என் மலர்
திருவள்ளூர்
- திருமுல்லைவாயில் முகமது அகில் என்பவரது மோட்டார் சைக்கிள் கடந்த 5-ந்தேதி திருடு போனது.
- 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
திருநின்றவூர்:
திருமுல்லைவாயில், முகமது அகில் என்பவரது மோட்டார் சைக்கிள் கடந்த 5-ந்தேதி திருடு போனது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை செய்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது பூந்தமல்லியை அடுத்த காடுவெட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் பாபு (19) மற்றும் வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த கோபி (22) என்பது தெரிந்தது.
அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் கடந்த மாதம் 19-ந்தேதி தனியார் திருமண மண்டபத்தில் பட்டா கத்தியுடன் தங்கியிருந்த 5 பேரை மணவாளநகர் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய திருநின்றவூர், ஜோசப் என்ற தேவகுமார் (35), புட்லூர் பகுதியை சேர்ந்த மோகன்பிரபு (23), மப்பேடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த டில்லிபாபு, புது இருளஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அவினாசி (19), நயப்பாக்கம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இந்த 5 பேரையும் மணவாளநகர் போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ரவுடிகள் மணிகண்டன் தேவகுமார் ஆகிய இருவரும் பல்வேறு வழக்குகளில் ஏற்கனவே சிறை சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மணவாளநகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் ரவுடிகள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் ரவுடிகள் மணிகண்டன், தேவகுமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை மணவாளநகர் போலீசார் புழல் சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கனார்.
- திருவள்ளூர் அருகே டாஸ்மாக் அதிகாரிக்கு மிரட்டல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் டாஸ்மாக் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மாவட்ட மேலாளராக கமலக் கண்ணன் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவர் பணியில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் திடீரென கமலக்கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் மேஜையின் மேல் இருந்த கோப்புகளை தரையில் வீசி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் நெற்பயிரின் பாதிப்பு குறித்து வயல்வெளிக்கு சென்று ஆய்வு.
- வேரின் வளர்ச்சி தடைபட்டும், நெற் பயிர் காய்ந்தும் வருகின்றன.
பொன்னேரி:
மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் உள்ள மெதுர், சிறுலபாக்கம், குமரன்சேரி அனுப்பம்பட்டு,சிறுவாக்கம் கோளூர்,வேலூர், தத்தை மஞ்சி, சிறுவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால் வயலில் தேங்கி உள்ள தண்ணீரில் அதிகஅளவு பச்சை பாசி படர்ந்து வருகிறது. இதனால் வேரின் வளர்ச்சி தடைபட்டும், நெற் பயிர் காய்ந்தும் வருகின்றன.
இந்த பச்சை பாசியால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி குமார் மற்றும் அதிகாரிகள் நெற்பயிரின் பாதிப்பு குறித்து வயல்வெளிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது டில்லி குமார், விவசாயிகளிடம் கூறும்போது, ஏக்கருக்கு 2 கிலோ காப்பர் சல்பேட் உரத்திணை 10 கிலோ மணலுடன் சேர்த்து சீராக தூவினால் பச்சை பாசி வளர்ச்சி தடைப்பட்டு பயிர் சீராக செழித்து வளரும். இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
- பொன்னேரி, மீஞ்சூர் நகரப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறைய வாய்ப்பு உள்ளது.
- புதிய சாலை திட்டப் பணிகளை 2025, ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
பொன்னேரி:
எண்ணுார் துறைமுகம் மற்றும் அத்திப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், சென்னை நகரப் பகுதிக்குள் நுழையும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வர்த்தக வாகனங்களும், குறிப்பிட்ட நேரத்திற்குள் எண்ணுார் துறை முகத்திற்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை எல்லை சாலை திட்டம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது எண்ணுார் துறைமுகத்தில் தொடங்கி, தச்சூர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்பதுார், சிங்கபெருமாள்கோவில், மாமல்லபுரத்தில் முடியும் வகையில், புதிய சாலைத் திட்டம், 132.8 கி மீ., தூரத்திற்கு, 5 பிரிவுகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து, சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூரில் முடியும் வகையில், 25.40 கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
ஜப்பான் நிறுவனத்தின் நிதியுதவியுடன், மாநில சாலை மேம்பாட்டு நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. முதல் பிரிவு சாலை, எண்ணுார் துறைமுகத்தில் தொடங்கி, காட்டுப்பள்ளி, கல்பாக்கம், நாலுார், வன்னிப்பாக்கம், நெடுவரம்பாக்கம், பஞ்செட்டி ஆகிய கிராமங்கள் வழியாக சென்று, தச்சூரில் முடிகிறது. இதற்காக, 605 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
தற்போது செயல்பாட்டில் உள்ள, மீஞ்சூர்- வண்டலூர் வெளி வட்ட சாலையில் இருந்து, இணைப்பு சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, சென்னை எல்லை சாலையுடன் இணைக்கப்பட உள்ளது.
