என் மலர்
திருவள்ளூர்
- அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ்.
- அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தப்பி ஓடிய டிரைவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மகன் வெற்றிச் செல்வன் (26). கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிளில் வானகரம் நோக்கி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வெற்றிச் செல்வனின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்த வெற்றிச் செல்வன் கண்டெய்னர் லாரியின் பின்பக்க சக்க ரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் ஏராளமானோர் திரண்டதால் விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து வெற்றிச் செல்வன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தப்பி ஓடிய டிரைவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பழவேற்காடு மீனவர்களின் வேலை வாய்ப்புக்காக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பயிற்சி மையம் 10 வருடமாக கட்டி முடிக்கப்பட்டு மூடியே கிடக்கிறது.
- மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர் சுமித்ரா குமார் தெரிவித்தார்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. தலைவர் ரவி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
கடந்த ஒரு வருடமாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் ஊராட்சியில் எந்த பணியும் செய்ய முடியவில்லை. ஓட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
பழவேற்காடு மீனவர்களின் வேலை வாய்ப்புக்காக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பயிற்சி மையம் 10 வருடமாக கட்டி முடிக்கப்பட்டு மூடியே கிடக்கிறது. இதில் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர் சுமித்ரா குமார் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து தலைவர் ரவி கூறும்போது, "நிதி வந்தவுடன் ஒதுக்கீடு செய்வதாகவும் பயிற்சி மையம் கட்டிடம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிப்பதாகவும்" தெரிவித்தார்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள், கிருஷ்ணபிரியா வினோத், பானு பிரசாத், தமிம்சா, வெற்றி ராஜேஷ் கலந்து கொண்டனர்.
- முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.
- 23-ந்தேதி முதல் 25ந்தேதி வரை தினமும் மாலையில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று அஸ்வினியுடன் தொடங்கியது. விழா வருகிற 25-ந்தேதி வரை விமரிசையாக நடைபெற உள்ளது.
ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் மற்றும் பிற மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்பக் காவடி, மயில் காவடி எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதனால் திருத்தணி நகரமே விழாக்கோலமாக காணப்பட்டது. கோவில் முழுவதும் பக்தர்களாக நிரம்பி இருந்தனர்.
விழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.
பக்தர்கள் முருகபெருமானுக்கு தலைமுடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவணபொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
குற்றசெயல்களை தடுக்க முக்கிய இடங்களில் குற்றவாளிகளை கண்டறிய அதி நவீன 30 சி.சி.டி.வி கேமராக்கள் உள்பட 127 கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் பொது சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் , 5 அவசரக் கால வாகனங்கள், 108 ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டு உள்ளது.
மின்சார வாரியம் மூலம் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி சார்பாக 400-க்கும் மேற்பட்டவர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர். தடையில்லா குடிநீர் வழங்க குடிநீர் தொட்டிகளும், 60 தற்காலிக நவீன கழிவறைகளும், எல்.ஈ.டி விளக்குகளும் பொருத்தப்படும். தீயணைப்புதுறை சார்பாக தீயணைப்பு ஊர்த்திகள் மற்றும் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக, அரக்கோணத்தில் இருந்தும் திருத்தணிக்கு இன்று முதல் 25-ந் தேதி வரை 5 நாட்களுக்கு 3 சிறப்பு ரெயில்களும், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்து திருத்தணிக்கு 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள் நாளை முதல் 25-ந் தேதி வரையில் 4 நாட்களிலும் இரவும், பகலும் இயக்கப்பட உள்ளது.
பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகர எல்லைகளில் உள்ள சென்னை- திருப்பதி சாலை, அரக்கோணம் - திருத்தணி சாலை, சித்தூர்- திருத்தணி சாலை போன்ற பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விழாவையொட்டி கோவிலில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மேற்பார்வையில் திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணித் தலைமையில் திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்
ஆடிக்கிருத்திகை திருவிழாவின் முக்கிய விழாவாக 23-ந்தேதி முதல் 25ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் தினமும் மாலையில் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் மேற்பார்வையில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, தக்கார் ஜெயப்பிரியா செய்து வருகின்றனர்.
- ஐ.டி.ஐ. மாணவர் பிரவீன் ஆசைவார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்று இருப்பது தெரியவந்தது.
- பிரவீனை கைது செய்த போலீசார், திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
திருமுல்லைவாயல் மணிகண்டபுரத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 15-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் திருமுல்லைவாயல் வ.உ.சி., நகரை சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் பிரவீன்(19) ஆசைவார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்று இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மாணவியை விட்டுவிட்டு பிரவீன் தப்பி சென்று விட்டார். மாணவியை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது பிரவீன் ஆசைவார்த்தை கூறி, அழைத்து சென்று பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதற்கிடையே திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த பிரவீனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
- பள்ளியில் உடன்படிக்கும் 2 மாணவர்கள் மாணவியிடம் நட்பாக பழகி வந்தனர்.
