என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பத்மாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்.
    X
    100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பத்மாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்.

    திருவண்ணாமலையில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பத்மாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

    திருவண்ணாமலையில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பத்மாசனம் செய்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் உறுப்பினர்கள் பதவிக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு யோகாசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள தீப மலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு உலக சாதனையாளர் டாக்டர் ராஜா. ஹரி கோவிந்தன் தலைமை தாங்கினார். நற்பவி சித்தா கேர் டாக்டர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக உலக சாதனையாளர் தங்கவேலு கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு யோகாசன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

     இதில் டாக்டர் ராஜா. ஹரி கோவிந்தனின் மகன்களும், கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்களுமான ஹனீஷ்குமார் (வயது 13) 8-ஆம் வகுப்பு மாணவர்.தர்ஷன் (6) 1&ஆம் வகுப்பு மாணவர் ஆகியோர் அடுக்கு பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

    அப்போது அவர்கள் வருகிற நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில்
    18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்ற விழிப்புணர்வு பதாகைகளை வைத்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்துகாட்டினர்.

    தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்களை வட ஆண்டாப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் மோகன் வாழ்த்தி பேசினார். பின்னர் மாணவர்கள் இருவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×