என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • கார்த்திகை தீப விழாவையொட்டி நடவடிக்கை
    • கோவில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த எஸ்.பி. பேட்டி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான பரணி தீபம், மகாதீபம் 6-ந்தேதி ஏற்றப்படுகிறது.

    தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலை மையிலான போலீசார் திரு வண்ணாமலை பஸ் நிலை யம், ரெயில் நிலைய பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து தேரடி வீதியிலும், அருணாசலேஸ்வ ரர் கோவில் உட்புறத்திலும் சோதனை நடத்தினர். பின்னர் போலீஸ் சூப்பி ரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-

    3-ந் தேதி (சனிக்கிழமை) மாடவீதியில் பஞ்சரத தேரோட்டம் வலம்வரஉள்ள தினத்தன்று 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து வருகிற 6-ந்தேதி மகா தீபத்தன்று தமிழகம் முழுவதிலும் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    திருவண்ணாமலை நகரத் திற்கு உள்ளே வர உள்ள 9 0 சாலைகளில் 13 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப் பட்டு பக்தர்களுக்காக அந்த இடத்தில் அனைத்து அடிப் படை வசதிகளும் தயார் செய் யப்பட்டு வருகின்றது.

    மகா தீபத்தன்று திருவண் ணாமலைக்கு வருகை தர உள்ள குழந்தைகளின் பாது காப்பை உறுதி செய்ய 20 ஆயிரம் ரெஸ்ட் பேண்ட் (மணிகட்டு பட்டை) கொடுக்கப் பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகள் தொலைந்து போனால் எளிதில் கண்டுபி டிக்க ஏதுவாக இருக்கும். தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதி, நகரப்ப குதி, புறவழிச்சாலை, மாவட்ட எல்லை என 5 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதில் வாகன தணிக்கை, பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் பய ணிகளின் உடைமைகளை சோதனை செய்வது உள் ளிட்ட பணிகளுக்கு 15 குழுவி னர் ஈடுபடுத்தப்பட உள்ள னர்.

    வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து திரு வண்ணாமலைக்கு வருகை தருபவர்கள் தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகின்ற னர். மேலும் திருவண்ணாம லையில் தங்கி உள்ள வெளி நாட்டினர் குறித்து கணக்கெ டுக்கப்பட்டு வருகின்றது.

    திருவண்ணாமலை நகரத் திற்குள் ஆன்லைன் மூலம் 12 ஆயிரம் கார்கள் பார்க்கிங் செய்ய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரவு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது
    • திரளான பக்தர்கள் தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் இன்று 4-வது நாளான இன்று காலை நாக வாகனத்தில் அண்ணாமலையார் மாடவீதியில் உலா வந்தார்.

    இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி கற்பகவிருட்சகம், வெள்ளி காமதேனு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளன.

    நேற்று 3-ம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    செங்கம்:

    செங்கம் டவுன் பகுதியில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் செங்கத்தை அடுத்த மண்மலை பகுதியில் இருந்து குயிலம் கூட்ரோடு வரை புறவழிச்சாலை திட்டத்திற்கு விவசாயம் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருவண்ணாமலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்கம் போலீசார் சம் பவ இடத்துக்கு வந்து மறிய லில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு
    • சென்னை, வேலூர், பாண்டிசேரியில் இருந்து இயக்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி 5-ந்தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வருகிறது.

    இந்த ரெயில் மறுநாள் (6-ந்தேதி) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணி அளவில் சென்னை கடற்கரையை சென்றடைகிறது.

    புதுச்சேரியில் இருந்து 5-ந்தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 6-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது. 6-ந்தேதி மயிலாடுதுறையில் இருந்து ரெயில் காலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக காலை 10.55 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகின்றது. அந்த ரெயில் அன்று மதியம் 12.40 மணி அளவில் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மீண்டும் மயிலாடுதுறையை சென்று அடைகின்றது.

    அதேபோல் 6-ந்தேதி கடலூர் மாவட்டம் திருபாதிரிப்புலியூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு ரெயில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக இரவு 10.55 மணிக்கு திருவண்ணாமலை வருகை தந்து அங்கிருந்து வேலூரை நள்ளிரவு 12.40 மணி அளவில் சென்றடைகின்றது.

    அதேபோல் 6-ந்தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 7-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணி அளவில் சென்னை கடற்கரையை சென்றடைகிறது.

