என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறவழிச்சாலை ஆய்வு"

    • நிலங்களின் ஆவணங்கள், வரைபடங்கள் சோதனை
    • ஏராளமானோர் பங்கேற்றனர்

    செங்கம்:

    செங்கம்அருகே அமைய உள்ள புறவழிச் சாலை நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி நேற்று ஆய்வு செய்தார். செங்கம் அருகே உள்ள மண்மலை பகுதியில் புறவழி சாலை அமைய உள்ளது.

    இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது புறவழிச் சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களின் ஆவணங்கள் மற்றும் வரைபடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, சங்கம் வட்டாட்சியர் முனுசாமி உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏழுமலை, நகர செயலாளர் அன்பழகன் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.

    ×