லும் மண்பாண்ட தொழிலாளர்கள் மீது, வழக்குப் போடுவது, சிறையில் அடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் மண்பாண்டம், நாட்டு செங்கல், நாட்டு ஓடு ஆகிய தொழில் செய்யாமல் வாழ்வாதாரத்தை இழந்து வேலை வாய்ப்பின்றி மண்பாண்ட தொழிலாளர்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே மண்பாண்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்யும் வகையில், தடையின்றி மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யு. சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் கே.கே. வெங்கடேசன் தலைமை தாங்கினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், சி.ஐ.டி.யு.மாவட்ட துணைத்தலைவர் எம். வீரபத்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வன், எஸ். ராமதாஸ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.