- மாணவியின் தாய் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
திருவள்ளூர்:
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூரில் 10-ம் வகுப்பு மாணவியை உடன் படிக்கும் மாணவர்கள் ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் அதே பள்ளியில் உடன்படிக்கும் வேப்பம்பட்டை சேர்ந்த 2 மாணவர்களுடன் நட்பாக பழகி வந்தார்.
இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த மாணவியை, மாணவர்கள் இருவரும் நைசாக பேசி வேப்பம்பட்டுக்கு அழைத்து சென்றனர். நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் மாணவியும் அங்கு சென்றார்.
அங்கு மாணவர்களில் ஒருவரது வீட்டுக்கு மாணவி சென்றபோது வீட்டில் யாரும் இல்லை. அப்போது மாணவர்கள் இருவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று தெரிவித்து மாணவியை அனுப்பி வைத்து விட்டனர்.
இதற்கிடையே மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி அவரது பெற்றோர் விசாரித்தபோதுதான் உடன்படிக்கும் மாணவர்கள் மகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மாணவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அம்பத்தூர் மண்டல வருவாய் துறை அதிகாரிகள் சொத்து வரியை செலுத்தக் கோரி பலமுறை பள்ளி நிர்வாகத்திற்கு அறிவிப்பு கடிதம் வழங்கி அறிவுறுத்தினர்.
- எனினும் தொடர்ந்து சொத்து வரியை செலுத்தாமல் இருந்தனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் அடுத்த மாதனாங்குப்பம் பகுதியில் சதீஷ் பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.9 லட்சத்து 73 ஆயிரத்து 43 சொத்து வரி பாக்கி உள்ளது.
அம்பத்தூர் மண்டல வருவாய் துறை அதிகாரிகள் சொத்து வரியை செலுத்தக் கோரி பலமுறை பள்ளி நிர்வாகத்திற்கு அறிவிப்பு கடிதம் வழங்கி அறிவுறுத்தினர். எனினும் தொடர்ந்து சொத்து வரியை செலுத்தாமல் இருந்தனர்.
இதையடுத்து அம்பத்தூர் மண்டல அலுவலர் ராஜேஸ்வரி உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் லோகநாதன், வரி மதிப்பீட்டாளர்கள் புருஷோத்தமன், கேசவன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள் இன்று பள்ளிக்கு வந்தனர். அவர்கள் சொத்து வரி செலுத்தாத பள்ளிக்கு சீல் வைப்பதாக தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி பள்ளியின் முதல்வர் அறை மற்றும் அலுவலகத்திற்கு மட்டும் பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயலில் மாநகராட்சி அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பும் செய்தனர்.
- சென்னை சென்ட்ரல் அல்லது அரக்கோணத்திற்கு சென்று தான் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்ய முடியும்.
- திருவள்ளூரில் ஏழு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்த தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் புறநகர் ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.
மாவட்ட தலைநகராக திகழும் திருவள்ளூரில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வியாபாரம் சம்பந்தமாக, டெல்லி, மும்பை, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்படாததால் அவர்கள் வெளியூர் செல்ல, சென்னை சென்ட்ரல் அல்லது அரக்கோணத்திற்கு சென்று தான் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்ய முடியும். இதனால் கால விரயம், அலைச்சல் வீண் செலவு ஏற்படுகிறது.
எனவே சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக இயக்கப்படும், கோவை எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், கோயம்புத்துார் இன்டர்சிட் எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், மும்பை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மற்றும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் ரெயில் பயணிகள் கூட்டமைப்பினர் நீண்ட நாட்களாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி சென்னை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் ரெயில் பயணியர் சங்கத்தினருடன் ரெயில்வே துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் மற்றும் ரெயில் பயணியர் உபயோகிப்பாளர் குழு உறுப்பினருமான ஜெயபால்ராஜ் கலந்து கொண்டு திருவள்ளூரில் ஏழு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.
ஆனால் இந்த கோரிக்கையை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தற்போது ஏராளமான புறநகர் மின்சார ரெயில்கள் நின்று செல்கிறது. இதனால் அங்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல ரெயில்வே போர்டு விதிகள் அனுமதிக்கவில்லை என தெரிவித்து உள்ளனர். ரெயில்வே நிர்வாகத்தின் இந்த நிராகரிப்பால் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ரெயில் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவள்ளூரில் நின்று செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.
- கடம்பத்தூர் அருகே உள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி.
