என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
- கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்தது
- உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
செங்கம்:
செங்கம் அருகே உள்ள கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட குலால்பாடி கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கலசப்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.
இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் பேசினார்.
ஒன்றிய செயலாளர்கள் பொய்யாமொழி, ஏ.கே.மூர்த்தி, ரமேஷ், நகர செயலாளர் ராதா உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.






