search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலை கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தியதால் கோபுர சிற்பங்கள் சேதம்
    X

    கண்காணிப்பு கேமரா பொருத்தியதால் சேதமடைந்த சிற்பங்கள்.

    திருவண்ணாமலை கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தியதால் கோபுர சிற்பங்கள் சேதம்

    • தீப விழாவை முன்னிட்டு, கோவில் பாதுகாப்புக்காக கட்டை கோபுரத்தில் சிசிடிவி கேமராக்கள் நேற்று காலை பொருத்தப்பட்டன.
    • கோவில் பராமரிப்பு பொறுப்பை தொல்லியல் துறை ஏற்றதால், பக்தர்களிடம் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் 9 கோபுரங்கள், ஏராளமான மண்டபங்கள் இருக்கின்றன. இங்கு பழமையான தெற்கு கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

    இதற்கு அடுத்து 5-வது பிரகாரத்தில் தெற்கு கட்டை கோபுரம் அமைந்துள்ளது. 5 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தின் உயரம் 70 அடியாகும். தீப விழாவை முன்னிட்டு, கோவில் பாதுகாப்புக்காக கட்டை கோபுரத்தில் சிசிடிவி கேமராக்கள் நேற்று காலை பொருத்தப்பட்டன.

    அப்போது கோபுரத்தில் இடம்பெற்றிருந்த காவல் தெய்வங்களான சண்டன், பிரசண்டன் உட்பட தெய்வங்களின் சிற்பங்கள் சேதமடைந்தன. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    மாலிக் காபூர் படையெடுப்பில் கோவில் சிலைகள் சிதைக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், கோவிலை கையகப்படுத்தியபோது கோவில் நிர்வாகம், சிற்பங்கள் மற்றும் கோவில் பாரம்பரியம் காக்கப்படும் என தொல்லியல் துறையினர் கூறினர்.

    ஆனால் கோபுர சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    கோவில் பராமரிப்பு பொறுப்பை தொல்லியல் துறை ஏற்றதால், பக்தர்களிடம் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், காலமாற்றத்தில் கோபுர நுழைவாயில் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு கொடிசிற்பங்கள் சிதைந்து விட்டன.

    கோவில் அதிகாரிகள் தங்குவதற்கு விடுதிகள் கட்டப்பட்டதில், ஆங்காங்கே துளைகள் போடப்பட்டு கல் மதில்சுவர்கள் சேதமடைந்தன. இப்போது கோபுர சிற்பங்கள் சேதமடைந்துள்ளன என்றனர்.

    Next Story
    ×