என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் அதிமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    X
    சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் அதிமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேத்துப்பட்டில் அ.தி.மு.க.வினர் திடீர் மறியல்

    சேத்துப்பட்டில் அ.தி.மு.க.வினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18வார்டுகள் உள்ளன இதற்கான உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

    நேற்று காலை சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் தமிழக அரசு மூலம் ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை பெற விண்ணப்ப படிவங்களை வாக்காளர்களிடம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலறிந்த சேத்துப்பட்டு நகர அதிமுக செயலாளர் ராதாகிருஷ்ணன் சேத்துப்பட்டு, பெரணமல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் வீரபத்திரன், ராகவன், ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திடீரென்று சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் தி.மு.க.வினர் அரசு அறிவிக்காத சலுகைகளை விண்ணப்பம் கொடுத்து தி.மு.க.வினர் வாக்கு சேகரித்த தாகக் கூறி தி.மு.க.வினரையும் இதை தடுக்காத தேர்தல் அலுவலர்களை கண்டித்து சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரபாபு, சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், போளூர் டி.எஸ்.பி. குணசேகரன் ஆகியோர் அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
     
    இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் அங்கிருந்து அதிமுகவினர் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×