என் மலர்
திருவள்ளூர்
- திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் சுரேஷ்குமார்.
- போலீசார் கடையில் சோதனை நடத்தியதில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 40). இவர் திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே குளிர்பான கடை நடத்தி வருகிறார். குளிர்பான கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கடையில் சோதனை நடத்தியதில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
- இந்த கோவிலில் பிரதானமான வழிபாடு வேப்பஞ்சேலை கட்டுவது.
- மொட்டை போட்டும், காது குத்தியும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி வார விழா 14 வாரங்கள் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு 9-வது வார விழா இன்று நடந்தது.
இதையொட்டி சுற்று வட்டாரப்பகுதி களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக கார் மற்றும் வேன்களில் வந்து குவிந்தனர்.
விழாவையொட்டி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஜோதி தரிசன வழிபாடு நடைபெற்றது. 2 மணி அளவில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த கோவிலில் பிரதானமான வழிபாடு வேப்பஞ்சேலை கட்டுவது. இன்று ஒரேநாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் வேப்பஞ்சேலை கட்டிக்கொண்டு கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
காலை 8 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. கார், வேன்களில் வந்தவர்கள் ஆடு மற்றும் கோழிகளை ஆற்றங்கரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெட்டி சமையல் செய்து படையலிட்டு அன்னதானம் வழங்கினார்கள்.
ஏராளமானவர்கள் மொட்டை போட்டும், காது குத்தியும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். காலை 6 மணி அளவில் அம்மன் புறப்பாடு நடந்தது. கடந்த 8 வாரங்களில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாக கோவில் நிர்வாக அதிகாரி பிரகாஷ் கூறினார்.
- பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 13-ந் தேதி காலை 6 மணி முதல் 15-ந் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும்.
மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள கீழ்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.
திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம் பகுதி மக்கள் 8144930901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மணலி பகுதி மக்கள் 8144930902 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மாதவரம் பகுதி மக்கள் 8144930903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பட்டேல் நகர், வியாசர்பாடி பகுதி மக்கள் 8144930904 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலக எண்களான 044-2845 1300, 044-4567 4567-லும் புகார் செய்யலாம்.
- செவ்வாய்பேட்டை போலீசார் ஆனந்தபாபு, வினோத்குமார், ரவி ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- செவ்வாப்பேட்டை போலீசார் 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் எதிரே செவ்வாய்பேட்டை போலீசார் ஆனந்தபாபு, வினோத்குமார், ரவி ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசிய அவர்கள் திடீரென போலீஸ்காரர்களை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் தண்ணீர் குளம் பகுதியைச் சேர்ந்த ஆதித்யன், ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பது தெரிய வந்தது. இதில் ஆதித்யன் ஆந்திர மாநில சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து செவ்வாப்பேட்டை போலீசார் 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் நரசம்பேட்டை பஸ் நிலையம் அருகே ஆர்.கே. பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்களிடம் 1¼ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சாவை ஆந்திர மாநிலம் ஓ.ஜி.குப்பம் என்ற இடத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வாங்கி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது39) சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த குணசேகர் (48), காஞ்சீபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியை சேர்ந்த கோவர்த்தன் (19) என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து திருத்தணி கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருத்தணி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
- மீஞ்சூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்ளன.
- திருப்பாலைவனம் பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றியத்தில் அடங்கிய பழவேற்காடு, திருப்பாலைவனம் பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பாலைவனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்த மத்திய குழு மழை நீர் சேகரிப்பு அமைவிடத்தை பார்வையிட்டு பள்ளி வளாகத்தில் மரச் செடிகள் நட்டனர். பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பு குறித்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் யாஸ்மி னிடம் கேட்டறிந்தனர்.
- திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.
- மணமகனின் தந்தை பாலசுப்பரமணியன் மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது59). இவரது மகனின் திருமணம் மணவாளநகர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.
திருமண நிகழ்ச்சிக்காக மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் மண்டபத்துக்கு வந்தனர். மணமகன் தனி அறையிலும், மணமகள் தனி அறையிலும் தங்க வைக்கப்பட்டனர். மணமகள் தான் தங்கி இருந்த அறையில் தனது 6 பவுன் தங்க டாலர் செயினை கழற்றி வைத்திருந்தார். மணமகள் அந்த அறையில் இல்லாத நேரத்தில் உறவுக்கார பெண் என்று கூறி பெண் ஒருவர் அந்த அறைக்கு சென்றார். அவர் மணமகள் கழற்றி வைத்தி ருந்த 6 பவுன் செயினை திருடிச் சென்று விட்டார். இதற்கிடையே மணமகள் நகையை சரி பார்த்த போது 6 பவுன் செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மணமகனின் தந்தை பாலசுப்பரமணியன் மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (56). விவசாயி. நேற்று திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவரது மகன் திருமணம் நடந்தது.
