என் மலர்
திருவண்ணாமலை
- மருத்துவர்கள் ஆலோசனைப்படி உறவினர்கள் சம்மதம் வழங்கினர்
- கண்ணமங்கலத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதுப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா, தனது மகள்கள் லத்திகா (13),கோபிகா (10) ஆகியோர் படிப்புக்காக திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட சத்யா சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சத்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.இதனால் அவரது உடல் உறுப்புகளை மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவரது உறவினர்கள் தானமாக வழங்கினர்.
அவரது சத்யாவின் உடல் கண்ணமங்கலம் கொண்டு வந்து நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
- கணவர் 2-வது திருமணம் செய்ததால் விரக்தி
- உதவி கலெக்டர் விசாரணை
ஆரணி:
ஆரணி கொசப்பாளையம் குங்குலியர் தெருவை சேர்ந்த வர் கன்ராயன் என்கிற சந் தோஷ் (வயது 25).
இவர், அதே பகுதியை சேர்ந்த பர மேஸ்வரி (20) என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 6 மாதத்தில் தர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கன்ராயன், செய்யாறு தாலுகா பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துள்ளார். இதனைய டுத்து போலீசார் கன்ராயனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் விரக்தியில் இருந்த பரமேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் சப்- இன்ஸ்பெக் டர் ரகு வழக் குப்பதிவு செய்தார். தற்கொலை செய்து கொண்ட பர மேஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டு களே ஆவதால் ஆரணி உதவி கலெக்டர் தன லட்சுமிமேல் விசாரணை நடத்தி வருகிறார்.
- பண்ணை தோட்டத்திற்குள் மாடு புகுந்ததால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் அருகில் உள்ள உண்மையாள்புரம் கிராமத்தில் பண்ணை உள்ளது. இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கன்னியப்பன் இவரது மனைவி அஞ்சலி ஆகியோர் பண்ணையை பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.
தோட்டத்திற்கு அருகில் காமாட்சி என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவரது மாடு பண்ணை தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட அஞ்சலி மாட்டை துரத்தியதாக தெரிகிறது.
இதனை கண்ட காமாட்சி ஏன் என் மாட்டை துரத்துகிறாய் என்று அஞ்சலி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த காமாட்சி கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை அஞ்சலி மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் அஞ்சலி தீக்காயம் அடைந்து சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து காமாட்சியை தேடி வருகின்றனர்.
- சாத்தனூர் அணையை தூர்வார நிதி ஒதுக்கப்படும்
- பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது சாத்தனூா் அணையின் நீர்மட்டம் 118.55 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிரவலப்படி அணையின் தற்போதைய கொள்ளளவு 7220 மில்லியன் கன அடியாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சாத்தனூா் அணையில் இருந்து மாா்ச் முதல் வாரத்தில் விவசாய பாசனத்திற்க்காக இடது மற்றும் வலது புற கால்வாய்களின் வழியே தண்ணீா் திறந்து விடப்படும்.அதன் படி விவசாய பாசனத்திற்கு சாத்தனூா் அணையில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் இடது மற்றும் அது பல கால்வாய்களில் தண்ணீரை திறந்து வைத்தார். அவர் கூறுகையில்:-
இந்த நிதியாண்டில் சாத்தனூர் அணையை தூர்வார பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.
கலெக்டர் முருகேஷ், திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
விவசாய பாசனத்திற்க்காக தொடந்து 90 நாட்கள் இடது புற கால்வாயில் 350 கன அடி தண்ணீரும் மற்றும் வலது புற கால்வாயில் 220 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் திருவண்ணாமலை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்தனர்.
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அருகே கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் கன் னியம்மாள் (வயது 57). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மாலை வீடு திரும் பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 17 பவுன் தங்க நகை மற்றும் ரூ.33 ஆயிரத்தை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கன்னியம்மாள் கீழ்க்கொடுங்காலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- மாசி மகம் திருவிழா நடந்தது
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அருகே உள்ள ஆத்துரை, கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், (வயது 38). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்தூரை, கிராமத்தில் மாசி மகம் திருவிழா நடந்துள்ளது.
இதற்காக பாண்டியன், பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து திருவிழா நடத்தியுள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த சீனு (57). என்பவர் பாண்டியனிடம், திருவிழா வரவு செலவு கணக்குகள் குறித்து கேட்டுள்ளார். பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், சீனுவை, தாக்கியுள்ளார். காயமடைந்த சீனு, திருவண்ணாமலை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, பின்னர் இது குறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வழக்கு பதிவு செய்து பாண்டியனை, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- கிராம மக்கள் மகிழ்ச்சி
- 3 மாதங்களுக்கு பிறகு திரும்பி சென்றுவிடும் என்கின்றனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், வேடந்தவாடி கிராமத்தில் பறவைகள் குவிந்து வருவதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இயற்கையான சூழல், தட்பவெப்ப நிலை, உணவு உள்ளிட்ட காலநிலைக்கு ஏற்ப ஏதுவாக இருக்கும் இடங்களை தேடி பல்வேறு நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் வருகை தொடர்கிறது.
