என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்செட்டியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் சோதனை
    X

    பஞ்செட்டியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் சோதனை

    • பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது.
    • வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளியில் பயன்படுத்தும் போனுக்கு மர்ம நபர் வெடி குண்டு மிரட்டல் விடுத்து தகவல் அனுப்பி இருந்தார். அதில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது.

    இதனை அதிர்ச்சி அடைந்த ஊழியர் இது குறித்து பள்ளி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவள்ளூரில் இருந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர்.

    இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களையும் சோதனை செய்து வெளியே நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு சோதனையில் பள்ளி வளாகம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×