என் மலர்
திருவள்ளூர்
- திருவள்ளூரை அடுத்த ஈக்காடு வி.கே.என்.நகர் முதல் தெருவில் வசிப்பவர் தமிழரசன்.
- போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த ஈக்காடு வி.கே.என்.நகர் முதல் தெருவில் வசிப்பவர் தமிழரசன். இவர் தனது வீட்டு முன்பு 3 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்தார். நேற்று நள்ளிரவு 3 மோட்டார் சைக்கிள்களுக்கும் திடீரென தீப்பற்றி எரிந்தன. சத்தம் கேட்டு தமிழரசன் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள்கள் பற்றி எரிவதை கண்டு அதிர்ச்ச அடைந்தார். சிறிது நேரத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள்களும் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கூலித்தொழிலாளிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.
- தொழிலாளி கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த விடையூர் புதிய காலனியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது38). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் அன்பரசு மன வருத்தத்தில் இருந்தார்.
கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அவர் வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அன்பரசுவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஹரிபாபு ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- பலத்த காயம் அடைந்த ஹரிபாபுவை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கம்மார்பாளையத்தை சேர்ந்தவர் ஹரி பாபு. வக்கீலான இவர், அ.தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக இருந்தார். இவர் பொன்னேரி அடுத்த மனோபுரம் கோயில் திருவிழாவில் கூத்து பார்ப்பதற்காக கம்மார்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஹரிபாபு ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஹரிபாபுவை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஹரிபாபு இறந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி அடுத்த பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (40). கூலித்தொழிலாளி. இவர் மகன் தனசேகரனை பொன்னேரியில் உள்ள கல்லூரியில் சேர்க்க சென்றார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு சாலை குன்னமஞ்சேரி அருகில் வந்தபோது, ஏலியம்பேட்டில் இருந்து பொன்னேரி நோக்கி வந்த டிராக்டர் திடீரென மோட்டார் சைக்கிள்மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாஸ்கரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இந்துக்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இ
- ஆ.ராசா மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
பொன்னேரி:
தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா கடந்த 6-ந் தேதி வேப்பேரி, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் இந்துக்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கு பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஆ.ராசா மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மேலும் இது தொடர்பாக பா.ஜனதா சார்பில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக் குரிய வகையில் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜனதா சார்பில் மீஞ்சூர், சோழவரம் போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு உள்ளது. அதில், 'இந்துக்களின் மனம் புண்படும் வகையிலும் இந்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் சர்ச்சைக்குரிய வகையில் ஆ.ராசா பேசி உள்ளார். இந்துமத நம்பிக்கையை இழிவுபடுத்தி வரும் ஆ.ராசா மீது சட்டப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.
- சிவபதி மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மினி வேன் டிரைவர் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சிவபதி (வயது 34). டிரைவர். இன்று அதிகாலை அவர் மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருவள்ளூர் அடுத்த கோவிந்தமேடு பஞ்சாயத்து அலுவலகம் எதிரே சென்றபோது எதிரே வேகமாக வந்த மினிவேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மினி வேன் டிரைவர் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
- 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி
- மாவட்ட கலெக்டர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு
சென்னை:
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில், இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அண்மையில் தமிழக அரசு கூறியிருந்தது. மாணவர்கள் பல்வேறு மன அழுத்தங்களில் இருப்பதால், விடுமுறை நாட்களில் எந்த காரணம் கொண்டும் வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரிவாக தெரிவித்திருந்தார்.
ஆனால் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு மாறாக, தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்றும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தலாம் என்றும் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அனுமதி வழங்கியிருக்கிறார்.
மாவட்ட கலெக்டர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்படட முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். இதுபோன்ற அறிவிப்பு மற்ற மாவட்டங்களிலும் வெளியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, இனி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்துவதற்கான பணிகளில் தனியார் பள்ளிகள் தீவிரம் காட்டும்.
- சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களை இந்த பழைய விமானங்கள், பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்தன.
- விமானங்கள் புறப்படும் போதும், தரை இறங்கும்போதும், பறவைகளால் ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு, என்.இ.பி.சி., கிங்பிஷர், ஜெட் ஏா்வேஸ், டெக்கான் ஏா்லைன்ஸ், பேராமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களை சோ்ந்த விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது அந்த விமான நிறுவனங்கள் செயல்பாட்டில் இல்லை. செயல்பாட்டில் இல்லாத டெக்கான் ஏா்லைன்ஸ், பேராமவுண்ட் விமான நிறுவனங்களின் விமானங்கள் எதுவும் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படவில்லை.
ஆனால் என்.இ.பி.சி., கிங்பிஷா், ஜெட் ஏா்வேஸ் ஆகிய விமான நிறுவனங்களின் பயன்படுத்தப்படாத 12 விமானங்கள், சென்னை விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதில், 4 என்.இ.பி.சி., விமானங்கள், ஒருஜெட் ஏர்வேஸ் விமானம் ஆகிய விமானங்கள், கடந்த 2021-ம் ஆண்டில், முறைப்படி தமிழ்நாடு அரசின் வருவாய்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு, அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடந்தன.
இந்த விமானங்களை உடைத்து அப்புறப்படுத்தும்போது சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தப்படாத நிலையில் பணிகள் நடந்தன.
கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 விமானங்களில், 2 விமானங்களை அப்புறப்படுத்தும் பணி, சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
அதில், பயன்படுத்தும் நிலையில் இருக்கும், என்ஜின்கள் உட்பட, தொழில் நுட்ப கருவிகள், முக்கியமான பாகங்கள் தனியே பிரித்து எடுத்து வைக்கப்பட்டுள்ளன. இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது, மீதி உள்ள பழைய விமானங்களையும் அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை அந்த விமான நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.
அதன்படி முதல் கட்ட மாக நிறுத்தப்பட்டு உள்ள பழைய விமானங்களின் மதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இதன் மதிப்புகள் கணக்கிட்ட பின்பு, அவற்றை அப்புறப்படுத்தும் பணி தொடங்கும் என்று தெரிகிறது. விமானங்களின் என்ஜின்கள் மற்றும் முக்கிய உதிரி பாகங்கள் பயன்படுத்தக்கூடிய நல்ல நிலையில் இருக்கும் பாகங்கள், அனைத்தும் தனியாக எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட இருக்கிறது.
இந்த பழைய விமானங்களை அப்புறப்படுத்துவதன் மூலமாக, 2012-ம் ஆண்டு முதல், தற்போது வரையிலான விமான நிறுத்தக்கட்டணம், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இதனால், சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் வருவாய் மொத்தமாக கிடைக்கும்.
இது தவிர, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களை இந்த பழைய விமானங்கள், பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்தன. இப்போது இந்த விமானங்கள் அகற்றப்படுவதால், மற்ற விமானங்களை நிறுத்துவதற்கு கூடுதல் இட வசதிகள் கிடைக்கும்.
இந்த பழைய விமானங்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக தொடா்ந்து நிறுத்தப்பட்டிருந்ததால் அதில் பல்வேறு வகையான பறவைகள், அந்த விமானங்களுக்குள் கூடுகட்டி வசித்து இனவிருத்தி செய்து வந்தன.
இதனால் விமானங்கள் புறப்படும் போதும், தரை இறங்கும்போதும், பறவைகளால் ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது. தற்போது இந்த விமானங்கள் அகற்றப்பட உள்ளதால் இனிமேல் பறவைகளால் விமானங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பொன்பாடி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- ராஜூ, தேனியை சேர்ந்த சுரேஷ் பாண்டியன் ஆகியோர் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
திருத்தணியை அடுத்த பொன்பாடி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் இருந்து வந்த பஸ்சில் சோதனை செய்தபோது அதில் இருந்த விருதுநகரை சேர்ந்த முருகானந்தம், திருப்பூரை சேர்ந்த ராஜூ, தேனியை சேர்ந்த சுரேஷ் பாண்டியன் ஆகியோர் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- சித்ரா திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆவடி:
போரூரை சேர்ந்தவர் சேதுபதி. இவரது மனைவி சித்ரா (வயது 25). இவர்களுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது சித்ரா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் சித்ராவின் 10 பவுன் நகைகளை கணவர் சேதுபதி அடகு வைத்ததாக தெரிகிறது.
அதனை மீட்டு தரும்படி சித்ரா கணவரிடம் கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சித்ரா, ஆவடி, சிரஞ்சீவி நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தார். மனவேதனையில் இருந்த சித்ரா திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நம்ம ஊரு சூப்பர் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சுகாதார திட்டம் குறித்து கேட்டறியப்பட்டது.
- கிராமங்களில் முழுவதுமாக குப்பைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியத்தில் மொத்தம் 55 ஊராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் அனைத்து ஊராட்சிகளின் செயல்பாடுகள் குறித்து ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களிடையே ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள் குறித்தும் முடிக்கப்பட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சுகாதார திட்டம் குறித்து கேட்டறியப்பட்டது.
அப்போது கிராமங்களில் சுகாதாரதிட்டங்கள் முழு வீச்சில் முடிக்கப்பட வேண்டும் எனவும் வீடுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து எடுக்கப்பட வேண்டும், கிராமங்களில் முழுவதுமாக குப்பைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட செயற்பொறியாளர் ராஜவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன், ஒன்றிய பொறியாளர் யாஸ்மின் மற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
- 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணிபுரிந்த 178 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீண்டும் பணி வழங்ககோரி கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தனியார் தொழிற்சாலை முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணன் உள்ளிட்ட கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது சிலர் தொழிற்சாலை ஊழியர்களை தாக்கியதாக தெரிகிறது. இதில் 2 ஊழியர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ கண்ணன், தினேஷ்குமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சரவணன், உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- ராமச்சந்திரன் பி.யூ.சி மட்டுமே படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக சுகாதாரத்துறையினருக்கு புகார்கள் வந்தன.
- அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் இருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல், நேரு பஜாரில் "பாரத் கிளினிக்" என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தவர் ராமச்சந்திரன் (வயது71).
இவர் பி.யூ.சி மட்டுமே படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக சுகாதாரத்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) இளங்கோவன் தலைமையில் மருத்துவக் குழுவினர் ராமச்சந்தி ரனின் ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ராமச்சந்திரன் முறையான மருத்துவம் ஏதும் படிக்காமல் பி.யூ.சி. மட்டும் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் இருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வெங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி டாக்டர் ராமச்சந்திரனை கைது செய்தனர். அவர் கடந்த 15 ஆண்டுக்கு மேல் அவர் மருத்துவம் பார்த்து வந்து உள்ளார். இதனால் அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.






