என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிப்பட்டு அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் நரசம்பேட்டை பஸ் நிலையம் அருகே ஆர்.கே. பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்களிடம் 1¼ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சாவை ஆந்திர மாநிலம் ஓ.ஜி.குப்பம் என்ற இடத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வாங்கி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது39) சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த குணசேகர் (48), காஞ்சீபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியை சேர்ந்த கோவர்த்தன் (19) என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து திருத்தணி கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருத்தணி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.






