என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ரோந்து பணியின் போது சிக்கினார்
    • ேபாலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் வீரகோவில் பகுதியில் கோவிந்தசாமி(49)என்பவர் பங்க் கடையில் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்க முயன்றார்.

    அப்போது, அவ்வழியே ரோந்து சென்ற கண்ணமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி புதைத்தனர்
    • கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல்

    வேட்டவலம்:

    வேட்டவலம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள தனது சொந்தமான விவசாய நிலத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து 35-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இவர் தினமும் செம்மறி ஆடுகளை காலை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மீண்டும் மாலை ஆடுகளை ஆட்டுப்பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் ராஜாராம் நிலத்தில் உள்ள ஆட்டுப்பட்டிக்கு சென்றார்.

    அப்போது அங்குள்ள செம்மறி ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்ததில் ரத்தம் வெள்ளத்தில் குடல்கள் சரிந்தும் இறந்து கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் இது குறித்து வைப்பு கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதில் மர்ம விலங்குகள் கடித்ததில் 23 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது தெரியவந்தது. மேலும் அங்கு வந்த மருத்துவர் கவிதா இரண்டு ஆடுகளை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து பின்னர் செம்மறி ஆடுகளை அதே பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி புதைத்தனர்.

    செய்யாறு அருகே உள்ள தண்டரை கிராமம், யாதவர் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 31), லாரி டிரைவர்.

    நரசிம்மன் தாயார் மல்லிகா. வீட்டின் அருகே கொட்டகை வைத்து 40 ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளை நேற்று மதியம் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மாலையில் பட்டியில் அடைத்தார்.

    இரவு 2 மணி அளவில் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது 5 வெறிநாய்கள் கடித்து குதறின. உரிமையாளர் வந்தவுடன் நாய்கள் ஓடி விட்டன.

    ஆட்டுப்பட்டியில் இருந்த 13 ஆடுகள் இறந்து கிடந்தன. ஏற்கனவே ஒரு வாரத்துக்கு முன்பு அதே தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் 7 ஆட்டுக்குட்டிகளை நாய்கள் கடித்து குதறியது குறிப்பிடத்தக்கது

    • போக்சோவில் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    கலசபாக்கம்:

    கலசபாக்கத்தை அடுத்த வீரளூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். ஒருவர், பள்ளி மாணவியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று கல்லூரி மாணவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் பள்ளி மாணவியிடம் சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளனர். மேலும் மாண வியை கேலியும், கிண்டலும் செய்துள்ளனர்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடலாடி போலீ சில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து, 3 பேரையும் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் அறிவிப்பால் பரபரப்பு
    • ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் இனம்காரியந்தல் பகுதியில் சுங்கச்சாவடி கட்டப்பட்டு வாகனங்களுக்கு வசூல் செய்யப்பட்டு வருகின்றது.

    இதற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனை மீறி சுங்கச்சாவடியில் தற்போது வசூல் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை நகரப் பகுதி ஒட்டியும் மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடியை அகற்ற வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களிடையே எதிர்ப்பு இருந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இனம்காரியந்தல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி அருகே 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • புளியம்பழம் பறித்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிளியாப் பட்டு சேரியந்தல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 44) தொழிலாளி. இவர், நேற்று திருவண்ணாமலை- அவலூர்பேட்டை சாலையில் உள்ள புளியமரத்தில் ஏறி புளியம்பழம் உலுக்கி கொண்டிருந்தார்.

    அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு ப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூரில் நேற்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வான்முகில் மெட்ரிக் பள்ளி மாணவிகள் பொதுமக்கள் இடையே பெண்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலம் போளூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் தொடங்கி சிந்தாரப்பேட்டை தெரு வழியாக சென்று தாசில்தார் அலுவலகத்தை அடைந்தனர்.

    நிகழ்ச்சியில் 75-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    • புறா மற்றும் கலர் வண்ண பலூன்களை பறக்க விட்டனர்
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது

    போளூர்:

    போளூர் ஸ்ரீ ராமஜெயம் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. போளூர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஒலிம்பிக் தீபச்சுடரை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    போளூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி முக்கிய வீதி வழியாக சென்றது சாரண சாரணியர் மற்றும் பல மாணவ மாணவிகளின் அணி வகுப்போடு போளூர் ஸ்ரீ ராம ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலை அடைந்த தீபச்சுடரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீ ராம ஜெயம் கல்வி நிறுவனத்தின் சேர்மன் ஏழுமலையிடம் கொடுத்தனர்.

    பின்பு சிறப்பு விருந்தினர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து மாணவ, மாணவி களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுணர்வு சமத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்று புறா மற்றும் கலர் வண்ண பலூன்களை வானத்தை நோக்கி பறக்க விட்டார்.

    மேலும் அவர் பேசுகையில்:-

    மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டிலும் கலந்து கொள்ள வேண்டும் மாணவர்களாகிய நீங்கள் விளையாடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தை பின்பற்றலாம் எனக் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சி பிரமிடுகள் போன்றவை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பி.ஆர்த்தி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரவணகுமார் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜேஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஆண்டனி தாமஸ் நன்றி கூறினர்.

