என் மலர்
நீங்கள் தேடியது "மாணவியை கொல்ல வாலிபர்"
- பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார்.
- பொன்னேரி அடுத்த உப்பரபாளையம் பகுதியை சேர்ந்த சோபன் பாபு என்பவர் அதே ஆட்டோவில் ஏறினார்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பெரும்பேடு லிங்க பையன் பேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று காலை பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார். அப்போது பொன்னேரி அடுத்த உப்பரபாளையம் பகுதியை சேர்ந்த சோபன் பாபு (24) என்பவர் அதே ஆட்டோவில் ஏறினார்.
அவர் மாணவியிடம் பேச்சு கொடுத்தார். சிறிது நேரத்தில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சோபன்பாபு திடீரென மாணவியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்டோவில் இருந்தவர்கள் அலறினர்.
உடனே சோபன்பாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும் சோபன்பாபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மாணவியை கடத்தி சென்றதாக சோபன்பாபு மீது பொன்னேரி மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.