அப்போது ஒரு பெண் மணமகள் அறையில் புகுந்து 20 பவுன் நகையை திருடி சென்று விட்டார்.
- சித்ரா நேற்று காலை தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார்.
- கவரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை தெலுங்கு காலனி பகுதியை சேர்ந்தவர் சித்ரா (26). இவர் நேற்று காலை தனது குழந்தைகள் சஜித் (5), சனுஜா (3), ஆகியோருடன் தனது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் இதுவரை தாய் வீட்டுக்கு செல்லவில்லை. அவர் மாயமாகிவிட்டார்.
இதுகுறித்து கவரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- வாலிபர் தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
- மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர மரத்தில் மோதியது.
திருத்தணி:
ஆவடி நாகாளம்மன் நகர் விநாயகர் தெருவில் வசிப்பவர் குட்டீஸ் (வயது21). இன்று காலையில் ஆவடியில் இருந்து பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜுபேட்டை காலனியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
சிறு குமி என்ற இடத்தில் மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர மரத்தில் மோதியது. இதில் குட்டீஸ் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் அருகே 431 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.
- வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முக கவசம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட போலீஸ் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 394இருசக்கர வாகனங்கள், 10 மூன்று சக்கர வாகனங்கள், 26, 4 சக்கர வாகனங்கள், ஒரு ஆறு சக்கர வாகனத்தை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வருகிற 19, 20 மற்றும் 21 ஆகிய 3 நாட்களில் காலை 10 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் அருகே 431 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.
வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முக கவசம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். முன்வைப்பு கட்டண தொகையாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.1000, 3 சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.
அதற்கான டோக்கன் காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12 சதவீதம், 3 மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் உடனடியாக செலுத்தி விட வேண்டும். வாகனத்தின் விவரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் உரிமையாளர்கள் உரிமையாளருக்கான பதிவு சான்று (ஆர்.சி புத்தகம்) ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். பொது ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை தவறாமல் கொண்டு வர வேண்டும். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன்வைப்பு கட்டண தொகை ஏலத்தின் முடிவில் திருப்பி தரப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போலீஸ் விசாரணையில் பிடிப்பட்ட வாலிபர் திருவள்ளூர் அடுத்த புட்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நசுருதீன்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 600 குட்கா பாக்கெட்டுகள் 4 கிலோ அளவில் இருந்ததை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் ரகு, சுப்பிரமணி ஆகியோர் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த காக்களூர், காக்களூர் ஏரிக்கரை, பூங்கா நகர், ராமாபுரம் போன்ற பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசார் புட்லூர் ரெயில் நிலையம் அருகே ரோந்துப்பணியில் இருந்தபோது அங்கு இருந்த ஒரு கடையில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த ஒரு பெரிய பையுடன் போலீசார் வருவதை பார்த்தவுடன் ஓட்டம் பிடித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டிச்சென்று பிடித்து விசாரித்த போது அவர் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 600 குட்கா பாக்கெட்டுகள் 4 கிலோ அளவில் இருந்ததை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் விசாரணையில் பிடிப்பட்ட வாலிபர் திருவள்ளூர் அடுத்த புட்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நசுருதீன் (வயது 28) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.
- ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், காரும் சிக்கியது.
- அரிசி ஆலையின் உரிமையாளர் குறித்தும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பொன்னேரி:
சோழவரம் அடுத்த ஆங்காடு கிராமத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையிலான வருவாய் துறையினர் ஆங்காடு கிராமத்தில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள குடோனில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி பாலிஷ் செய்து வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக ஆந்திர பதிவு எண் கொண்ட லாரியில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து லாரியுடன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 100 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், காரும் சிக்கியது. இது தொடர்பாக அரிசி ஆலையில் வேலை பார்த்து வரும் வட மாநில தொழிலாளர்கள் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரிசி ஆலையின் உரிமையாளர் குறித்தும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆலையில் பதுக்கிய அரிசி மூட்டைகள் அனைத்தும் எடுத்த பின்னர் அரிசி ஆலைக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது வட்ட வழங்கல் அதிகாரி சண்முகசுந்தரம், தனிப்படை பிரிவு அதிகாரி குமார் உடன் இருந்தனர்






