ஊர் திருவிழா வரவு செலவு கணக்கு கேட்டவருக்கு அடி உதை

போலீசார் விசாரணை மாசி மகம் திருவிழா நடந்தது
ஊர் திருவிழா வரவு செலவு கணக்கு கேட்டவருக்கு அடி உதை
Published on

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு, அருகே உள்ள ஆத்துரை, கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், (வயது 38). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்தூரை, கிராமத்தில் மாசி மகம் திருவிழா நடந்துள்ளது.

இதற்காக பாண்டியன், பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து திருவிழா நடத்தியுள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த சீனு (57). என்பவர் பாண்டியனிடம், திருவிழா வரவு செலவு கணக்குகள் குறித்து கேட்டுள்ளார். பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், சீனுவை, தாக்கியுள்ளார். காயமடைந்த சீனு, திருவண்ணாமலை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, பின்னர் இது குறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வழக்கு பதிவு செய்து பாண்டியனை, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com