என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய காட்சி.
கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்தினருக்கு நிதி உதவி
- அதிகாரிகள் வழங்கினர்
- அமிர்தி கிராம நிர்வாக அலுவலர் மரணம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அமிர்தி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த புருஷோத்தமன்(47) என்பவர் கடந்த ஜனவரி மாதம் இறந்துவிட்டார்.
இதையடுத்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் நிதி உதவிக்கான காசோலையை அனந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் புருஷோத்தமன் மனைவி மாலதி (45) என்பவரிடம், மாநில கிராம நிர்வாக அலுவலர் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ் நேரில் சென்று வழங்கினார்.
அப்போது புருஷோத்தமன் மகள் பவித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் மகாலிங்கம், மயிலரசன், நித்யானந்தம் உடனிருந்தனர்.
Next Story