மீஞ்சூர்- அனுப்பம்பட்டு இடையே, ரெயில்வே மேம்பாலம் ஒன்றும், மீஞ்சூர்- காட்டூர், மீஞ்சூர் -பொன்னேரி உட்பட 7 இடங்களில் மேம்பாலங்களும் கட்டப்பட உள்ளன.
வாயலுார், அக்கரம்பேடு, மேட்டுப்பாளையம், ஆமூர், பஞ்சட்டி ஆகிய இடங்களில், சிறிய மேம்பாலங்களும் கட்டப்பட இருக்கிறது.
மேலும் சாலையின் இருபுறமும் மழை நீர் கால்வாய்கள், மைய தடுப்புகள் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் எல்லைகளை வரையறுக்கும் வகையில், சிவப்பு கொடி கட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை அமையும் இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, நிலங்களை சமன்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது, பாலங்கள் அமையும் இடங்களில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
புதிய சாலை திட்டப் பணிகளை 2025, ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம், சென்னை நகரில் மட்டுமின்றி, பொன்னேரி, மீஞ்சூர் நகரப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த சாலைக்காக, 1,266 பேரிடம் இருந்து, 605 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த சாலைப் பணி திட்ட மிட்டப்படி, 3 ஆண்டிற்குள் முடிக்கப்படும். இதன் மூலம், மீஞ்சூர், அத்திப்பட்டு, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். அடுத்தடுத்த பிரிவுகளின் பணிகள் முடியும்போது, சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்" என்றார்.
- மடாவீதியின் அகலம் குறுகிய அளவில் உள்ளதால் தேரில் வீதியுலா வருவதில் சிரமம் உள்ளது.
- மாடவீதியை விரிவாக்கம் செய்ய இந்து அறநிலைத்துறை முடிவு செய்து உள்ளது.
திருத்தணியில் மலை மேல் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டப்பட்டு ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இதில் பூக்கடை, தேங்காய் விற்பனை கடை, சிற்றுண்டி கடை, தேனீர் கடை, குளிர்பான கடைகள் உள்பட பல கடைகள் நடத்தி வருகின்றனர்.
மலைக்கோவில் மேல் உள்ள மாடவீதியில் கோவில் நிர்வாகம் சார்பில் மலர் அங்காடி, விற்பனை நிலையம், தேங்காய் கடை, குளிர்பான கடை ஆகியவை ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் வரும் வருவாய் கோவில் கணக்கில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்நிலையில் மலைக்கோவில் மாடவீதியில் உள்ள ஐந்து கடைகள் கடந்த 1-ந் தேதி நடைப்பெற்ற இந்த ஆண்டிற்கான கோவில் பொது ஏலத்திற்கு அறிவிக்கவில்லை. இதுக்குறித்து கோவில் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, திருத்தணி முருகன் மலைக்கோவில் பக்தர்களின் நலனுக்காவும், நிர்வாக வசதிக்காவும் மலைமேல் பெருந்திட்ட வளாகம் அமைக்கபட உள்ளது.
மடாவீதியின் அகலம் குறுகிய அளவில் உள்ளதால் தேரில் வீதியுலா வருவதில் சிரமம் உள்ளது. எனவே மாடவீதியை விரிவாக்கம் செய்ய இந்து அறநிலைத்துறை முடிவு செய்து உள்ளது. இது குறித்து திட்ட அறிக்கைகளை தயார் செய்து இந்து அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபருக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் ஆணையரிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் நடைப்பெறும் எனவும் தெரிவித்தார்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியைஅடுத்த நசரத்பேட்டை, நடராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சதீஷ்(வயது17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இறுதி தேர்வு எழுதி இருந்தார்.