    புதுச்சேரியில் இருந்து 6-ந்தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 7-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது.

    மேலும் வேலூரில் இருந்த திருபாதிரிப்புலியூர் செல்லும் ரெயில் 7-ந் தேதி வேலூரில் அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து திருபாதிரிப்புலியூரை காலை 5.40 மணி அளவில் சென்றடைகின்றது.

    7-ந்தேதி மயிலாடுதுறையில் இருந்து ரெயில் புறப்பட்டு காலை 6 மணிக்கு விழுப்புரம் வழியாக காலை 10.55 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகின்றது. அந்த ரெயில் அன்று மதியம் 12.40 மணி அளவில் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மீண்டும் மயிலாடுதுறையை சென்று அடைகின்றது. 7-ந்தேதி திருபாதிரிப்புலியூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு ரெயில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக இரவு 10.55 மணிக்கு திருவண்ணாமலை வருகை தந்து அங்கிருந்து வேலூரை நள்ளிரவு 12.40 மணி அளவில் சென்றடைகின்றது.

    அதேபோல் 7-ந்தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 8-ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணி அளவில் சென்னை கடற்கரையை சென்றடைகிறது.

    புதுச்சேரியில் இருந்து 7-ந்தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 7-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது.

    மேலும் வேலூரில் இருந்த திருபாதிரிப்புலியூர் செல்லும் ரெயில் 8-ந்தேதி வேலூரில் அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து திருபாதிரிப்புலியூரை காலை 5.40 மணி அளவில் சென்றடைகின்றது. இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும்.
    • பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடி மரம் அருகில் வைக்கப்பட்டது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று காலை 10 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் அங்கிருந்து வந்து ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் தயார் நிலையில் இருந்த மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் சந்திரசேகரரும் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன் பின்னே சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    மேலும் கோவிலில் நேற்று 1,008 சங்காபிஷேகமும், சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு யாக சாலை பூஜையும் நடந்தது.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் கோவில் கலையரங்கத்தில் பரதநாட்டியம், பக்தி சொற்பொழிவு போன்றவை நடைபெற்றது. இரவு 10 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆண்டு தோறும் தீபத் திருவிழாவின் 3-ம் நாள் விழாவின் போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும். அதன்படி 3-ம் நாள் விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடி மரம் அருகில் வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து பக்தர்கள் பலர் பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

    • திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    வாணாபுரம் அருகே உள்ள இளையாங்கன்னி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெபஸ் டின் (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி குழந் தைமேரி.இவர்களுக்கு 3 மகள் களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று ஜெபஸ்டின் இ ளை யாங்கன்னி அருகே தொண் டாமனூர் பகுதியில் உள்ள ராமசாமி என்பவரின் நிலத் தில் கரும்பு வெட்டுவதற்காக சென்றார்.

    அங்கு கரும்பு வெட்டும் போது அறுந்து கிடந்த மின் கம்பி ஜெபஸ்டின் மீது உரசிய தாக கூறப்படுகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம் பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சௌந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர்.

    அப்போது சம்பவ இடத் திற்கு மின்துறை அதிகாரிகள் வர வேண்டும் என்று ஜெபஸ் டினின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி னர்.

    காலை 9 மணிக்கு சம்பவம் நடந்த நிலையில் மின்துறை அதிகாரிகள் பகல் 12 மணி வரை யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த ஜெபஸ்டி னின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை பெருந் துறைப்பட்டு துணை மின் நிலையத்தின் முன்பு கள்ளக் குறிச்சி-திருவண்ணா மலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சாலை மறியலை கைவிடவில்லை, இதனைய டுத்து கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ் வினி மற்றும் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தண்டராம்பட்டு தாசில்தார் பரிமளா, வாணா புரம் வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி ஆகியோர் அங்கு வந்து ஜெபஸ்டின் உறவினர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். ஆனால் தொடர்ந்து சமாதானம் ஆகாத உறவினர் கள் பெருந்துறைப்பட்டு துணை மின் நிலையத்தின் முன்பு முற்றுகை போராட் டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத் திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர் கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகா ரிகள் கூறினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பின்னர் ஜெபஸ்டினின் உடல் பிரேத பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகு தியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • கேமராக்கள் ஆய்வு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காந்தி நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் கலாவதி (வயது 57). இவருடைய கணவர் ஜெயராமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சொந்த ஊரான வந்தவாசியில் மரணமடைந்தார். இதனால் கலாவதி வீட்டை பூட்டி விட்டு வந்தவாசி சென்றார்.

    இதனைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் கலாவதியின் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளை யடித்து சென்று விட்டனர். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கலாவதிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் வந்து பார்த்தபோது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை நகரப் பகுதியில் தற்போது கார்த்திகை தீப திருவிழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வீடு புகுந்து நகை கொள்ளைய டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தூசி கே.மோகன் திறந்து வைத்தார்
    • உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மண்டி தெருவில்,

    அ.தி.மு.க. அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. குணசீலன், மகேந்திரன், அரங்கநாதன், துரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் முன்னாள்

    எம்.எல்.ஏ. தூசி கே. மோகன் கலந்துகொண்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திரு உருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் மேலும் செய்யாறு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகன், குப்புசாமி, தேவராஜ் ஆகியோர் படங்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    மாவட்ட செயலாளர் தூசி மோகன் அலுவலகத்தை திறந்து வைத்து, தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கினார். மேலும் அலுவலகத்தில் கழகத் தொண்டர்களுக்கு சால்வையும் இனிப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், பாவை இரவிச்சந்திரன், அருணகிரி, பூக்கடை கோபால், வக்கீல்கள் புவனேந்திரன், மெய்யப்பன், கந்தசாமி, பாஸ்கரன், ஏகாம்பரம், தணிகாசலம், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • நாளை பஞ்ச மூர்த்திகள் வெள்ளி கற்பக உற்சவம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    2-ம் நாளான நேற்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர், விநாயகர் மாடவீதியில் உலா வந்தார். தொடர்ந்து நேற்று இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானங்களில் வீதி உலா வந்தனர்.

    இன்று 3-ம் நாள் காலை விநாயகர், சந்திரசேகர் பூத வாகனத்தில் மாட வீதி உலா வந்தனர். இன்று இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற உள்ளன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து நாளை 4-ம் நாள் விநாயகர் சந்திரசேகர் நாகா வாகனத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி கற்பக உற்சவம் வெள்ளி காமதேனு வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளன.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • ஆயிரம் முருங்கை மரங்களை நட்டு வளர்த்திட முடிவு

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியம், வீரம்பாக்கம் கிராமத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம் நேற்று நடைபெற்றது.

    ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், பிடிஒ ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் இளவேணி வரவேற்றார். ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு அரசின் சாதனைகளை கிராம மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

    கூட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கிராமத்தின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றவும், ஆயிரம் முருங்கை மரங்களை நட்டு வளர்த்திடவும் கிராம சபாவில் தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வெம்பாக்கம் சேர்மன் மாமண்டூர் ராஜு, நகர செயலாளர் வக்கீல் விஸ்வநாதன், புரிசை சிவக்குமார், ஒன்றிய செயலாளர் ஞானவேலு உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இ-நாம் திட்ட செயலில் திருத்தம் செய்ய வலியுறுத்தல்
    • கொள்முதல் நிலையம் ெவறிச்சோடியது

    வந்தவாசி:

    விவசாயிகளுக்கு வேளாண் விளை பொருட்களுக்கான கட்டுப்படியான விலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு இ நாம் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தில் பதிவு பெற்ற வியாபாரிகள் இந்த திட்ட செயலி மூலமே நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய இயலும். இந்த செயலியில் எந்த வியாபாரி ஏலம் அதிக மாக நிர்ணயம் செய்கிறாரோ அவருக்கே அதற்கான விளை பொருட்கள் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் வந்த வாசி ஒழுங்குமுறை விற்பனை கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன் இணைக்கப்பட்டு, இந்தசெயலிமூலம் வேளாண் விளைபொருட் கள் கொள்முதல் நடந்து வரு கிறது.

    இந்த நிலையில் இந்ததிட்ட செயலியில் சில திருத்தங் களை செய்யக்கோரி வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் நேற்று நெல் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    முன்னர் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட் டைகளுக்கு நாங்கள் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்த பின்னர், அந்த நெல்லை எங்கள் கோணிப் பைகளுக்கு மாற்றுவோம். அப்போது தரம் இல்லாத நெல் கலப்படம் செய்யப் பட்டு இருந்தால் அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட விவசாயியை அழைத்து பேசி தீர்வு காண்போம்.