இதன்மூலம் பறவைகளின் இனப்பெருக்கம் நிகழ்கிறது. பறவைகள் சரணாலயம் என்றால் வேடந்தாங்கல் என கூறப்பட்டு வந்த நிலையில், திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே வேடந்தவாடி கிராமமும் வேடந்தாங்கலாக உருவெடுத்துள்ளது.
இந்த கிராமத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. ஏரியின் நடுவே மரங்கள் உள்ளன. இயற்கையான சூழல் இருப்பதால் கடந்த சில வாரங்களாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்துபறவைகளின் வருகை அதிகரித்துள்ளன.
கூட்டம், கூட்டமாக வரும் பறவைகளை, கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, எங்கள் கிராமத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நீர்காகம், அரிவாள் மூக்கன், கூழைக்கடா, நீர் மத்தி, நாரை என 10 - க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த பறவைகள் வந்துள்ளன. பறவைகள் கூட்டமாக கூடுவதற்கு ஏற்ற கிராமமாக, எங்கள் கிராமம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்கள் கிராமத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலையானது பறவைகளை கவர்ந்துள்ளன. இனப்பெருக்கத்துக்காக பறவைகள் வருவது மகிழ்ச்சியாக உள்ளன. 3 மாதங்களுக்கு பிறகு திரும்பி சென்றுவிடும் என்கின்றனர்.
காலையில் இரை தேடி செல்லும் பறவைகள், மாலையில் திரும்பி விடுகிறது. பறவைகள் வருவது, இதுவே முதன்முறை. பறவைகள் எழுப்பும் ஒசையை கேட்கும்போது, மனதிற்கு மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் உள்ளது என்றனர். பறவைகளை காண சுற்றுப் புற பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் வந்து செல்கின்றனர் என்றனர்.
- நிலங்களின் ஆவணங்கள், வரைபடங்கள் சோதனை
- ஏராளமானோர் பங்கேற்றனர்
செங்கம்:
செங்கம்அருகே அமைய உள்ள புறவழிச் சாலை நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி நேற்று ஆய்வு செய்தார். செங்கம் அருகே உள்ள மண்மலை பகுதியில் புறவழி சாலை அமைய உள்ளது.
இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது புறவழிச் சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களின் ஆவணங்கள் மற்றும் வரைபடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, சங்கம் வட்டாட்சியர் முனுசாமி உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏழுமலை, நகர செயலாளர் அன்பழகன் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.
- முருகனுக்கும் ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- குடும்ப பிரச்சனையால் ஜெயந்தி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் ஜெயந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி சாவடி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). போளூர் அரசு ஆண்கள் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி ஜெயந்தி (50), இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர்.
முருகனுக்கும் ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் குடும்ப பிரச்சனையால் ஜெயந்தி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் ஜெயந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலையில் முருகன் கண்விழித்தார். அவர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி ஜெயந்தியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கினார். இதில் ஜெயந்தி துடிதுடித்து இறந்தார்.
இதனையடுத்து முருகன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தார்.
இது சம்பந்தமாக தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சரணடைந்துள்ள முருகனிடம் கடலாடி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
- போக்சோவில் கைது
- திருவண்ணாமலை சிறப்பு கோர்ட்டு உத்தரவு
திருவண்ணாமலை:
காஞ்சீபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் திருப்பூக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 24), கார் டிரைவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வந்தவாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து ஜெயசூர்யாவை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்கு தொடர்பான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
10 ஆண்டு சிறை இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜெயசூர்யாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயசூர்யாவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- ராணிப்பேட்டையை சேர்ந்தவர்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா குருமுடி தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 63), சமையல் மாஸ்டர். இவரது மனைவி அல்லி. இவர்களுக்கு மகள்கள் உள்ளனர்.
சுந்தரமூர்த்தி 10 பேருடன் மினி வேனில் திருவண்ணாமலையில் சமையல் வேலைக்கு சென்றார். வேலை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் வேனில் வீடு திரும்பினர்.
கஸ்தம்பாடி அருகே வரும் போது வேகத்தடையில் வேன் ஏறி இறங்கிய போது வேனில் இருந்து சுந்தரமூர்த்தி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த களம்பூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுந்தரமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் வழங்கினர்
- அமிர்தி கிராம நிர்வாக அலுவலர் மரணம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அமிர்தி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த புருஷோத்தமன்(47) என்பவர் கடந்த ஜனவரி மாதம் இறந்துவிட்டார்.
இதையடுத்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் நிதி உதவிக்கான காசோலையை அனந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் புருஷோத்தமன் மனைவி மாலதி (45) என்பவரிடம், மாநில கிராம நிர்வாக அலுவலர் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ் நேரில் சென்று வழங்கினார்.
அப்போது புருஷோத்தமன் மகள் பவித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் மகாலிங்கம், மயிலரசன், நித்யானந்தம் உடனிருந்தனர்.