    • பள்ளிக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணா மலை (வயது 42). இவர்து மகள்கள் ஜெயஸ்ரீ (16) பவித்ரா, (14) இவர்கள் இருவரும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மகள்களை பள்ளிக்கு தினமும் மொபட்டில் அழைத்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக மொபட்டில் மகள்களை அமர வைத்து அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினி லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த நிகழ்ச்சி வலம்புரி விநாயகர் கோவில் அருகில் தொடங்கியது.
    • மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை மற்றும் திருவண்ணாமலை வன சரக அலுவலர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    திருவண்ணாமலை :

    உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை அம்மையப்பர் தொண்டு நிறுவனம் மற்றும் சிவனடியார் சாதுக்கள் சேவை மையம் சார்பில் திருவண்ணாமலையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் கல்பனா தன்னுடைய இருகண்களையும் துணியால் கட்டிக்கொண்டு 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மொபட் ஓட்டி சாதனை புரிந்தார்.

    அந்த சாதனை நிகழ்ச்சி திருவண்ணாமலை கிரிவல பாதை செங்கம் ரோடு சந்திப்பு வலம்புரி விநாயகர் கோவில் அருகில் தொடங்கியது. நிகழ்ச்சியை மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை மற்றும் திருவண்ணாமலை வன சரக அலுவலர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் கல்பனா கண்களை கட்டி கொண்டு கிரிவல பாதையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மொபட்டை ஓட்டி சென்று அபாய மண்டபம் அருகில் நிறைவு செய்தார்.

    நிகழ்ச்சியில் சிவனடியார் சாதுக்கள் சேவை மையத்தின் நிறுவனர் பரதேசி நாகராஜன், அறிவியல் ஆசிரியர் ஹயாத்பாஷா, துரைசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    • செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
    • மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை துறை கூட்டுறவு சங்க கூட்ட அரங்கில் விவசாய குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஊதியம் வேலைவாய்ப்பு திட்ட அலுவலர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மருசூர் அரையாளம் வடுகாசத்து உள்ளிட்ட கிராமத்திலிருந்து சுமார் 100-க்கும் விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் நெடுஞ்சாலை நகராட்சி பொதுப்பணி துறை வனத்துறை உள்ளிட்ட துறையை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    ஆனால் கூட்டம் தொடங்கிய முதல் துறை சார்ந்த அதிகாரிகள் மெத்தன போக்கில் பங்கேற்பது போல் தன்னுடைய செல்போனில் பேசி கொண்டும் சமூக வளைதலங்களான வாட்ஸ்-அப் முகநூல் உள்ளிட்டவைகளை பார்த்து கொண்டும் சக அதிகாரிகளுடன் பேசி பொழுதுபோக்கு அலட்சியமாக நடந்து கொண்டனர்.

    இதனை கண்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்து விவசாய குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் மெத்தன போக்கில் இருந்தால் விவசாயிகள் குறைகளை எப்படி தீர்க்க முடியும் எதற்காக இந்த கூட்டம் என்று புலம்பினார்கள்.

    இனிமேல் விவசாய குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடை செய்ய வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிகழழ்ச்சியில் தாசில்தார் ஜெகதீசன், வேளாண் உதவி இயக்குநர்கள் புஷ்பா, செல்லதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி சவிதா, விஜயலட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆய்வு
    • கற்களை சேதப்படுத்தாமல் தோண்ட அதிகாரிகளுக்கு உத்தரவு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா எலத்தூர் கிராமத்தில் கரை கண்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் சார்பில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மாசி மகத்தன்று தீர்த்தவாரி திருவிழா நடத்தப்பட்டு வந்தது. பின்னர் சில காரணத்தால் தீர்த்தவாரி நடத்துவது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கரைகண்டீஸ்வரரை ஆற்றுக்கு எடுத்து சென்று தீர்த்தவாரி நடத்துவதற்காக மந்தவெளி பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றில் பள்ளம் தோண்டினர்.

    அப்போது பள்ளம் தோண்ட முடியாத அளவுக்கு பெரிய, பெரிய கற்தூண்கள் காணப்பட்டது. இதனால் பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் போளூர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி, கலசபாக்கம் சரவணன், தாசில்தார் ராஜராஜேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

    இந்த கற்கள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டிருந்தால் ஆங்காங்கே சிதறி கிடந்திருக்கும். கோவில் கோபுரத்தின் மேல் மூடப்பட்டிருக்கும் தூண்களாகவே உள்ளது.

    மேலும் அந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் உள்ளது. எனவே கண்டிப்பாக இங்கு கோவில் இருந்து, நாளடைவில் புதைந்தி ருக்கலாம் என கருதப்பட்டது.

    எனவே 100 நாள் வேலை பணியாளர்களை கொண்டு முதலில் மணலை அப்புறப்படுத்தி உள்ளே இருக்கும் கற்களை சேதப்படுத்தாமல் அதுபற்றி தெரிந்து கொண்ட பிறகு பொக்லைன் எந்திரம் வைத்து மற்ற பணிகளை தொடங்கலாம் என்று அதிகாரிகளிடம், எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து எலத்தூர் ஊராட்சியை சேர்ந்த 100 நாள் பணியாளர்களை கொண்டு ஆற்றில் கோவில் புதைந்துள்ளதாக கூறப்படும் இடத்தில் பள்ளம் தோண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    • கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்தது
    • உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட குலால்பாடி கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு கலசப்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் பேசினார்.

    ஒன்றிய செயலாளர்கள் பொய்யாமொழி, ஏ.கே.மூர்த்தி, ரமேஷ், நகர செயலாளர் ராதா உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×