    ஆனால் இப்போது இந்த செயலி மூலம் கொள்முதல் நடைபெறும் போது இது போன்று பேசி தீர்வு காண் பது இயலாததாகவே தோன்றுகிறது. எனவே விவசாயிகள் கொண்டு வரும் விளைபொ ருட்களுக்கு நாங்கள் விலை நிர்ணயம் செய்யும் முன்னர், இந்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகமே வேறு கோணிப் பையில் மாற்றி கலப்படம் இருந்தால் கண்டறிய வேண்டும்.

    மேலும் விளைபொருட்களுக்கான விலையை நாங்கள் இந்த செயலியில் பதிவு செய்யும் போது தவறுதலாக அதிக தொகை குறிப்பிட்டு பதிவு செய்துவிட்டால் எங்களால் அதை மாற்ற இயலாத நிலை உள்ளது. இதனால் எங்களுக்கு நஷ்டமே ஏற்படும். எனவே, வியாபாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்து இந்த செயலியில் உரிய திருத் தங்கள் செய்யக்கோரி நெல் கொள்முதலை நிறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பரமேஸ்வரி கூறியதாவது:-

    விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விளை பொருட்களை எடுத்து வந்தவுடன் அவற்றின் ஈரத் தன்மை, தரம் ஆகியவற்றை நாங்களே பரிசோதனை செய்து இ-நாம் செயலில் பதி வேற்றிவிடுவோம்.

    குற்றவியல் நடவடிக்கை இந்த செயலி மூலம் நாட் டின் எந்த மூலையில் இருந் தும் வியாபாரிகள் வீட்டில் இருந்தபடியே எந்த ஒரு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இருந்தும் விளை பொருட்களை கொள்முதல் செய்ய இயலும்.

    விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களில் கலப்படம் கண்டறியப்பட்டால் அதற்கான ஏலம் ரத்து செய்யப்படும். மேலும் கலப்பட பொருட் கள் எடுத்து வரும் விவசாயி கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளின் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வியாபாரிகளின் போராட்டம் குறித்து தகவலறிந்த விவசாயிகள் விளைபொருட் களை கொண்டு வராததால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.

    • தீப விழாவை முன்னிட்டு, கோவில் பாதுகாப்புக்காக கட்டை கோபுரத்தில் சிசிடிவி கேமராக்கள் நேற்று காலை பொருத்தப்பட்டன.
    • கோவில் பராமரிப்பு பொறுப்பை தொல்லியல் துறை ஏற்றதால், பக்தர்களிடம் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் 9 கோபுரங்கள், ஏராளமான மண்டபங்கள் இருக்கின்றன. இங்கு பழமையான தெற்கு கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

    இதற்கு அடுத்து 5-வது பிரகாரத்தில் தெற்கு கட்டை கோபுரம் அமைந்துள்ளது. 5 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தின் உயரம் 70 அடியாகும். தீப விழாவை முன்னிட்டு, கோவில் பாதுகாப்புக்காக கட்டை கோபுரத்தில் சிசிடிவி கேமராக்கள் நேற்று காலை பொருத்தப்பட்டன.

    அப்போது கோபுரத்தில் இடம்பெற்றிருந்த காவல் தெய்வங்களான சண்டன், பிரசண்டன் உட்பட தெய்வங்களின் சிற்பங்கள் சேதமடைந்தன. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    மாலிக் காபூர் படையெடுப்பில் கோவில் சிலைகள் சிதைக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், கோவிலை கையகப்படுத்தியபோது கோவில் நிர்வாகம், சிற்பங்கள் மற்றும் கோவில் பாரம்பரியம் காக்கப்படும் என தொல்லியல் துறையினர் கூறினர்.

    ஆனால் கோபுர சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    கோவில் பராமரிப்பு பொறுப்பை தொல்லியல் துறை ஏற்றதால், பக்தர்களிடம் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், காலமாற்றத்தில் கோபுர நுழைவாயில் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு கொடிசிற்பங்கள் சிதைந்து விட்டன.

    கோவில் அதிகாரிகள் தங்குவதற்கு விடுதிகள் கட்டப்பட்டதில், ஆங்காங்கே துளைகள் போடப்பட்டு கல் மதில்சுவர்கள் சேதமடைந்தன. இப்போது கோபுர சிற்பங்கள் சேதமடைந்துள்ளன என்றனர்.

    ×