இந்த நிலையில் சதீஷ், தேர்வை சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி அவர் தனது நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டார். மேலும் தேர்வு முடிவில் குறைவான மதிப்பெண் வரும் என்று புலம்பி வந்தார்.
இதற்கிடையே நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற சதீஷ் பின்னர் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தபோது மகன் சதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது சதீஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு வீட்டில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், 10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக வரும். எனது படிப்பிற்காக மேற்கொண்டு செலவு செய்ய வேண்டாம். எனவே தற்கொலை செய்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அரியன் வாயல் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். மீஞ்சூரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை இவர் வழக்கம்போல் கடைக்கு சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு தாய் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நடராஜன் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 சவரன் நகை, ரூ.52 ஆயிரம் ரொக்கம், டி.வி. ஆகியவற்றை பட்டப்பகலில் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- செம்பரம்பாக்கம் ஏரியில் 3,075 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 3,080 மி.கன அடியும் தண்ணீர் உள்ளது.
- பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. தற்போது ஏரியில் 1,048 மி.கன அடி தண்ணீர் உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரிகளில் 7 ஆயிரத்து 776 மில்லியன் கன அடி (77 டி.எம்.சி) தண்ணீர் உள்ளது.
கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த மாதம் முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதையடுத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும், பூண்டி ஏரியில் கூடுதல் கிருஷ்ணா தண்ணீரை சேமித்து வைக்கும் வகையிலும் பூண்டி ஏரியில் இருந்து தொடர்ந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு 3 டி.எம்.சி.யை தாண்டி உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் 3,075 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 3,080 மி.கன அடியும் தண்ணீர் உள்ளது. கிருஷ்ணா நீர் தொடர்ந்து திறக்கப்படும் என்பதால் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடைகாலத்தில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் 3 டி.எம்.சி.யை தாண்டி தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்றும், குடிநீர் தட்டுப்பாடு வராது எனவும், குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. தற்போது ஏரியில் 1,048 மி.கன அடி தண்ணீர் உள்ளது. 565 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி. இதில் 3,080 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 180 கன அடி தண்ணீர் வருகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கன அடி. இதில் 132 மி.கன அடி தண்ணீர் இருக்கிறது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 3,075 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 460 கன அடி தண்ணீர் வருகிறது. 176 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில் 441 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
- திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
- வசந்த உற்சவம் விழா வருகிற 10-ந் தேதி மாலை நிறைவு பெறுகிறது.
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு இன்று மாலை திருக்குளம் அருகே உள்ள பங்களா தோப்பில் வசந்த விழா தொடங்குகிறது.
மாலை 6 மணிக்கு கேடயத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி திருக்குளம் வீதிகள் வழியாக சென்று வசந்த மண்டபத்துக்குள் மேளதாளம் முழங்க எழுந்தருள்வார்.
அங்கு வேத மந்திரங்களுடன் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 4 வீதிகள் வழியாக சுவாமி உலா வந்து கோவிலுக்குள் சென்றடைவார்.
வசந்த உற்சவம் விழா வருகிற 10-ந் தேதி மாலை நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
- தேர்வாய் கண்டிகை கிராமத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ஏனம்பாக்கம் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுமிர். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது தந்தையும் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில், நேற்று மாலை இவரது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து விட்டு உறவினர்கள் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் உறவினர்கள் புறப்பட்டு சென்றனர். அவர்களை வழியனுப்ப வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்தனர்.
அப்போது திடீரென வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தீ மளமளவென குடிசையில் பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து தேர்வாய் கண்டிகை கிராமத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
எனினும் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றிய போது சுமிர், அவரது மனைவி உள்பட 5 பேரும் வெளியே நின்றதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
- கன்னிராஜபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார்.
- தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 1-ந் தேதி அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார். இந்த நிலையில் நாகலிங்கத்தின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாகலிங்கத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும் பூஜை அறையில் வைத்திருந்த ரூ. 7 லட்சத்து 66 ஆயிரத்தை கொள்ளையர்கள் கவனிக்காததால் அது தப்பியது. இதுகுறித்து நாகலிங்கம் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.






