என் மலர்
நீங்கள் தேடியது "A.D.M.K. opening ceremony"
- தூசி கே.மோகன் திறந்து வைத்தார்
- உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மண்டி தெருவில்,
அ.தி.மு.க. அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. குணசீலன், மகேந்திரன், அரங்கநாதன், துரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் முன்னாள்
எம்.எல்.ஏ. தூசி கே. மோகன் கலந்துகொண்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திரு உருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் மேலும் செய்யாறு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகன், குப்புசாமி, தேவராஜ் ஆகியோர் படங்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மாவட்ட செயலாளர் தூசி மோகன் அலுவலகத்தை திறந்து வைத்து, தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கினார். மேலும் அலுவலகத்தில் கழகத் தொண்டர்களுக்கு சால்வையும் இனிப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், பாவை இரவிச்சந்திரன், அருணகிரி, பூக்கடை கோபால், வக்கீல்கள் புவனேந்திரன், மெய்யப்பன், கந்தசாமி, பாஸ்கரன், ஏகாம்பரம், தணிகாசலம், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