- திருப்பாச்சூர் பஜார் வீதியைச் சேர்ந்தவர் ஜெகன்மோகன்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(24). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு அவர் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென மகாலட்சுமியை வழிமறித்து மிரட்டினர். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பாச்சூர் பஜார் வீதியைச் சேர்ந்தவர் ஜெகன்மோகன். இவரது மனைவி சைலஜா (42). இவர் தனியார் பள்ளியில் படித்து வரும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென சைலஜா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துதப்பிச் சென்றனர்.
சோழவரம் அடுத்த அருமந்தை கிராமத்தில் பெட்டிகடை நடத்தி வருபவர் ரவி. கடைக்கு வந்த ஒருவர் திடீரென பட்டாக்கத்தியால் ரவியை மிரட்டி ரூ.8 ஆயிரத்தை பறித்து சென்றான்.
இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழுதிகைமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்நேக் பாபுவை கைது செய்தனர்.
- ஆடி கிருத்திகை திருவிழா நாளை தொடங்கி 25-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
- ஆடிக்கிருத்திகை விழா நடைபெறும் 5 நாட்கள் முழுவதும் நடை திறந்து இருக்கும்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நாளை (21ந்தேதி) தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை 5 நாட்கள் விமரிசையாக நடக்கிறது.
விழா நாளை காலை அஸ்வினியுடன் தொடங்குகிறது. மறுநாள் (22-ந்தேதி) ஆடி பரணி, 23-ந்தேதி ஆடி கிருத்திகை விழா நடக்கிறது. அன்று இரவு முதல்நாள் தெப்ப விழா நடத்தப்படுகிறது. 24-ந்தேதி 2-ம் நாள் தெப்பமும் 25-ந்தேதி 3-ம் நாள் தெப்பமும் நடக்கிறது.
ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
பக்தர்கள் தலைமுடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவணபொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வசதியாக அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு நாளை (21-ந்தேதி) முதல் 25-ந்தேதி வரை 5 நாட்களுக்கு 3 சிறப்பு ரெயில்களும், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் திருத்தணிக்கு 600 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகர எல்லைகளில் உள்ள சென்னை-திருப்பதி சாலை, அரக்கோணம்-திருத்தணி சாலை, சித்தூர்-திருத்தணி சாலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மேற்பார்வையில் திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணித் தலைமையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத்திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மேற்பார்வையில் திருத்தணி கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, தக்கார் ஜெயப்பிரியா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் தரிசனத்துக்காக ஆடிக்கிருத்திகை விழா நடைபெறும் 5 நாட்கள் முழுவதும் நடை திறந்து இருக்கும். 24 மணி நேரமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் மனோகரன். அ.தி.மு.க. பிரமுகர். இவர் கடந்த மே மாதம் 15-ந் தேதி குருவி மேடு என்ற இடத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு இரவு குடும்பத்துடன் தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது லாரி ஒன்று திடீரென கார் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த மர்மகும்பல் ஊராட்சி தலைவர் மனோகரனை அவரது மனைவி, குழந்தைகள் கண் முன்னேயே சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இந்த கொலை வழக்கில் மீஞ்சூர் போலீசார் ஏற்கனவே சுந்தர பாண்டியன், பத்மநாபன், அரவிந்த் குமார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சாம்பல் கழிவுகளை லாரி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லும் பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற் கொண்டு வந்ததில் ஏற்பட்ட தொழில் போட்டியில் ஊராட்சி தலைவர் மனோகரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில் கொலைவழக்கில் கைதான சுந்தரபாண்டியன், பத்மநாபன் உள்பட 10 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற தினந்தோறும் பழவேற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் அதிக அளவில் வந்தனர்.
- ராஜேந்திரன் மருத்துவம் படிக்காமல் ஆஸ்பத்திரி நடத்தி சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட மருத்துவ ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது.
பொன்னேரி:
மீஞ்சூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது65). இவர் பழவேற்காடு கோட்டைத் தெருவில் பாபுராஜ் என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். மருத்துவ சிகிச்சைக்கு அவர் குறைந்த கட்டணம் வசூலித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் அவரது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற தினந்தோறும் பழவேற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் அதிக அளவில் வந்தனர்.
இந்த நிலையில் ராஜேந்திரன் மருத்துவம் படிக்காமல் ஆஸ்பத்திரி நடத்தி சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட மருத்துவ ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மருத்துவ அதிகாரிகள் ராஜேந்திரனின் ஆஸ்பத்திரிக்கு வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. சில ஆண்டுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணி செய்தபோது ஏற்பட்ட அனுபவத்தை வைத்து அவர் தனியாக ஆஸ்பத்திரி தொடங்கி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராஜேந்திரனை கைது செய்தனர்.
- வீட்டில் இருந்து வெளியே சென்ற கல்லூரி மாணவி திரும்பி வரவில்லை.
- கல்லூரி மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம். செல்வ விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் மாய் ஈஸ்வரி (18). கல்லூரி மாணவி.
கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






