என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே குட்கா விற்றவர் கைது
- போலீஸ் விசாரணையில் பிடிப்பட்ட வாலிபர் திருவள்ளூர் அடுத்த புட்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நசுருதீன்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 600 குட்கா பாக்கெட்டுகள் 4 கிலோ அளவில் இருந்ததை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் ரகு, சுப்பிரமணி ஆகியோர் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த காக்களூர், காக்களூர் ஏரிக்கரை, பூங்கா நகர், ராமாபுரம் போன்ற பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசார் புட்லூர் ரெயில் நிலையம் அருகே ரோந்துப்பணியில் இருந்தபோது அங்கு இருந்த ஒரு கடையில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த ஒரு பெரிய பையுடன் போலீசார் வருவதை பார்த்தவுடன் ஓட்டம் பிடித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டிச்சென்று பிடித்து விசாரித்த போது அவர் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 600 குட்கா பாக்கெட்டுகள் 4 கிலோ அளவில் இருந்ததை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் விசாரணையில் பிடிப்பட்ட வாலிபர் திருவள்ளூர் அடுத்த புட்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நசுருதீன் (வயது 28) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.






