என் மலர்
திருவள்ளூர்
- திருமழிசை அடுத்த பிரயாம்பத்து பகுதியில் உள்ள குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருமழிசை அடுத்த பிரயாம்பத்து பகுதியில் உள்ள குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் யார்? எந்த பகுதிைய சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர்.
- 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மோப்பநாய் உதவியுடன் வெடுகுண்டு நிபுணர்கள் சோதனை.
பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் பயன்படுத்தும் போனுக்கு நேற்று முன்தினம் மர்ம நபர் வெடி குண்டு மிரட்டல் விடுத்து தகவல் அனுப்பி இருந்தார். அதில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர், இது குறித்து பள்ளி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர். நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களையும் சோதனை செய்து வெளியே நிறுத்தப்பட்டன.
வெடிகுண்டு சோதனையில் பள்ளி வளாகம் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில், அதே பள்ளியில் நேற்றிரவு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் இன்று 2வது நாளாக பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மோப்பநாய் உதவியுடன் வெடுகுண்டு நிபுணர்கள் பள்ளியில் மீண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார்.
- பொன்னேரி அடுத்த உப்பரபாளையம் பகுதியை சேர்ந்த சோபன் பாபு என்பவர் அதே ஆட்டோவில் ஏறினார்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பெரும்பேடு லிங்க பையன் பேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று காலை பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார். அப்போது பொன்னேரி அடுத்த உப்பரபாளையம் பகுதியை சேர்ந்த சோபன் பாபு (24) என்பவர் அதே ஆட்டோவில் ஏறினார்.
அவர் மாணவியிடம் பேச்சு கொடுத்தார். சிறிது நேரத்தில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சோபன்பாபு திடீரென மாணவியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்டோவில் இருந்தவர்கள் அலறினர்.
உடனே சோபன்பாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும் சோபன்பாபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மாணவியை கடத்தி சென்றதாக சோபன்பாபு மீது பொன்னேரி மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பழவேற்காடு பகுதியை சுற்றி 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
- மகளிர் வேளாண் நிலம் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டம் மீன்பிடி வலைகள், படகுகள் உள்ளிட்டவை வாங்க இளைஞர்களுக்கு ரூ.1 கோடியே 62 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
பழவேற்காடு பகுதியை சுற்றி 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. ஆதிதிராவிடர் பழங்குடியின மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக தாட்கோ மூலம் சுய வேலைவாய்ப்பு, மகளிர் மேம்பாட்டு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு பொருளாதார வளர்ச்சி திட்டம், மகளிர் வேளாண் நிலம் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டம் மீன்பிடி வலைகள், படகுகள் உள்ளிட்டவை வாங்க இளைஞர்களுக்கு ரூ.1 கோடியே 62 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது
சிறப்பு அழைப்பாளராக தாட்கோ சேர்மன் மதிவாணன், டி.ஜே.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ., தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி, மாவட்ட மேலாளர் இந்திரா, உதவியாளர் பிரபுஅருள்வேல்ஸ், சேர்மன் ரவி, நகரத் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் கவுன்சிலர் தமின்சா தலைவர் சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறுவாபுரி சிவன் கோவிலில் 6 வாரங்கள் வந்து வணங்கினால் வாழ்வில் ஆனந்தம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
- சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோவில் பிராகாரத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்றி உழவாரப்பணி செய்தனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் 6 வாரங்கள் வந்து வணங்கினால் வாழ்வில் ஆனந்தம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பழமைவாய்ந்த இந்த கோயிலுக்கு 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த நிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் சென்னை இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி சங்கம் ஆகியவை இணைந்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோவில் பிராகாரத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்றி உழவாரப்பணி செய்தனர். இதில், கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், சின்னம்பேடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சேகர், வடக்குநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிதாஸ், பி.சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அம்பத்தூர்:
பாடி, தேவர் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது.
இதுகுறித்து கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட பாடி கலைவாணர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற சிவா மற்றும் மேற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது.
- வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியில் பயன்படுத்தும் போனுக்கு மர்ம நபர் வெடி குண்டு மிரட்டல் விடுத்து தகவல் அனுப்பி இருந்தார். அதில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது.
இதனை அதிர்ச்சி அடைந்த ஊழியர் இது குறித்து பள்ளி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவள்ளூரில் இருந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர்.
இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களையும் சோதனை செய்து வெளியே நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு சோதனையில் பள்ளி வளாகம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.
- பொது வழிப்பாதையை மறித்து தீண்டாமை சுவர் எழுப்பி உள்ளனர்.
- ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டையில் 75-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் சுமார் 50 வருடங்களாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் வந்து செல்லும் பொது வழிப்பாதையை மறித்து தீண்டாமை சுவர் எழுப்பி உள்ளனர். இந்த சுவற்றை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மலை வாழ்மக்கள் அந்த பாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தீண்டாமை சுவரை அகற்ற கோரியும், இங்குள்ள பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோபால், வட்ட செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எழிலரசன், செயலாளர் கன்னியப்பன், மாவட்ட துணை செயலாளர் பத்மா, தீண்டாமை ஒழிப்பு சங்க பூண்டி ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான பழங்குடி இன பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். அவர்கள் தீண்டாமை சுவரை அகற்ற கோரி கோஷங்கள் எழுப்பினர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை நகரம் தமிழக எல்லையில் அமைந்துள்ளது.
- ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பஸ்கள் மாதவரத்தில் இருந்து திருப்பதி, கடப்பா போன்ற பகுதிகளுக்கும் சென்று வருகின்றன.
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை நகரம் தமிழக எல்லையில் அமைந்துள்ளது. இந்தப் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்கறி, மளிகை, துணி, சிமெண்ட், இரும்பு, மருந்து கடைகள் மற்றும் பெட்டிகடைகள் உள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் சென்னையில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் பொருட்களை கொள்முதல் செய்கின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான லாரிகள் தினந்தோறும் ஊத்துக்கோட்டைக்கு வந்து செல்கின்றன.ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு டெப்போவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஊத்துக்கோட்டைக்கு வந்து செல்கின்றன.
மேலும் ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பஸ்கள் மாதவரத்தில் இருந்து திருப்பதி, கடப்பா போன்ற பகுதிகளுக்கும் சென்று வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்து ஏராளமான லாரிகள் சவுடுமணல், கிராவல் லோடுகளுடன் வந்து செல்வதால் ஊத்துக்கோட்டை நகரம் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் வாகன நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் ஊத்துக்கோட்டையில் இருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்சுகளும் நெரிசலில் சிக்கி கொள்வதால் நோயாளிகள் சிலர் உயிர் இழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் உற்பத்தியாகும் ராக்கெட் உதிரி பாகங்கள் கனரக வாகனங்கள் மூலம் ஊத்துகோட்டை வழியாக ஸ்ரீஹரி கோட்டாவுக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்த வாகனங்களும் ஊத்துக்கோட்டையில் வாகன நெரிசலில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு ஊத்துக்கோட்டை யில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வெளிப்புற சாலை அமைக்க வேண்டும் அல்லது அம்பேத்கார் நகரில் இந்து அண்ணாநகர் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்கவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனன் லாரி உரிமையாளர்.
- மல்லிகார்ஜுனன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்கவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனன் லாரி உரிமையாளர். இவருக்கு சொந்தமான லாரி கடந்த 9-ந் தேதி அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மறுநாள் காலை பார்த்தபோது லாரியில் இருந்த 2 பேட்டரிகளை மர்மநபர் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மல்லிகார்ஜுனன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப் பதிவு செய்து இதுதொடர்பாக பெரியபாளையம் அருகே உள்ள தாமரைபாக்கம் கூட்டு சாலையை சேர்ந்த சரத்குமார் (வயது 25) என்பவரை கைது செய்தார்.
- தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.
- அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊத்துக்கோட்டை:
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை கொட்டி வருகிறது. ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழைக்கு 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர், செஞ்சி அகரம், லட்சிவாக்கம், சூளமேனி, பாலவாக்கம், தாராட்சி, பால்ரெட்டி கண்டிகை பகுதிகளில் கடந்த 15 நாட்களாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டியது.
இந்த மழைக்கு பேரன்டூர், செஞ்சி அகரம், லட்சிவாக்கம் பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிர் மூழ்கியதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர். அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பிடிபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர்.
- விசாரணையில் அவர், பொன்னேரி அடுத்த என்.ஜி.ஓ.நகரை சேர்ந்த விக்கி என்பது தெரிந்தது.
பொன்னேரி:
பொன்னேரி பஸ் நிலையத்தில் இருந்து பழவேற்காடு, மீஞ்சூர், செங்குன்றம் கும்மிடிப்பூண்டி, அண்ணாமலை சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்வதால் பஸ்நிலைய பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
இந்த நிலையில் பொன்னேரி தேரடி தெருவை சேர்ந்த யுவராஜ், கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்பு குளத்தைச் சேர்ந்த சரவணன், பொன்னேரி அடுத்த வைரங்குப்பத்தை சேர்ந்த பூவரசன் ஆகியோர் பொன்னேரி பஸ்நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென 3 பேரையும் வழிமறித்து கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி பணம் - செல்போனை கேட்டனர். இதனை அவர்கள் கண்டித்து பணம் இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பூவரசனுக்கு தலை மற்றும் முதுகில் பலத்த வெட்டு விழுந்தது. இதேபோல் யுவராஜ், சரவணன் ஆகியோருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரிடம் இருந்தும் பணம், செல்போனை மர்ம கும்பல் பறித்துக் கொண்டனர்.
கொள்ளை கும்பல் அரிவாளுடன் சுற்றுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே இதுபற்றி அறிந்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடனே கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களில் போதையில் கத்தியுடன் தள்ளாடிக் கொண்டிருந்த ஒருவனை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், பொன்னேரி அடுத்த என்.ஜி.ஓ.நகரை சேர்ந்த விக்கி என்பது தெரிந்தது. அவன் கொடுத்த தகவலின் படி கூட்டாளியான தமிழ் செல்வன் என்பவனையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், ரூ.3500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இரவு நேரங்களில் பஸ் நிலையத்தில் அமர்ந்து சமூக விரோதிகள் மதுகுடித்து அடிக்கடி ரகளையில் ஈடுபடுகிறார்கள். இதனை கண்டிக்கும பொது மக்களை மிரட்டுகின்றனர். ஆனால் இதனை போலீசார் கண்டு கொள்வதில்லை. போலீஸ் ரோந்து வாகனங்கள் வருவதில்லை. இதனால் பஸ்நிலைய பகுதியில் அடிக்கடி பணம் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






