என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூர் அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.52 ஆயிரம்-நகை கொள்ளை
    X

    மீஞ்சூர் அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.52 ஆயிரம்-நகை கொள்ளை

    குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அரியன் வாயல் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். மீஞ்சூரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை இவர் வழக்கம்போல் கடைக்கு சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு தாய் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் நடராஜன் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 சவரன் நகை, ரூ.52 ஆயிரம் ரொக்கம், டி.வி. ஆகியவற்றை பட்டப்பகலில் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×